24 special

இருக்கிற பிரச்சினை பத்தாது என திமுகவை வம்பு இழுத்துவிட்ட தமிழச்சி தங்கபாண்டியன்....

mk stalin, thamizhachi thangapandiyan
mk stalin, thamizhachi thangapandiyan

தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் கடந்த மூன்று தினங்களாக மழை பெய்து வருகிறது, குறிப்பாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது! சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக ஆங்காங்கே சென்னையில் தண்ணீர் தேங்கியுள்ளது. குறிப்பாக சென்னையில் பல இடங்களில் மழை நீர் தேங்கி நின்று வடியாமல் இருப்பதும் சென்னை மக்களை கோபப்படுத்தியுள்ளது. நான்காயிரம் கோடி ரூபாய்க்கு சென்னையில் மழை நீர் வடிகால் பணிகள் பராமரிக்கப்பட்டுள்ளன என கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆளும் திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது, குறிப்பாக நகர்புற உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் பேசும்பொழுது இந்த ஆண்டு மழை நீர் வடிகால் பணிகள் அனைத்தும் சிறப்பான முறையில் நடைபெற்றுள்ளது, ஏற்கனவே 95 சதவீத பணிகள் முடிவடைந்துவிட்டன வெறும் ஐந்து சதவிகித பணிகள் தான் மீதம் இருக்கிறது எனக்கு கூறியது குறிப்பிடத்தக்கது. 


ஆனாலும் சென்னையின் பல இடங்களில் மழை நீர் வடியாமல் இருந்ததும் அதன் காரணமாக மக்கள் அதிருப்தியில் இருந்ததும் குறிப்பிடத்தக்கது, இவ்வளவு ஏன் முதல்வர் ஸ்டாலினின் சொந்த தொகுதியான கொளத்தூரிலேயே மழை நீர் வடியாமல் ஆங்காங்கே தேங்கி நின்றாலும் அதன் காரணமாக மக்கள் அனைவரும் அதிர்ச்சியாக இருந்ததும் வீடியோக்களாக வெளிவந்தது. இந்த நிலையில் திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் வேறு திமுகவை வம்பில் இழுத்து விட்டுள்ளார். சமூக வலைதளத்தில் எக்ஸ் பதிவில் ஒருவர் சென்னையில் மழைநீர் வெள்ள நிலையை குறிப்பிட்டு கிண்டலாக பதிவு செய்ததற்கு தமிழச்சி தங்கபாண்டியன் போட்ட பதில் தான் தற்பொழுது திமுகவை மேலும் சிக்கலில் இழுத்து வைத்துள்ளது.

சுரஜித் குமார் என்கின்ற நெட்டிசன் தனது எக்ஸ் வலைதள கணக்கில் ஒரு பதிவிட்டு இருந்தார். அதில் 'நிலத்தடி நீரை உயர்த்தும் பொருட்டு மழை தண்ணீரை தேங்க வைக்கும் நான்காயிரம் கோடி பேக்கேஜிற்கு தேவையான ரங்கராஜபுரத்தை உள்ளடக்கிய தி.நகர் சட்டமன்ற தொகுதிகள் எம்.எல்.ஏ.கருணாநிதி மற்றும் தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியின் எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோருக்கு நன்றி! சென்னையை மீட்ட திமுக!' என மழை பெய்து வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் அவதி என்கின்ற செய்தியை பதிவிட்டு குறிப்பிட்டிருந்தார். திமுக இந்த மழை காலத்திற்கு எதுவுமே செய்யவில்லை என்ன கிண்டலாக குறிப்பிட்டு இருந்தது கூட தெரியாமல் தமிழச்சி தங்கபாண்டியன் அதற்கும் கும்பிடு போட்டு குறியீடு பதிந்து பதிவிட்டிருந்தது தற்பொழுது இணையதளத்தில் வைரல் ஆகிறது.

இது போல் தான் சில நாட்களுக்கு முன்பு திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் ஒரு நேர்காணல் பேட்டியின் போது வரலாற்று சிறப்புமிக்க ஆளுமை ஒருவருடன் உணவு சாப்பிட விரும்புகிறீர்கள் என்றால் அது யாருடன் இருக்கும் என்ற கேள்விக்கு விடுதலைப் புலிகள் தலைவர் பெயரை குறிப்பிட்டு இருந்தார். ஏன் அவரிடம்? அவரிடம் என்ன கேட்பீர்கள் என்ற கேள்விக்கு முள்ளிவாய்ப்பாலுக்கு மன்னிப்பு கூறுவேன் என கூறியுள்ளார். இப்படி திமுக காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தான் முள்ளிவாய்க்காலில் ஒரு இனமே அழிக்கப்பட்டது அதற்காக மன்னிப்பு கோருகிறேன் என்கின்ற ரீதியில் தமிழச்சி சொன்னது திமுகவிற்கு பின்னடைவை ஏற்படுத்தியது. 

ஏற்கனவே ஈழத் தமிழர்களின் எதிரி திமுக என பரப்புரைகள் பல செய்யப்பட்டு வரும் நிலையில் இப்படி தமிழச்சி தங்கபாண்டியன் கூறியதை வைத்து அரசியல் ரீதியாக சலசலப்பு எழுந்தது, இப்படி இருக்கும் பொழுது தற்பொழுது சென்னையில் மழை நீர் வடிகால் பணிகளை திமுக முறையாக செய்யவில்லை என்ற கருத்தை மக்கள் கூறிவரும் வேளையில் அது கூட தெரியாமல் திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் எக்ஸ் வலைதளத்தில் இப்படி பதிவிட்டது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. தென் சென்னையின் எம்பியாக இருந்து கொண்டு இதுவரை எதுவும் உருப்படியாக செய்யவில்லை, ஆனால் இப்படி திமுகவின் பெயரைக் கெடுப்பதற்கென்று இருந்து வருகிறார் இந்த முறை இவருக்கு சீட்டு வழங்கலாமா வேண்டாமா என அறிவாலயம் ஆலோசித்து வருவதாக சில அரசியல் விமர்சகர்கள் கூறியதும் குறிப்பிடத்தக்கது.