அதிமுக பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் இன்று நடைபெற்றது அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க சென்னை இல்லத்தில் இருந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் புறப்பட்டார். இவருக்கு வழிநெடுகிலும் அதிமுக தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்பளித்து வருகின்றனர்.
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் EPS தனது வீட்டில் யாக பூஜை நடத்தி வழிபட்டார். பின்னர் அவரும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக புறப்பட்டார்.
இவர்களை வரவேற்பதற்காக தொண்டர்கள் சாலை எங்கும் சூழ்ந்தனர் இந்நிலையில் மதுரவாயல், வானகரம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கோயம்பேடு மேம்பாலத்தில் இருந்து மதுரவாயல் வரை வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி செல்வோர் போக்குவரத்து நெரிசலால் கடும் அவதிப்பட்டுள்ளனர்.
மேலும், புழல்- தாம்பரம் வெளிவட்ட சாலையில் இருந்து கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.இது ஒருபுறம் என்றால் அதிமுக பொது குழுவில் பல்வேறு சட்ட சிக்கல்கள் உண்டாகி இருக்கிறது புதிய அவை தலைவராக தமிழ் மகன் உசேனை எடப்பாடி பழனிசாமி அறிவித்தார், அதனை தொடர்ந்து அடுத்த பொது குழு கூட்டம் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டது, இந்த சூழலில் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் எடப்பாடி பழனிசாமிக்கு மாலை அணிவிக்க பெரிய மாலையை கொண்டுவந்தார்.
அப்போது எடப்பாடி பழனிசாமி அதனை தவிர்த்தார், மீண்டும் பெஞ்சமின் முயற்சி செய்ய நீங்க வேற போங்க என்ற கடுப்பில் எடப்பாடி முகத்தில் கோபத்துடன் பேச சென்றார் பெஞ்சமின், கூட்டம் தொடங்கியதில் இருந்தே. எடப்பாடி பழனிசாமி கடுமையான கோவத்தில் காணப்பட்டார் எப்போதும் அவர் முகத்தில் இருக்கும் புன்னகை இப்போது காணப்படவில்லை.
இந்த சூழலில் மொத்தமாக பொது செயலாளர் பதவி ஆசைக்கு இன்று நீதிமன்றம் மூலம் மாலை போட்டு விட்டார்கள், இதில் பல கோடி செலவு செய்தது அனைத்தும் வீணாக போச்சு இதுதான் இப்போ தேவையா என எடப்பாடி நினைத்தே மாலையை வேண்டாம் என தவிர்த்து இருக்கிறார் என நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.
எடப்பாடி பழனிசாமி என்னங்க போங்க நீங்க வேற என முன்னாள் அமைச்சர் பெஞ்சமினை பேசும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.