
திமுக அமைச்சரின் முதலில் ஊழல் வழக்கில் சிறைக்கு சென்றவர் என்ற பெயரை பெற்றவர் அமைச்சர் செந்தில் பாலாஜி. இவர் அதிமுக ஆட்சிக்காலத்தில் முறைகேடு செய்திருந்தாலும் திமுகவில் அமைச்சராக கரூர் மாவட்டத்தை தன் கோட்டையாக கருதி வந்த அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களிலும் அவரது வீடு மற்றும் அலுவலகங்களிலும் அமலாக்கத்துறை சோதனைகள் இறங்கி அவருக்கு எதிரான மற்றும் முறைகேடு நடந்ததற்கான ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை கைப்பற்றி கைதும் செய்தது, . அதற்குப் பிறகும் பலமுறை செந்தில்பாலாஜியின் தரப்பு செந்தில் பாலாஜி உடல் நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க பல நீதிமன்றங்களில் ஜாமீன் மனுவை முன் வைத்தது ஆனால் எதற்கும் செந்தில் பாலாஜியை ஜாமினில் விடக்கூடாது என்று அமலாக்கத்துறை தனது வாதங்களை கடுமையாக முன்வைத்து செந்தில் பாலாஜிக்கு எதிரான 3000 பக்க குற்ற பத்திரிகையின் தாக்கல் செய்தது அதனால் செந்தில் பாலாஜி இன் ஜாமின் மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது.
மேலும் சமீபத்தில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் அவரது வீட்டிற்கு வந்து சென்றதாக கிடைத்த தகவலின் படி அமலாக்கத்துறை அசோக் குமாரின் வீட்டிற்கு சென்று சோதனை இட்டது இதனையடுத்து விரைவில் அசோக் குமார் கைது செய்யப்பட்டாலும் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படும் என்ற வகையிலான கருத்துக்கள் நிலவி வருகிறது.அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அடுத்ததாக நீதிமன்ற வழக்குகளின் சிக்கியவர் அமைச்சர் பொன்முடி! இவர் அதிமுகவின் ஆட்சிக்காலுக்கு முன்பு நடைபெற்ற திமுகவின் ஆட்சியில் செய்த முறை கேட்டால் மீண்டும் சிக்கி நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் உத்தரவால் இவரின் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு மறு விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி இருவரும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பது நிரூபணமாகி பொன்முடியின் அமைச்சர் பதவியும் நீக்கப்பட்டு மூன்றாண்டுகள் சிறை தண்டனையும் பெற்றார். மேலும் 50 லட்சம் ரூபாய் அபராதத்தையும் இருவரும் பெற்றனர் இதற்கிடையில் அமலாக்கத்துறை தமிழகம் முழுவதும் மணல் குவாரிகளில் நடத்திய சோதனையில் பலமுறை கேடுகள் நடந்திருப்பதையும் அதற்கான ஆவணங்களையும் கைப்பற்றியது.
மணல் குவாரிகளில் முறைகேடாக மணல் அள்ளப்படுவதையும் கோரப்பட்ட விண்ணப்பத்தை தாண்டி மணல்கள் அள்ளபட்டு அதிக ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் அதற்கான ஆதாரங்களை அமலாக்கத்துறை கைப்பற்றியதாகவும் செய்திகள் வெளியானது. மேலும் தமிழகத்தின் தொழிலதிபதியாக இருந்தவர்களின் சொத்துக்களையும் அமலாக்கத்தையும் சமீபத்தில் முடக்கியது இவை அனைத்தும் அமைச்சர் துரைமுருகனை தூக்கத்தால் என்ற ஒரு பேச்சும் அரசியல் வட்டாரங்களில் சுற்றி வருகிறது. இந்த நிலையில் அடுத்த இரண்டு அமைச்சர்கள் அமலாக்கத்துறை வசம் சிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது நேற்று அமைச்சர் சேகர்பாபுவிற்கு நெருக்கமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதாகவும் அதனால் விரைவில் சேகர்பாபுவும் அமலாக்க துறையின் விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் என்ற பேச்சுகளும் அடிபடுகிறது. அதுமட்டுமின்றி பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் இலவச வேட்டி சேலைகளிலும் பருத்தி துணிக்கு பதில் பாலிஸ்டர் துணிகள் அதிகமாக பயன்படுத்தப்பட்டிருப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாடினார் மேலும் தற்போது இலவச வேட்டி சேலைகளில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி 40 கோடி ரூபாய் ஊழல் செய்திருப்பதற்கான ஆதாரங்களுடன் தமிழக ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்துள்ளார். இதனால் திமுக அமைச்சரவையில் அடுத்த வழக்குகளில் சேர்க்கும் இரண்டு அமைச்சர்களாக அமைச்சர் சேகர்பாபு மற்றும் காந்தி இருவரும் இருப்பார்கள் என்றும் அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.