தமிழக பாஜக திறன் மேம்பாட்டு பிரிவின் மாநில தலைவர் அமர்ப்பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்ட வழக்கில் அவர் மீது பொய் வழக்குகள் மற்றும் குண்டர் சட்டம் பாய இருப்பதாகவும் அதனை உடனடியாக தடுக்க வேண்டும் என்று அமர்பிரசாத் ரெட்டியின் மனைவி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் தீவிர ஆதரவாளரான இவர், பாஜகவை எந்த அரசியல்வாதி எதிர்த்தாலும் முதல் ஆளாக குரல் கொடுக்கும் நபர், அண்ணாமலைக்கு எதிராக யார் செயல்பட்டாலும் கடுமையாக எதிர்க்கக்கூடியவர்.
அமர் பிரசாத் ரெட்டியின் இந்த நடவடிக்கையின் காரணமாக தமிழக பாஜகவில் தனித்து அனைவருக்கும் பிரபலமான நபராக இருந்து வருகிறார்.இதற்கிடையில் சமீபத்தில் சென்னை பனையூரில் பாஜக தலைவர் அண்ணாமலையின் வீடு முன்பு அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தை அகற்றியதை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் முக்கிய நபராக அமர்பிரசாத் ரெட்டி கலந்துகொண்டார். அப்போது காவல்துறைக்கும் பாஜக நிர்வகிக்கும் ஏற்பட்ட பிரச்சனியில் ஜேசிபி இயந்திரத்தின் கண்ணாடி உடைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட அமர் பிரசாத் ரெட்டி.
அவரை கைது செய்த பின் அவர் மீது முதலமைச்சர் படத்தை அவதூறு படுத்திய வழக்கும் போடப்பட்டது. அவர் மீது 3 வழக்கு பதியப்பட்ட நிலையில் ஒரு வழக்குக்கு ஜாமீன் கிடைத்தது. மற்ற வழக்குகளில் ஜாமீன் கிடைக்கவில்லை. மோசடி குற்றச்சாட்டுகளும் உள்ளதால் அமர்பிரசாத் ரெட்டியை குண்டர் சட்டத்தில் அடைக்க காவல்துறை திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.இந்நிலையில் கைது செய்யப்பட்ட தன் கணவன் மீது காவல் துறை பொய் வழக்கு போடப்படுவதாவும் அவரை குண்டாஸ் சட்டத்தில் அடைக்க காவல் துறை திட்டமிட்டுள்ளதாக அமர் பிரசாத் ரெட்டி மனைவி நிரோஷா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவில், ஆளும் கட்சியின் சட்டவிரோத போக்கை அம்பலப்படுத்தியதால், எனது கணவர் மீது பொய்வழக்கு பதிவு செய்து சட்டவிரோதமாக கைது செய்துள்ளனர். போலி பாஸ்போர்ட் வழங்கிய விவகாரத்தில் உளவுத்துறை முன்னாள் ஏஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் என்பவருக்கு தொடர்பு இருப்பதாக புகார் கூறியதால், அவரது நண்பரான தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜூவிடம் சொல்லி தனது கணவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.