24 special

தொடங்கிய பொதுக்குழு..! மேடையில் இருந்து இறங்கிய முக்கிய தலைவர்..?

Ops and eps
Ops and eps

சென்னை : சென்னை வானகரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வாரு மண்டபத்தில் இன்னும் சில நிமிடங்களில் பொதுக்குழு கூட இருக்கிறது. இந்த கூட்டத்திற்கு வைத்திலிங்கம் உட்பட முக்கிய நிர்வாகிகள் முதலிலேயே வந்துவிட்ட நிலையில் சிறுது நேரத்திற்கு முன்னர் ஓபிஎஸ் வந்தடைந்தார். அங்கு குழுமியிருந்த அதிமுக தொண்டர்கள் ஒற்றைத்தலைமை வேண்டும் எனவும் வேண்டாம் எனவும் இருதரப்பாக பிரிந்து கோஷமிட்டுக்கொண்டே இருக்கின்றனர்.


எடப்பாடி பழனிச்சாமி சற்று முன்னர் வந்தடைந்தார். அவருக்கு பூரணகும்ப மரியாதை வழங்கிய அவரது ஆதரவாளர்கள் இரட்டைத்தலைமை வேண்டாம் என அவரது காரை சூழ்ந்து கொண்டனர். பொதுக்குழுவிற்கு வந்த முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸை முன்னாள் அமைச்சர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை. அவரை வரவேற்கவும் இல்லை.

மேலும் கூட்டத்தில் துரோகி என முழக்கமிடப்பட்டதால் மேடையில் இருந்து வைத்திலிங்கம் இறங்கி சென்றார் வைத்திலிங்கம். மேடையில் செங்கோட்டையன் கேபி அன்பழகன் வளர்மதி கோகுல இந்தியா உள்ளிட்டோர் அமர்ந்துள்ளனர். மேலும்  இந்த கூட்டத்தில் முல்லைப்பெரியாறு, மேகதாது காவிரி போன்ற பொதுவிவகாரங்களை உள்ளடக்கிய 23 தீர்மானங்களை நிறைவேற்ற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் முதல்வர் மறிந்த செல்வி ஜெயலலிதா அவர்கள் தற்காலிக முதல்வராக ஓபிஎஸ் அவர்களையே நியமிப்பார். ஏனெனில் அவர் கட்சி தொண்டர்களை முறையாக வழிநடத்தும் அனுபவம் கொண்டவர் மட்டுமல்லாமல் அவரது அணுகுமுறைகளும் நேர்த்தியாக இருக்கும். அதிமுக தொண்டர்கள் பெரும்பாலும் ஓபிஎஸ் செயல்பாடுகளுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.