தமிழகத்தில் பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை ஆளுநர் நியமனம் செய்வதற்கு பதில் தமிழக அரசே நியமனம் செய்யும் வகையில் தமிழக சட்டமன்றத்தில் மசோதா கொண்டுவரப்பட்டது, இந்த மசோதாவிற்கு அதிமுக மற்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.
பெரும்பான்மை ஆதரவை பெற்று திமுக கொண்டுவந்த தமசோதா வெற்றி பெற்றது, இது குறித்து பல்வேறு ஊடகங்கள் விவாதங்களை முன்னெடுத்த நிலையில் தனியார் ஊடகம் ஒன்றில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் மூத்த வழக்கறிஞர் தமிழ் மணி கலந்து கொண்டார், அவர் தமிழக அரசு கொண்டு வந்த மசோதா குறித்து எழுப்பிய கேள்விகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல நெறியாளர் கார்த்திகை செல்வன் மூத்த வழக்கறிஞர் தமிழ்மணியை நோக்கி தமிழக அரசு கொண்டுவந்த மசோதாவை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்வியை எழுப்பினார் அதற்கு எல்லா அதிகாரமும் தன்னிடம் இருக்க வேண்டும் என நினைப்பது என ஒரே போடாக போட்டார்.
இதையடுத்து தமிழக அரசு கொண்டுவந்த மசோதாவில் எங்காவது வேந்தராக ஆளுநர் செயல்பட மாட்டார் என ஒற்றை வரி இருக்கிறதா? படித்து பார்த்து கூறுங்கள் என கார்த்திகை செல்வனை நோக்கி ஒரு கேள்வி கேட்டார், அதற்கு கார்த்திகை செல்வன் சுற்றி வளைத்து பதில் கூற சார் இருக்கா இல்லையா ஒரே வரியில் சொல்லுங்கள் என தமிழ்மணி மீண்டும் கேட்டார்.
அப்போது கார்த்திகை செல்வன் சற்று திணறி போனார் என்றே சொல்லவேண்டும் மீண்டும் தொடர்ந்த தமிழ்மணி, இனி இது சட்டமாக மாறினால் நாளை சாதி ரீதியாக துணை வேந்தர்களை நியமனம் செய்யும் நிலை உருவாகும் மொத்தத்தில் இது நடப்பது நல்லது இல்லை என மீண்டும் ஒரே போடாக போட்டார். இந்த விவாதங்கள் இணையத்தில் அதிகம் வலம்வருகின்றன.
வைரலாகும் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.