இசைஞானி இளையராஜாவை தொடர்ந்து இயக்குனரும் தயாரிப்பாளருமான பாக்யராஜ் பிரதமர் மோடியை புகழ்ந்து பேசியுள்ளார் , பிரதமர் மோடியை பாராட்டி பேசியதோடு மட்டுமல்லாமல் பிரதமரை விமர்சனம் செய்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் எனவும் அதிரடியாக குறிப்பிட்டுள்ளார் பாக்கியராஜ் .
சென்னை தி.நகரில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகம் கமலாலயத்தில் ‛பிரதமரின் மக்கள் நலத்திட்டங்கள் - புதிய இந்தியா 2022' என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை புத்தகத்தை வெளியிட, திரைப்பட இயக்குனரும் நடிகருமான பாக்யராஜ் பெற்றுக்கொண்டார்.
பின்னர் பாக்யராஜ் பேசியதாவது: தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டது சரியான ஒன்று. தகுதியுள்ளவரை தான் தேர்ந்தெடுத்துள்ளனர். எங்கு வெளிநாடு சென்றாலும் பிரதமர் மோடி ஓய்வின்றி உழைக்கிறார். எத்தனை பேருக்கு இந்த வயதில் துடிப்புடன் இருப்பார்கள் என்பது சந்தேகம். இந்தியாவுக்கு இப்படி எனர்ஜியான பிரதமர் தான் தேவை.
பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் 3 மாத குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள் என நினைத்துக்கொள்ளுங்கள். இத்தகையவர்களை போன்றவர்கள் நல்லவற்றையும் பேசமாட்டார்கள், பிறர் சொல்வதையும் கேட்க மாட்டார்கள். குறை பிரசவத்தில் பிறந்தவர்களுக்கு தான் வாய், காது இருக்காது. எனவே, அதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை. இவ்வாறு அவர் பேசினார்.
தமிழ் திரை உலகை சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாக வெளிவந்து பிரதமரை உயர்த்தி பேசி வருவது , இத்தனை நாள் பிரதமர் குறித்து தமிழகத்தில் உண்டாக்கி வைத்த பிம்பத்தை சுக்கு நூறாக உடைத்துள்ளது . நேற்று இளையராஜா இன்று பாக்யராஜ் என பிரதமரின் உழைப்பை பாராட்டி வருவதால் திடீர் போராளிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.