
கடந்த 2023 ஆம் ஆண்டு சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை கைது செய்தது ஆனால் அவர் நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டார் அதற்கு பிறகு சிகிச்சை முடிந்ததும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாலே அவரிடம் இருந்த பதவிகள் அனைத்தும் நீக்கப்படும் அப்படி அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியின் பதவியும் பறிக்கப்படும் என்ற தகவல்கள் வெளியானது ஆனால் தமிழக அரசு அமைச்சர் செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாத அமைச்சராக தமிழக அமைச்சரவையில் தொடர்வார் என்று அரசாணை பிறப்பித்து வெளியிட்டது.ஆனால் இதனை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி ஏற்காமல் செந்தில் பாலாஜியின் பதவியை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார், இருப்பினும் சில மணி நேரங்களிலேயே அவரே அந்த உத்தரவை நிறுத்தி வைத்து விட்டார். அதாவது அவரை அமைச்சரவையில் இருந்து நீக்குவது சட்டப்படியான நடைமுறை ஆனால் இப்படி இலக்கா இல்லாத அமைச்சராக இன்னும் அவரை அமைச்சரவையில் வைத்துக்கொண்டு தனது பொறுப்பை ஆற்றாத ஒரு அமைச்சருக்கு வீணாக சம்பளம் வழங்குகிறது திமுக அரசு என்ற பல விமர்சனங்கள் இதற்காக முன்வைக்கப்பட்டது.
மேலும் தமிழக அரசின் அரசாணை மற்றும் ஆளுநரின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ரவி வழக்கு தொடர்ந்தார். அதே சமயத்தில் அதிமுக முன்னால் எம்பி ஜெயவருதன் மற்றும் வழக்கறிஞர் ராமச்சந்திரன் எந்த அடிப்படையில் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தனது பதவியை நீடிக்கிறார் என்று அரசு விளக்க உத்தரவு அளிக்க வேண்டும் என்று கோவாரண்டோ மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணைகள் நடைபெற்ற இறுதியில் தீர்ப்பளிக்கப்பட்டது அதில் செந்தில் பாலாஜி விளக்கா இல்லாத அமைச்சராக நீடிப்பது என்பது அரசியலமைப்பு சாசன நெறிமுறைகளுக்கு எதிரானது மட்டுமின்றி தார்மீக அடிப்படையில் சரியானது அல்ல! சிறந்த ஆட்சிக்கும் நிர்வாகத் தூய்மைக்கும் இது உகந்தது அல்ல! எந்தப் பணியும் செய்யாமல் ஒரு அமைச்சருக்கான சம்பளத்தை பெறுவதும் சரியானதல்ல எனவே அமைச்சரவையில் அவர் நீடிக்க வேண்டுமா என்பதை தமிழக முதல்வர் தான் முடிவு செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு அறிவுறுத்தி இருந்தது.
இதற்குப் பிறகும் அமைச்சர் செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாத அமைச்சராகவே தொடர்ந்து வந்தார் ஆனால் ஜாமினுக்காக பல படிக்கட்டுகளில் இறங்கினார் இருப்பினும் அவருக்கு ஜாமின் மனு அனைத்தும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார், இதன் பின்னணியை விசாரித்த பொழுது செந்தில் பாலாஜி நிச்சயமாக வெளியே வருவார்... வந்தால் கரூர் மற்றும் கோவையை தன் கைக்குள் எளிதில் கொண்டு வருவார் அதன் மூலம் அப்பகுதியில் உள்ள ஓட்டுகளை நாம் பெற்றுவிடலாம் என்று நினைத்து வந்த திமுகவிற்கு இனி எப்படியும் செந்தில் பாலாஜி வெளியே வர முடியாது தேர்தலும் நெருங்கி விட்டது இனியும் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர வைத்தால் ஆட்சிக்கு தான் கெட்ட பேரு ஏற்கனவே பல பின்னடைவுகள் இதில் இது வேறயா என்று செந்தில் பாலாஜியை ராஜினாமா செய்ய சொல்லி அறிவாலய தலைமையிலிருந்து உத்தரவுகள் பறந்ததாகவும் அதனாலையே செந்தில் பாலாஜி தனது இலாகா இல்லாத அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும் இந்த ராஜினாமா செந்தில்பாலாஜி மனைவியை கோபப்படுத்தியுள்ளதாகவும், ஏற்கனவே செந்தில்பாலாஜி சிறைவாசத்தால் உடைந்துபோன அவரது குடும்பம் தற்போது மேலும் உடைந்துபோயிருப்பதாகவும் வேறு சில தகவல்கள் கசிந்துள்ளன...