24 special

பொதுக்குழு பிரச்சினை அதிமுகவுக்கு புதிதல்ல..! சிக்கலில் சிக்கிய எம்ஜிஆர்..!

MGR
MGR

அதிமுக பொதுக்குழுவை கைப்பற்ற ஓபிஎஸ் இபிஎஸ் தரப்பினர் என இருபிரிவினருக்குள்ளும் மோதல் நிலவி வரும் இந்த சூழலில் பொதுக்குழுவில் எம்ஜிஆரையே அதிமுகவினர் எதிர்த்து சிக்கலை உண்டுபண்ணியிருந்தனர்.

1972ல் திமுகவில் இருந்து வெளியேறிய எம்ஜிஆர் அதிமுக எனும் கட்சியை உருவாக்கினார். எம்ஜிஆர் தனது முதல் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளவிருந்த நிலையில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என பெயர் மாற்றம் செய்ய எம்ஜிஆர் விரும்பி அதற்கான ஏற்பாடுகளை செய்தார்.

ஆனால் அதற்கு எம்ஜிஆரின் கட்சியிலேயே இருந்த சில மூத்த தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எம்ஜிஆர் தொடங்கிய கட்சியில் இருந்துகொண்டு எமிஜிஆருக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களில் அப்போதைய முன்னாள் எம்எல்ஏ விஸ்வநாதனும் ஒருவர். அவர் தற்போது வேலூரில் உள்ள விஐடி பல்கலைக்கழகத்தின் வேந்தராக பணியாற்றி வருகிறார்.

மற்றொருவர் பிரபல தமிழ் திரைப்படத் தயாரிப்பாளராக இருக்கும் கோவை செழியன்.எம்ஜிஆர், ஜெயலலிதா, என்.டி.ராமாராவ் போன்ற முன்னணி நடிகர் நடிகைகளை வைத்து பல பிரம்மாண்ட படங்களை தயாரித்தவர் கோவை செழியன். எம்ஜிஆர் அவரை முதலாளி என செல்லமாக அழைப்பார். அடுத்து 1967 தேர்தல் காமராஜரை தோற்கடித்து நாட்டையே திரும்பிப் பார்க்க செய்த அப்போதைய முன்னாள் சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பி.சீனிவாசன். இந்த மூவரும் பெயர் மாற்றத்திற்கு கடும் எதிர்ப்புகளை தெரிவித்திருந்தனர்.

கட்சியின் பெயரில் மட்டும் இல்லாமல் நடைமுறையிலும் தேசிய அளவில் செயல்பட்டால் மட்டுமே அனைத்திந்திய என்ற பெயரை முன்னால் சேர்க்க வேண்டும் எனக் கூறி இந்த மூவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  அதுமட்டுமல்லாமல் எம்ஜிஆரின் அரசியல் குரு மற்றும் வழிகாட்டியான மறைந்த முதலமைச்சர் அண்ணாதுரையின் உருவத்தை தொண்டர்கள் தங்கள் உடலில் பச்சைக் குத்திக் கொள்ளவேண்டும் என எம்ஜிஆர் உத்தரவிட்டிருந்தார். இதற்கும் விஸ்வநாதன் உள்ளிட்டோர் எதி்ர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில்தான் 1976ம் ஆண்டு செப்டம்பர் மாதம்  அதிமுக பொதுக்குழு நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என பெயர் மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மற்றும் ஆதரவு தெரிவித்தவர்கள் என இருதரப்பினர் கருத்தையும் எம்ஜிஆர் கேட்டறிந்தார்.

எம்ஜிஆரின் தீர்மானத்திற்கு எதிராக பேசிய விஸ்வநாதன், கோவை செழியன் மற்றும் சீனிவாசன் ஆகியோர்  கட்சியில் இருந்து நீக்கபட்டனர். இருந்தபோதிலும் சிலநாட்கள் கழித்து அவர்கள் மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.  இதில் விஸ்வநாதன் ஜெயலிலதாவின் முதல் அமைச்சரவையில் உணவுத்துறை அமைச்சர் பதவி வகித்தது நினைவு கூரத்தக்கது.

பொதுக்குழு பிரச்சினை அதிமுகவுக்கு புதிதல்ல..! சிக்கலில் சிக்கிய எம்ஜிஆர்..!அதிமுக பொதுக்குழுவை கைப்பற்ற ஓபிஎஸ் இபிஎஸ் தரப்பினர் என இருபிரிவினருக்குள்ளும் மோதல் நிலவி வரும் இந்த சூழலில் பொதுக்குழுவில் எம்ஜிஆரையே அதிமுகவினர் எதிர்த்து சிக்கலை உண்டுபண்ணியிருந்தனர்.