அண்ணாமலைக்கு பாட்டி தனது வீட்டிற்கு அழைத்து செல்லமாக போட்ட உத்தரவும் அதை ஏற்று அண்ணாமலை சொன்ன பதிலும் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
அண்ணாமலை மேற்கொண்டுள்ள யாத்திரை டெல்டா மாவட்டங்களில் பெரும் தாக்கத்தை உண்டாக்கி வரும் நிலையில் அண்ணாமலை நடந்து சென்ற போது பாட்டி ஒருவர் கையில் தனது சிலுவையை கொடுத்து நீங்கள் வேலை செய்யும் இடத்தில் வைத்து கொள்ளுங்கள் என கூறினார்.
சிறிது நேரம் தாமதிக்காமல் வீட்டிற்கு வாங்க தம்பி என கூப்பிட அண்ணாமலை உடனே சென்றார் அப்போது பாட்டி தம்பி நீங்கள் ஜெபமாலையை பத்திரமாக வைத்து கொள்ளுங்கள் என கூறினார், பாட்டி
எனக்கு எல்லா மதமும் ஒன்றுதான் என் சாமி அறையில் வைத்து கொள்கிறேன் என தெரிவிக்க தம்பி நீங்க நல்லா வரணும் என பாட்டி கொடுத்த ஆசீர்வாதம் தற்போது கடும் வைரலாக பரவி வருகிறது.