24 special

ஆளுநர் பாதுகாப்பு அதிகாரி அதிரடி கடிதம்.. இனி வேறு வழியில்லை..! சிறையில் சலாம்..!

Rn ravi
Rn ravi

தமிழக ஆளுநர் கான்வே மீது தாக்குதல் நடத்தப்பட்ட  சம்பவம் கடும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது தமிழகத்தில் கவர்னருக்கே பாதுகாப்பு இல்லை என்றால் பொது மக்களின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது, இந்த சூழலில் தமிழக காவல்துறை ஆர்ப்பாட்டகாரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கூடிய சூழல் உண்டாகியுள்ளது.


மயிலாடுதுறை மாவட்டத்தில், தருமபுரம் ஆதீனத்தின் ஞான ரத யாத்திரையை துவக்கி வைத்து விட்டு ஆளுநர் நேற்று சென்னை திரும்பினார். அப்போது, அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து, விடுதலை சிறுத்தைகள் மற்றும் தி.க., கட்சியினர், கவர்னரின் பாதுகாப்பு வாகனம் மீது கல் மற்றும் கொடிகளை வீசி தாக்குதல் நடத்தினர்.



இத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஆளுநரின் பாதுகாவலர் விஸ்வேஷ் பி சாஸ்திரி, தமிழக டி.ஜி.பி.,க்கு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் பல்வேறு முக்கிய சம்பவங்களை சுட்டி காட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அது குறித்து எடுக்கபட்ட நடவடிக்கைகள் குறித்து முழுமையாக அறிக்கை தயார் செய்து அளிக்கவேண்டும் எனவும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.



இந்த சூழலில் போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்கள் உட்பட 87 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, அவர்களில் போராட்டத்தை ஒருங்கிணைத்த நபர்கள் விரைவில் கைது செய்யபடலாம் எனவும் கூறப்படுகிறது அவர்கள் விரைவில் சிறையில் அடைக்கப்பட கூடிய சூழல் உண்டாகி இருப்பதால் தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபட திட்டம் வகுத்த பல போராளிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஆளும் அரசிற்கு ஆதரவாகவும் ஆளுநருக்கு எதிராகவும் செயல்பட்டால் காவல்துறை நடவடிக்கை எடுக்காது நாமும் பிரபலம் அடையாளம் என திட்டமிட்டு காத்து இருந்த பலருக்கு தற்போதைய சம்பவம் கடும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது பல போராளிகள் இப்போதே முன் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தை நாட முடிவு எடுத்து விட்டார்களாம். ஆளுநர் பயணத்தை சீர்குலைக்க முயற்சி செய்தவர்கள் சிறையில் சலாம் போடும் நிலை உண்டாகி இருக்கிறது.