
இரண்டு ஆண்டுகளில் தமிழக அரசியல் மட்டுமின்றி இந்திய அரசியலை பெரும் மாற்றத்தை கண்டுள்ளது தொடர்ச்சியாக தனது ஆளுமையை செலுத்தி வந்த காங்கிரஸ் கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் தனது ஆளுமையை செலுத்த முடியாமல் பெரும் பின்னடைவை சந்தித்தது இதனால் மீண்டும் பின்னடைவை சந்திக்க கூடாது என்பதற்காக தேசிய அளவில் ஒரு கட்சியை எதிர்ப்பதற்காக அனைத்து எதிர்கட்சிகளையும் என்று நினைத்து INDIA என்கிற வயதில் ஒரு எதிர்க்கட்சி கூட்டணியை அமைத்தது இந்த கூட்டணி அமைக்க முக்கிய காரணமாக இருந்தது பீகார் முதல்வரான நிதிஷ்குமார். இவரது தலைமையிலேயே இந்த கூட்டணியில் முதல் கூட்டம் பாட்னாவில் நடைபெற்றது அதற்கு பிறகு தொடர்ச்சியாக நான்கு கூட்டங்கள் நடைபெற்றது. ஆனால் அமைச்சர் உதயநிதியின் சனாதன பேச்சால் கடுமையான விமர்சனங்களையும் எதிர்ப்புகளையும் இண்டி கூட்டணியும் சந்தித்தது.
அந்த எதிர்ப்புகளின் விளைவாக இன்டி கூட்டணிக்கு கிடைத்த பரிசு ஐந்து மாநிலங்களின் தேர்தலில் மூன்று மாநிலங்களில் தோல்வி! அதற்குப் பிறகு கூட்டணிக்குள்ளே பல சச்சரவுகள் வெளியானது பேச்சு வார்த்தைகள் அனைத்தும் பயனற்று போனது. இந்த நிலையில் இனி இந்த கூட்டணிகள் இருந்தால் நிச்சயம் தோல்விதான் என்பதை சீக்கிரமாகவே புரிந்து கொண்ட பீகார் முதல்வர் நிதீஷ் குமார் இண்டி கூட்டணியில் இருந்து விலகி காங்கிரஸிலிருந்து விலகி மீண்டும் பாஜகவை இணைந்ததோடு இனி எந்த திருப்பமும் இல்லை என்ற அறிவிப்பை வெளியிட்டது இண்டி கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளை அதிர்ச்சி அடைய வைத்தது. மறுபக்கம் தமிழக அரசியலை பார்த்தால் இண்டி கூட்டணியாலும் எந்த பலனும் கிடைக்காமல் திமுக அமைச்சரவையில் ஒவ்வொரு அமைச்சர்கள் சிறையையும் வழக்குகளையும் சந்தித்துக் கொண்டே வருகின்றனர் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பதவியை கவனிப்பதை விட அவர்களுக்கு இருக்கும் வழக்குகளை சமாளிக்கவே நேரம் பத்தவில்லை! அதுமட்டுமின்றி அமலாக்க துறையும் தொடர்ந்து மேற்கொள்ளும் ரெய்டுகள் அனைத்திலும் ஏதாவது ஒரு பகுதியில் தமிழக அமைச்சரவை சேர்ந்த ஒரு அமைச்சர் சிக்கி விடுவதும் திமுக மக்களின் கோபத்தை அதிகப்படுத்தி கொண்டு செல்கிறது.
இதற்கிடையில் தமிழகத்தில் அண்ணாமலை மேற்கொண்டு வரும் என் மண் என் மக்கள் யாத்திரை பாஜகவிற்கு சாதகமான தேர்தல் களத்தை மாற்றியது. அதோடு சமீபத்தில் வெளியான பிரபல பத்திரிகை நிறுவனங்களின் கருத்துக்கணிப்புகள் அனைத்துமே பாரதிய ஜனதா கட்சிக்கு சாதகமாகவும் INDI கூட்டணிக்கு தோல்வி கிடைக்கும் வகையிலும் இருந்தது. இதுவரை தமிழகத்தில் திமுக அதிமுக இன்று இரண்டு கட்சிகள் மாறி மாறி ஆட்சியை அமைத்து வந்த நிலையில் இதில் பாஜக நிரந்தர கட்சியாக புதிதாக இணைந்துள்ளதும் கட்சிகளையும் ரகசிய கூட்டு போட வைத்துள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் திமுக அரசால் தொடர் அதிருப்தியையும் பின்னடைவுகளையும் மக்கள் சந்தித்து வருகின்றனர், இதனால் நிச்சயமாக வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் அவர்களுக்கு ஒரு பலத்த அடியை ஏற்படுத்திக் கொடுக்கும் என்ற பேச்சுக்கள் நிலவி வரும் நிலையில் சென்னை நங்கநல்லூரில் அமைந்துள்ள குருவாயூரப்பன் கோவிலின் கட்டிடத்தை சீரமைக்கும் பணிகள் நடைபெற்ற பொழுது கோவிலின் கட்டிடத்தில் ஜாக்கி மூலம் உயர்த்தும் பணிகளில் கட்டுமான பணியாளர்கள் ஈடுபட்டுள்ள பொழுது கட்டுமானம் சரிந்து ஒருவர் காயம் ஏற்பட்டுள்ளார் இது தற்போது தமிழகத்தில் நடந்து வரும் ஆட்சியாளர்களுக்கு தவறான சகுணம் இதனால் ஆட்சியில் உள்ளவர்களுக்கு பெரிய ஆபத்து ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே தொடர்ச்சியாக வழக்குகளில் சிக்கி தேர்தலில் பின்னடைவு ஏற்படும் என்று திமுகவிற்கு எதிராக பேசப்பட்டு வரும் இந்த நிலையில் பிரபலமான குருவாயூரப்பர் கோவிலில் இதுபோன்ற சம்பவம் நடந்திருப்பது அறிவாலயத்தை மேலும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.