
கடந்த ஆட்சியில் டாஸ்மாக் மது கடைகளை மூட வேண்டும் என பாடிய கோவனின் பின்புலம் வெளியில் வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் கலை இலக்கியக் கழகத்தைச் சேர்ந்தவர் பாடகர் கோவன். கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர ஆதரவாளரான இவர், கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ‘மூடு டாஸ்மாக்கை மூடு’ என்று பாட்டுப் பாடி டாஸ்மாக் நிறுவனத்துக்கு எதிராக குரல் கொடுத்தார்.
மேலும், அ.தி.மு.க. அரசையும், முதல்வர் ஜெயலலிதாவையும் அவதூறாக பேசி சீண்டும் வகையில் இந்த பாடல் அமைந்திருந்தது. எனவே, அவர் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் 124-ஏ (தேச துரோகம்), 153-ஏ (சமூகத்தில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படுத்துதல்), 505 (1) பி, சி வதந்திகளை பிரசுரித்து, பரப்பி மக்களை அரசுக்கு எதிராகச் செயல்படும்படி தூண்டுவது என்பன உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை அ.தி.மு.க. அரசு பதிவு செய்தது. அதனை தொடந்து வேறு ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் மோடியை விமர்சித்து இவர் பாடியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்படி கடந்த ஆட்சிக்காலத்தில் ஆளும் அதிமுக கூட்டணி அரசுக்கு எதிராக இவர் தீவிரமாக களமாடி வந்தார்.
இந்த நிலையில் கடந்த ஆட்சியில் டாஸ்மாக் மது கடை விவகாரத்தில் கோவன் புரட்சிகரமாக பாடியதும், டாஸ்மாக் கடை எதிர்த்து தீவிரமாக போராடியதும் கோவனை ஒரு மதுவுக்கு எதிரான போராளி போல் சித்தரித்தது. இப்படி கடந்த ஆட்சியில் படு வேகமாக டாஸ்மாக் கடைகளை எடுத்து பாடி வந்த கோவன் தற்பொழுது நடைபெறும் திமுக ஆட்சியில் டாஸ்மாக் கடைகளை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசாமல் இருப்பதும் மேலும் டாஸ்மாக் கடைகளை எதிர்த்து கோவன் ஒரு நிகழ்ச்சி கூட நடத்தாமல் இருப்பதும் சந்தேகத்தை எழுப்பியதாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளத்தில் பேசப்பட்டு வந்தது.
இந்த நிலையில் திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் விருது வழங்கும் நிகழ்ச்சியை சென்னையில் நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் கோவன் பங்கேற்று புரட்சி பாடல்களை மேடையில் பாடினார். அதனை திருமாவளவன் உள்ளிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேரில் பார்த்து ரசித்தனர். இதன்மூலம் ஏன் கோவன் தற்பொழுதைய ஆட்சியில் டாஸ்மாக் பற்றி பாடாமல், பேசாமல், நிகழ்ச்சி நடத்தாமல் இருக்கிறார் என தெரிந்துவிட்டது, கோவன் திருமாவளவன் ஆள் என அனைவரும் பேச துவங்கிவிட்டனர்.
இப்படி கடந்த ஆட்சியில் புரட்சியாளர் என உலா வந்த கோவன் இந்த ஆட்சியில் அமைதியாகிவிட்டு திருமாவளவன் நிகழ்ச்சியில் பங்கேற்றது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. திருமாவளவன் மற்றும் திமுகவின் தூண்டுதலால் தான் கடந்த ஆட்சியில் டாஸ்மாக்கை எதிர்த்து, முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை அவமதித்து கோவன் பாடினார் என்பதும் தற்பொழுது இந்த ஆட்சியில் அதனால்தான் பாடாமல் இருக்கிறார் என்பதும் தற்பொழுது அம்பலமாகியுள்ளதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.