24 special

அன்று காயத்ரி இன்று அங்கித் திவாரி.... அடுத்த ஆபத்து புரியாமல் கை வைத்த திமுக அரசு.....

ankit tiwari , enforcement
ankit tiwari , enforcement

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்ய சென்ற பொழுது செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் அதிகாரிகள் மீது அத்துமீறியதும் அவர்களிடம் கைவரிசையை காட்டியதும் பரபரப்பாக பேசப்பட்டது.வருமானவரித்துறை அதிகாரிகள், மத்திய அரசு அதிகாரிகள் அவர்களிடம் அத்துமீறுவது மேலும் கைகலப்பில் இருப்பது போன்ற செயல்களில் ஈடுபட்ட காரணத்தினால் சிஆர்பிஎப் உதவியுடன் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த நிலையில் வருமானவரித்துறை அதிகாரிகள் தரப்பில் இருந்த காயத்ரி மீது செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் கை வைத்த காரணத்தினால் இன்று வரை நீதிமன்றத்தில் ஜாமீன் கூட வாங்க முடியாத அளவிற்கு வழக்கு நடந்து வருகிறது குறிப்பிடத்தக்கது. 


இந்த நிலையில் இது போன்று ஒரு சம்பவம் இனிமேல் நடக்க கூடாது என வருமான வரித்துறை தீவிரமாக அந்த வழக்கில் ஆர்வம் காட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது, இது இப்படி இருக்கும்போது தற்போது அங்கித் திவாரி என்ற அமலாக்கத்துறை அதிகாரி மீதான நடவடிக்கை வேறு கோணத்தில் பார்க்கப்படுகிறது. மதுரை துணை மண்டல அமலாக்கத்துறை அலுவலகத்தில் அலுவலராக பணியாற்றி வந்த அங்கித் திவாரி திண்டுக்கல்லை சேர்ந்த அரசு டாக்டர் சுரேஷ் பாபுவுடன் ஒரு வழக்கில் நீங்கள் சிக்கவிருக்கிறீர்கள், அதில் இருந்து உங்களை விடுவிக்க வேண்டும் என்றால் 3 கோடி ரூபாய் பணம் வேண்டும் என பேரம் பேசி இறுதியில் 20 லட்சம் ரூபாய் முன்பணத்தை கேட்டு மிரட்டியதாக தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக அங்கித் திவாரி தனது அதிகாரத்தை பயன்படுத்தி அரசு ஊழியரை மிரட்டி பணம் பெற்றுள்ளார் என கூறிய நடவடிக்கை எடுத்துள்ளது லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறை. இதுபோல் அவர் வேறு எந்தெந்த வழக்குகளில் லஞ்சம் பெற்றுள்ளார் எனவும் விசாரணை நடந்து வருகிறது, இது மட்டுமல்லாமல் அங்கித் திவாரியின் வீட்டில் தீவிர சோதனையில் ஈடுபட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தபால் தந்தி நகர் பகுதியில் உள்ள அமலாக்கத்துறை மண்டல அலுவலகத்திலும் நேற்று மாலை 6 மணிக்கு சோதனையை தொடங்கினர் பின்னர் விடிய விடிய சோதனை நடத்தப்பட்டு அந்த சோதனை இன்று காலை 7 மணிக்கு தான் முடிவுக்கு வந்தது. 

இது ஒரு புறம் இருக்கையில் மறுபுறம் அமலாக்கத்துறை அதிகாரிகள் அலுவலகத்தில் இருக்கக்கூடிய முக்கிய ஆவணங்களை பாதுகாப்பதற்காக சி ஆர் பி எப் வீரர்களை உதவிக்கு அழைத்த போது அங்கிருந்து காவல் துறை அதிகாரி சிஆர்பிஎஃப் வீரர்களை உள்ளே அனுமதிக்கவில்லை எனவும் அதற்கு பதில் இந்தோ தீபக் படையினர் பாதுகாப்பு பணியில் உள்ளதாக தகவல் தெரிவித்ததாகவும் கள நிலவரங்கள் கூறுகின்றன. தற்பொழுது அமலாக்கத்துறை மீது லஞ்ச ஒழிப்புத்துறை எடுத்த நடவடிக்கைதான் விறுவிறுப்பாக பேசப்பட்டு வருகிறது, இந்த நிலையில் இது குறித்து அரசியல் விமர்சகர்கள் கூறும்பொழுது இவர்கள் 'அமலாக்கத்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பதில் எந்த தவறும் கிடையாது, அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் வாங்கினால் அவர் மீது நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும் என்பது சரிதான்.

ஆனால் இவர்கள் தேவையில்லாமல் அமலாக்க துறையை பகைத்துக்கொள்ளும்படி தேவை இல்லாமல் அவர்களை சீண்டி வருகிறார்கள், ஏற்கனவே வருமானவரித்துறை அதிகாரிகள் மீது செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் எப்படி எங்கள் வீட்டில் சோதனை நடத்த வரலாம் என கூறி அத்துமீறிய காரணத்தினால் தான் இன்று வரை செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறை அதிக வேகம் காட்டி வருகிறது. இப்பொழுது அமலாக்கத்துறை அதிகாரி விவகாரத்திலேயே இவர்கள் ஒரு சிறு வழக்கு சிக்கிவிட்டது என்பதற்காக அவர்கள் அலுவலகத்தில் சோதனை செய்வோம், சென்னையில் உள்ள அலுவலகத்தில் சோதனை செய்வோம் என இறங்கி தேவையில்லாமல் அமலாக்கத் துறையை சீண்டி வருவது இவர்களுக்கு வினையாக முடியும் ஆழம் தெரியாமல் கால் வைத்து விட்டார்கள் இனி ஒட்டுமொத்தமாக விழுங்கி விடும் அமலாக்கத்துறை' என கூறி வருகின்றனர். இருந்தாலும் இது குறித்து அடுத்து என்ன நடக்குமோ என அரசியல் ரீதியாக பல்வேறு எதிர்பார்ப்புகள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.