தமிழக பாஜக நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற காரணம் அண்ணாமலை தான் என சொல்லும் அளவுக்கு பல்வேறு மாற்றங்களை தமிழக அரசியலில் ஏற்பட்டு உள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, சமீபத்தில் ஆளுநராகிறாரா ராஜா ? என்ற கேள்வியோடு பல்வேறு தகவலைகளை செய்திகளில் பார்த்து இருக்கலாம். ஆனால் என்ன நடக்கிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
இதற்கு முன்னதாக தமிழக பாஜகவில் இருந்த தலைவர்கள் மேற்கொண்டு வந்த நடைமுறைக்கும், அண்ணாமலை தலைவரான பிறகு நடக்கும் மாற்றத்திற்கும் பெரும் வித்தியாசம் உண்டு. அண்ணாமலை முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி என்பதால், பேசுவதில் கூட ஒரு கம்பீரம் இருக்கும். அதை எலாம் தாண்டி இவருடைய பேச்சுத்திறனுக்கு மட்டுமல்ல.... எவ்வளவு படித்து இருந்தால் இவ்வளவு அறிவுப்பூர்வாமாக இருப்பார் என்ற வியப்பு எதிர்க்கட்சியின் முக்கிய புள்ளிகளுக்கே உண்டு.
இவ்வளவு சிறிய வயதில் ஆயிரக்கணக்கான புத்தகங்களை அலசி ஆராய்ந்தவர் அண்ணாமலை. மொழித்திறன் அதிகம் மிக்கவர். அறிவுக்கூர்மை மிகவும் அதிகம். இன்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூட, பத்திரிக்கையாளர்கள் எதிர் கேள்விகளை முன் வைக்கும் போது அதாற்கு தக்க பதிலடி கொடுப்பதால் யாரும் மறுபேச்சு பேச முடியாத அளவுக்கு வாயை அடைத்து விடுகிறார்.
பத்தாத குறையாக தற்போது யார் எந்த ஊழல் செய்தாலும் வெளிச்சம் போட்டு காண்பித்து விடுகிறார் அண்ணாமலை. நாம் சிறு வயதில் ராஜா ராணி விளையாட்டு விளையாடி இருப்போம் அல்லவா? அதில் வரும் போலீஸ் கதாபாத்திரம் திருடனை கண்டுபிடிக்கும். ஆனால் அண்ணாமலையோ ராஜா ராணி மந்திரி போலீஸ் திருடன் இப்படி யார் தவறு செய்தாலும் உடனே சுட்டிக்காட்டி பேசுவதில் பாஜக தலைவரான அண்ணாமலைக்கு தனி ஸ்டைல் உண்டு .
நிலைமை இப்படி இருக்கும் போது, பாஜகவை தமிழகத்தில் வலுப்படுத்த ஒவ்வொரு நாளும் படுவேகமாக வேலை செய்து வருகிறார். அதே போன்று அண்ணாமலை சுதந்திரமாக செயல்படுவதற்கான அனைத்து அதிகாரமும் பாஜக தலைமையும் வழங்கி உள்ளது. இப்படியான நிலையில் அண்ணாமலையின் சில முடிவுகளுக்கு குறுக்கே சில மூத்த தலைவர்கள் கருத்து மாறுபாடு கொண்டிருப்பதால், சில வேலைகளை குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்க முடியாமலும்,
சில முடிவுகளை எடுக்க முடியாமல் இருப்பதாக மேலிடத்திற்கு தகவல் செல்ல, அதனை எப்படி சரி செய்வது என மேலிடம் மேற்க்கொண்ட ஆலோசனையில் தான், பொன்னார் அவர்களுக்கு உயரிய ஆளுநர் பதவி வழங்கி, அழகு பார்க்க முடிவு செய்து உள்ளதாம். அதே வேளையில், இந்துக்களுக்கு ஏதாவது என்றால் முதலில் ஓடி வந்து குரல் கொடுக்கும் எச் ராஜாவுக்கும் ஆளுநர் பதவி வழங்குவது குறித்து தீவிரமாக பேசப்பட்டு வருகிறதாம்.
அந்த வகையில் கேரளா மாநிலத்திற்கு ஆளுநராக ராஜாவை நியமனம் செய்யலாம் என கட்சி மேலிடம் கேட்க, ராஜாவோ அதற்கு மாற்றாக வட மாநிலம் என்றால் சரியாக இருக்கும். கேரளா வேண்டாமே என சொன்னதாக தெரிகிறது. அப்படி என்றால் பொன்னார் அவர்களை கேரளா கவர்னராக நியமனம் செய்தால், அண்டை மாநிலம் என்பதால் எளிதாக இருக்கும் என்ற பாணியிலும், கூடுதலாக அவருக்கு மலையாளம் கூட தெரியவே சரியான நபராக தான் இருப்பார் என்ற ஆலோசனையும் நடந்து வருகிறதாம்.
மேலும், சமீபத்தில் பாஜக மாவட்ட தலைவர் பதவியில் இருந்த பலரையும், மற்ற பொறுப்பில் இருந்த சிலரையும் அதிரடியாக அவர்களது செயல்பாட்டின் அடிப்படையில் பதவியிலிருந்து நீக்கப்பட்ட்டது. இந்நிலையில் மேலும் பல புதிய பொறுப்புகளுக்கு ஆட்களை நியமனம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. குறிப்பாக சமீபத்தில் அண்ணாமலை டெல்லி பயணம் சென்று வந்தார்.
வந்த உடன் புதிய நியமனம் குறித்து அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதுவரை எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை. ஒருவேளை ஆளுநர் நியமனம் குறித்த அறிவிப்பு வந்த பிறகு, பாஜகவில் புதிய பொறுப்பாளருக்கான அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது.