24 special

திமுகவுக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்த ஆளுநர்..! நேரலை பாருங்க மக்களே..விவகாரம் புரியும்..!

satlin rn ravi
satlin rn ravi

தமிழக சட்டசபை இதுவரை காணாத அதிரடி நிகழ்வை பார்த்து இருக்கிறது, ஆளுநர் ரவி தமிழ்நாடு என்று கூறுவதை காட்டிலும் தமிழகம் என கூறுவது சிறப்பாக இருக்கும் என தெரிவிக்க அதற்கு திமுக கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர்.


இந்த சூழலில் ஆளுநரை வைத்தே ஆளுநருக்கு பதிலடி கொடுக்க போகிறோம் பாருங்கள் என திமுக சட்ட சபை உறுப்பினர்கள் அரசல் புருஷலாக பேசி வந்தனர்.  என்ன வகையில் பதிலடி கொடுக்க போகிறார்கள் என எதிர்பார்த்து இருக்க கடந்த 7-ம் தேதி பல்வேறு ஊடகங்களில் செய்தி ஒன்று வைரலானது அதாவது தமிழக அரசு தயாரித்து கொடுக்கும் உரையை ஆளுநர் என்பவர் படிக்க வேண்டும் என்பது மரபு.

அந்த வகையில் இந்த ஆண்டு தமிழக அரசு தயாரித்து கொடுக்கும் உரையில், திராவிட மாடல், தமிழ்நாடு, தந்தை பெரியார் என பல்வேறு வாசகங்கள் இடம்பெற வேண்டும் எனவும் அதனை ஆளுநர் வாயால் படிக்க வைத்து அவருக்கு பதிலடி கொடுக்க இருப்பதாக செய்திகள் வெளியானது.இந்த சூழலில் தான் இன்றைய ஆளுநர் உரையை பெரிதாக எதிர் பார்த்து காத்து இருந்த வேலையில் அதிரடி மாற்றங்கள் அரங்கேறி இருக்கின்றன, ஆளுநர் திராவிட மாடல் என்ற வார்த்தையை மட்டுமல்ல, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது என மாநில அரசு தயாரித்து கொடுத்த உரையில் இடம்பெற்ற வாக்கியத்தை கூட வாசிக்கவில்லை.

இது பெரும் அதிர்ச்சியை திமுகவினருக்கு கொடுத்தது, மேலும் பெரியார் உள்பட திமுக எழுதி கொடுத்த பெயரையும் ஆளுநர் வாசிக்கவில்லை, என்னடா இது அவர் வாயால் திராவிட மாடல் என புகழ செய்யலாம் என பார்த்தால் ஆளுநரோ இப்படி செய்துவிட்டார் என திமுகவினர் கையை பிசய, திடீர் என்று எழுந்த முதல்வர் ஸ்டாலின்.ஆளுநர் முறையாக உரையை வாசிக்கவில்லை என்ற குற்ற பத்திரம் வாசிக்க தொடங்கினார், அங்குதான் மற்றொரு ட்விஸ்ட் அரங்கேறியது முதல்வர் பேசி கொண்டு இருக்கும் போதே அவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் இது முதல்வரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

திமுகவினர் கோசம் போட அதைப்பற்றி எல்லாம் கவலை படாமல் நேரடியாக எந்த வாக்யத்தையும் வாசிக்காமல் நகர்ந்து சென்றார் ஆளுநர். இதன் மூலம் நான் என்ன நினைக்கின்றேனோ அதை தான் செய்வேன் என்னை மிரட்டி கோசம் போட்டு எல்லாம் பணிய வைக்க முடியாது என ஆளுநர் நேரடியாக தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.

ஆளுநர் உரையில் மாநில அரசை புகழ செய்யலாம் ஆளுநர் புகழ்ந்து பேச பேச கொண்டாடலாம் என காத்து இருந்த நபர்களுக்கு ஆளுநர் பெரிய ஏமாற்றத்தை கொடுத்து இருக்கிறார் குறிப்பாக முதல்வர் ஸ்டாலின் என்ன இந்த பதில் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா என்பது போல் ஆளுநரின் இன்றைய சட்டமன்ற செயல்பாடு இருந்ததை சட்டமன்ற நிகழ்வுகளை நேரலையில் பார்த்த அனைவரும் அறிந்து கொள்ளலாம்.