24 special

காலையில் உங்கள் முகத்திலா முழிக்கணும?.....கண்டனத்தை தெரிவித்த அதிமுக!

edapadi, mk stalin
edapadi, mk stalin

திமுக ஆட்சிக்கு வந்த பின் ஆவினில் பல மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. தற்போது அதில் விளம்பரப்படுத்தும் யுக்தியை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த திட்டம் தீட்டி வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிக்கு வந்த பின் ஆவினின் பொருட்களின் மீதான விலையை உயர்த்தியது. அதற்கு முன்னதாக ஆவின் ஓப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.


அதன் பிறகு ஆவினில் பள்ளி குழந்தைகளை வேலைக்கு அமர்த்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனை தொடர்ந்து பால்வளத்துறை அமைச்சர் நாசரை மாற்றி டிஆர்பி ராஜாவை அமைச்சராக நியமித்தனர்.தமிழ்நாட்டில் முதன்மை பால் பாக்கெட்டாக விளங்குவது அரசின் ஆவின் பால் கொள்முதல் மட்டுமே. தமிழகத்தில் நாளொன்றுக்கு சென்னையை தவிர மற்ற மாவட்டத்திற்கு மட்டும் 16 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் மட்டும் 15 லிட்டர் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகின.

ஆவினில் கடந்த சில தினங்களாக ஆவினில் முறைகேடு நடப்பதாகவும், பால் பாக்கெட் தரமாக இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கிடையில் ஆவின் பால் பாக்கெட்டில் கடந்த சில தினங்களாக மலை நீர் சேகரிப்பு திட்டம் குறித்த புகைப்படத்தை அச்சிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியது. மக்களிடம் வரவேற்ப்பை அளித்தது. இந்நிலையில் தற்போது பால் பாக்கெட்டில் முதல்வரின் புகைப்படத்தை அச்சிட்டு வெளியிடுவதால் அரசியல் கட்சியினரிடமும் மக்களிடமும் கோவத்தை உண்டாகியுள்ளது.

அந்த பாக்கெட்டில் மழைநீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு ஒரு பக்கமும் "மழைநீரை சேகரிக்க ஆரம்பிக்கலாமா?.. என்று வாசகத்துடன் முதல்வர் புகைப்படமும் ஒரு பக்கமும் கலைஞர் புகைப்படம் ஒரு பக்கமும் அச்சியிடப்பட்டிருந்தது.இதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் "ஆவின் பால் கவரில் முதலமைச்சரின் குடும்ப புகைப்படம் பதித்து விநியோகம் செய்துவருவது கண்டத்திற்குரியது. இதனை கண்டித்து வரும் காலத்தில் அதிமுக சார்பில் போராட்டம் வெடிக்கும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆர்ப்பாட்டத்திற்கு வழிவகுக்கும் விதமாக ஆலோசனை செய்து வருவதாகவும் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு எந்த எந்த ஆவின் பொருட்கள் மீது விலை உயர்த்தப்பட்டது என்று அலசி ஆராய்ந்து வருவதாக'' அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், "காலையில் எழுந்தவுடன் இவர்கள் முகத்திலா முழிக்க வேண்டும்? இவர்கள் முகத்தில் காலையில் முழித்தால் அன்றைய நாள் உருப்படுமா?.. எல்லாம் விளம்பர வெறி! இதுதான் இவங்க ஆட்சியின் சாதனை" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னை ஓட்டேரியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பொது திமுகவை விமர்சித்து பேசினார்.அதேபோல் ஆவினின் 50ஆண்டுகால பால் வணிக வரலாற்றில் இதுவரை தமிழகத்திற்கு முதலமைச்சராக வந்த எந்த ஒரு தலைவர்களும் புகைப்படத்தையும், எதற்காகவும் பால் பாக்கெட்டில் விளம்பரத்தை கையில் எடுத்ததில்லை, என்று தமிழ்நாடு பால் முகவர்கள் நலச்சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி, "மழைநீர் சேகரிப்பு சம்பந்தமான விழிப்புணர்வு வரவேற்கத்தக்கது. ஆனால், ஆட்சியார்களின் மனதை குளிர்விக்கும் விதத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் கலைஞர் புகைப்படத்தையும் அச்சிடுவது தவறான முன்னுதாரணத்தை ஆவின் நிர்வாகம் ஏற்படுத்தியிருக்கிறது". என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.