24 special

ஆளுநர் முதல்வர் பஞ்சாயத்து சிம்பிள் பதில் சொன்ன விஜயகாந்த்.!

Rn ravi and mk stallin
Rn ravi and mk stallin

தமிழகத்தில் துணை வேந்தர்கள் நியமனம் குறித்து ஆளுநர் மற்றும் முதல்வர் இடையே நடைபெற்ற பனிப்போர், தமிழக சட்டமன்றத்தில் ஆளும் கட்சி நிறைவேற்றிய துணை வேந்தர்களை அரசே நியமனம் செய்யும் என்ற மசோதா மூலம் வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


இந்த சூழலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இது குறித்து தனது கருத்தை பதிவு செய்துள்ளார் அது பின்வருமாறு சென்னை பல்கலைகழகம் உள்பட தமிழ்நாட்டில் உள்ள 13 பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநரிடம் இருந்து, மாநில அரசுக்கு மாற்றப்படும் சட்டதிருத்த மசோதா சட்டபேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதில் துணை வேந்தராக முதலமைச்சரை ஏன் நியமிக்ககூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது. சட்டத்தின் படி முன்னாள் முதல்வர்கள் காலத்தில் இருந்தே பல ஆண்டுகளாக வழக்கத்தில் இருந்து வரும் மரபை தொடர்வதே சிறந்தது. இந்த நடைமுறையை உடனே மாற்றுவது என்பது இலகுவானது அல்ல என்றும், இந்தியா முமுவதும் என்ன நடைமுறை உள்ளதோ, அதே நடைமுறை தமிழகத்திலும் தொடர்ந்தால் அனைவருக்கும் நல்லது.

ஏற்கனவே நீட் விவகாரத்தில் இந்தியா முழுவதும் மத்திய மாநில அரசுகளுக்கு இடையே முரண்பாடு உள்ளதால் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மத்தியில் மிக பெரிய குழப்பம் நிலவி வருகிறது. அதேபோன்று துணை வேந்தர்களை நியமிக்கும் விவகாரத்திலும் குழப்பமான சூழ்நிலை ஏற்படுத்தாமல் தமிழக அரசு தெளிவான முடிவை எடுக்க வேண்டும்.

ஆளுநருக்கும், ஆட்சியாளர்களுக்கும் இடையே உள்ள அதிகார போட்டியில், மாணவர்களின் எதிர்காலத்தை சூனியமாக்கவோ, கேள்விக்குறியாக்கவோ கூடாது.  மத்திய, மாநில அரசுகள் பரிந்துரை செய்பவர்களை தவிர்த்து, ஊழல் இல்லாத நேர்மையான துணை வேந்தர்களை நியமித்தால் மட்டுமே, பல்கலைக்கழகங்களும், மாணவர்களின் எதிர்காலமும் சிறப்பாக அமையும் என்பதே தேமுதிகவின் நிலைப்பாடு என குறிப்பிட்டுள்ளார்.

அதாவது தற்போதைய நிலையே தொடரவேண்டும் அதிகார மோதலால் மாணவர்கள் எதிர்காலம் கேள்வி குறியாக மாற கூடாது என சிம்பிள் பதிலை தனது நிலைப்படாக தெரிவித்துள்ளார் விஜகாந்த்.