24 special

அளந்துவிட்ட ஜோதிமணி என்ன ஒரு அறிவு வைத்து செய்யும் நெட்டிசன்ஸ்..!

jothimani
jothimani

தமிழகத்தில் இராமர் யார் என்றே தெரியாது என கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தெரிவித்த கருத்துக்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றன. கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதி மணி தனியார் ஊடகம் ஒன்றில் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார் அதில்,


இது தொடர்பாக அவர் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் இப்போது வைரலாகி உள்ளது. அதில்  "நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவள். எனக்கு ராமர் என்றால் யார் என்றே தெரியாது. ஏனென்றால், நாங்கள் மூதாதையரை வழிபடும் முறையையே பின்பற்றி வருகிறோம். நீங்கள் தமிழ்நாட்டில் யாரிடம் வேண்டுமானாலும் போய் கேட்டுப் பாருங்கள்.

தமிழ்நாட்டில் நீங்கள் எங்கும் ராமர் கோயிலைப் பார்க்க முடியாது.நான் ஒவ்வொரு வாரமும் எங்கள் குடும்பத்தினர் வழிபடும் கோயிலுக்குச் செல்வேன். அது மூதாதையர் வழிபாடு. பல தெற்கு மாநிலங்கள், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பழங்குடியினர் இந்த வழிபாட்டு முறையே பின்பற்றுகின்றனர்.

நாட்டில் உள்ள பல்வேறு தரப்பினரும் தங்கள் மூதாதையரையே கடவுளாகக் கருதி வழிபடுகின்றனர். இதைத் தான் நாங்கள் சொல்ல முயல்கிறோம் என தெரிவித்து இருந்தார், ஜோதிமணியின் இந்த கருத்து அப்பட்டமான பொய் என்று பல்வேறு தரப்பினரும் ஆதாரங்களுடன் எடுத்து சொல்லி வருகின்றனர், இராமேஸ்வரம் கோவில் இருப்பது ஜோதிமணிக்கு தெரியுமா?

தமிழகத்தில் எந்த ஊரில் திருவிழா நடந்தாலும் இராமாயணம் மகாபாரதம் போன்ற கலை நிகழ்ச்சிகள் தான் அதிக அளவில் இடம்பெறும் அதாவது தெரியுமா? அது சரி இராமர் பாலம் உருவான வரலாறு தெரியுமா? இப்படி எதையுமே தெரியாத ஞான சூனியமாக இருந்து கொண்டு எப்படி முட்டாள் தனமான கருத்துக்களை தெரிவிக்கலாம் என நெட்டிசன்கள் வைத்து செய்து வருகின்றனர். ஜோதிமணி அளித்த பேட்டி கீழே இணைக்கப்பட்டுள்ளது :-