24 special

உருது மொழியில் அரசுத்தேர்வு..! வலுக்கும் கண்டனம் !

Government election in Urdu
Government election in Urdu

ஹைதராபாத் : தெலுங்கானா மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TSPSC ) பணியாளர் தேர்வுகளை உருதுமொழியில் நடத்தியது குறித்த விவகாரம் தெலுங்கானா அரசியலில் பூகம்பத்தை உண்டுபண்ணியுள்ளது. தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி மற்றும் பிஜேபிக்குமிடையே வார்த்தைப்போர் நீடித்து வருகிறது.


இதுகுறித்து டி.ஆர்.எஸ் " TSPSC தேர்வுகள் உருதுமொழியில் நடத்துவது ஒன்றும் முதல்முறையல்ல. யூபிஎஸ்சி தேர்வுகள் பலகாலமாக உருதுமொழியில் தேர்வுகளை நடத்திவருகிறது" என பிஜேபியின் கருத்துக்கு கடுமையான பதிலடியை கொடுத்தது. டி ஆர்.எஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் எம்பி பி.வினோத்குமார் கூறுகையில்,

"அரசியலமைப்பு சட்டத்தின் எட்டாவது பிரிவின்படி பல்வேறு மாநிலங்களில் யூபிஎஸ்சி மற்றும் பிஎஸ்சி தேர்வுகள் உருதுவில் எழுத தேர்வாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். நாட்டில் உருதுமொழிக்கு அனுமதி அளிக்கும் காலம் இது என பிஜேபியினர் கூறிவருகின்றனர். தெலுங்கானா பிரிக்கப்படும் முன்னர் ஆந்திராவிலும் பணியாளர் தேர்வுகள் உருதுவில் நடத்தப்பட்டன.

பிஜேபி எம்பிக்களுக்கு அரசியலமைப்பு சட்டம் பற்றிய அறிவு இல்லாதது துரதிர்ஷ்டவசமானது. தெலுங்கானாவில் உள்ள இளைஞர்கள் மத்தியில் இந்த விவகாரம் குறித்து பேசி வகுப்புவாத உணர்வுகளை தூண்டவேண்டாம்" என கடுமையாக சாடினார். இதற்க்கு பதிலளித்த மாநில தலைவர் மற்றும் எம்பியான சஞ்சய் பண்டி,



" ஆங்கிலம் மற்றும் தெலுங்குவில் எழுதப்பட்ட தேர்வுத்தாளை ஹிந்து முஸ்லீம், கிறித்தவர் என யாராலும் திருத்த முடியும். ஆனால் உருதுவில் எழுதும் தேர்வை ஒரு இஸ்லாமியர் மட்டுமே திருத்த முடியும். இளைஞர்களின் வாய்ப்புகளை மாநில அரசு தட்டிப்பறிக்கிறது. இதற்க்கு எதிரான போராட்டத்தை மாநில இளைஞரணி விரைவில் நடத்தும்" என கூறினார்.

மேலும் நேற்று மாலை தெலுங்கானா மாநில ஐடி மற்றும் இண்டஸ்ட்ரீஸ் அமைச்சர் ராமராவ் பேசுகையில் "இதற்கு உள்நோக்கம் கற்பிக்காதீர்கள். மத்திய அரசு தேர்வுகளில் கூட உருது இருக்கிறது" என கூறினார். இதற்க்கு பதிலளித்த நிஜாமாபாத் பிஜேபி எம்பி தருமபுரி அரவிந்த் அமைச்சர் ராமராவ் "சிறுபான்மையினரின் வாக்குவங்கிக்காக மத அரசியல் செய்கிறார்" என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.