24 special

தமிழகமா? தமிழ்நாடா ? உள்ளடி விவகாரத்தை தட்டி தூக்கிய திருநாவுக்கரசு..!

rn ravi , thirunavukarasu
rn ravi , thirunavukarasu

பிஜேபி மற்றும் ஆர்எஸ்எஸ் இருக்கும் பொழுது தமிழ்நாட்டை எந்த கொம்பனாலும் பிரிக்க முடியாது. தமிழ்நாடா? தமிழகமா? என்ற ஆளுநர் ரவி பேசியது தீ போல பற்றி கொண்டு தமிழக அரசியலில்  பெரும் சலசலப்பையும் , பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


ஆளுங்கட்சி எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மட்டுமல்லாமல் , பிரபல பத்திரிகைகளும், ஊடகங்களும்,  சோசியல் மீடியாக்களிலும் தமிழ்நாடா தமிழகமா என்ற விவாத பொருளாக்கி பொதுமக்கள் மத்தியில் பேசும் பொருளாகி இருக்கும் நிலையில் பாஜக ஓ.பி.சி அணியை சேர்ந்த ப்ரொபசர் திருநாவுக்கரசு,என்ற பெயரை சொல்லுவதில் யாருக்கும் இங்கு பிரச்சனை இல்லை தமிழ்நாடு' என்றழைப்பதில் எமக்குப் பிரச்சினையில்லை. ஆனால், அந்தப் பெயரை யார் பயன்படுத்துகிறார்கள், எதற்காகப் பயன்படுத்துகிறார்கள் என்பதில் தான் வருகிறது பிரச்சினை என்று சொன்ன திருநாவுக்கரசு

நவீன இந்திய வரலாற்றில், திமுக எனும் கட்சி தொடங்கப்படுவதற்கு முன்னே மகாகவி பாரதியார் 'தமிழ்நாடு' எனும் பதத்தைப் பயன்படுத்தியிருக்கிறார். பிரிவினை எண்ணத்தோடு அப்படிச் சொல்லவில்லை பாரதியார்; அவர் தேசியவாதி. தேச விடுதலைக்காகப் பாடுபட்டவர்; தேசியக் கவி. 

திமுக 'அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு' என்று சொல்லிதேச ஒற்றுமைக்கு எதிராக செயல்பட்ட கட்சி. அதிலும் கருணாநிதி தலைமையிலான திமுக தீவிரமான பிரிவினைவாத எண்ணத்தைக் கொண்டிருந்தது. இப்போதிருக்கும் திமுக பற்றி சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. இதுதேச விரோதிகளால் ஆட்டிவைக்கப்படும் கட்சி. பிரிவினை எண்ணத்தை மறைமுகமாகவும், சில சமயங்களில் நேரடியாகவும் வளர்க்கும் மோசமானக் கட்சி. 

அதனால் தான் திமுக பயன்படுத்தும் சொல்லாடல்களை எதிர்க்கிறோம். தண்ணீரில் எறும்பு விழுந்து விடுகிறது. அது ஒன்றும் பெரிய விஷமில்லை. அந்தத் தண்ணீரைக் குடிக்கலாம். ஆனாலும் மனசு பெரும்பாலும் ஒத்துக்கொள்வதில்லை.

அதேபோல், அண்ணல் அம்பேத்கர் அவர்கள் வகுத்துக் கொடுத்த அரசியலமைப்புச் சட்டம் இருக்கும்போது, BJP இருக்கும்போது, RSS இருக்கும்போதுஇனி எவனாலும் நம் தேசத்தைப் பிரித்துவிட முடியாது. ஆனாலும் சூதுமதியாளர்கள் ஏற்றும் விஷத்தை சகித்துக் கொண்டிருக்க முடியாது. தொடர்ந்து எதிர்வினையாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். அந்த அடிப்படையில் தான் நாம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

IPS எனும் All India Serviceல் இருந்த நம் ஆளுநரும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்... நாம் தமிழகம் என்போம், தமிழ்நாடு என்போம். ஆனால், பிரிவினைவாதிகள் தமிழ்'நாடு' என்று சொல்லும்போது அவர்களுக்கு எதிர்வினையாற்றிஅவர்களின் BPயை எகிற வைத்துக்கொண்டேயிருப்போம்.மற்றபடி, செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே ...

அதேசமயம், பாரத நாடு பழம்பெரும் நாடு;நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்!  என்று,தமிழ்நாடு என்ற கத்தியின் பெயர்  தேசியவாதிகள் பயன்படுத்துவதற்க்கும் பிரிவினைவாதிகள் பயன்படுத்துவதற்கும் உள்ள வித்தியாசத்தை கூறி திமுகவையும் கூட்டணி கட்சிகளான விசிகவையும், தமிழ் தேசியம் பேசுபவர்களையும் தன் பாணியில் கடுமையாக  திருநாவுக்கரசு விமர்சித்துள்ளது வைரலாகி  வருகிறது.