திமுகவின் கூட்டணி கட்சியான விசிக பிரமுகர் கட்சி வளர்ச்சி நிதி பெறுவதாக கூறி டாஸ்மாக் டாஸ்மாக்காக வளைத்து வளைத்து மிரட்டிய நிலையில் இப்போது சிறையில் குமுறி கொண்டு இருக்கும் சம்பவம் வெளியாகி இருக்கிறது.
தென்காசி மாவட்டம் கடையத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் ஒன்றிய செயலாளராக இருப்பவர் அன்பழகன் இவர் வசிக்கும் வெங்கடாம்பட்டி எனும் ஊரில் அரசு மதுபான கடை இருக்கிறது, அங்கு அவ்வப்போது சென்று மதுபாட்டில் வாங்கியும், கட்சி வளர்ச்சி நிதிக்காக கடையில் பணம் வசூல் செய்வது என தொடர்ச்சியாக ஊழியர்களை மிரட்டி பணம் பறித்து வந்து இருக்கிறார்.
ஊழியர்கள் கேட்டால் கூட்டணி கட்சிக்கு கொடுக்க மாட்டீர்களா எனவும் மிரட்டல் விடுத்துள்ளார், இந்தநிலையில் அவர் விசிகவில் உள்ள மற்றொரு நிர்வாகி ஒருவரிடம் மதுபாட்டில் மற்றும் கட்சி வளர்ச்சி பணம் வாங்கி வரச்சொல்லியுள்ளார் அதனை ஊழியர்கள் மறுத்துள்ளனர்.
இதனால் அங்கு சென்று அவர் டாஸ்மாக் பணியாளர்களை மிரட்டியுள்ளார். இதை அங்கிருந்த பலர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியது, இதன்படி கடை ஊழியர்கள் கடையம் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் விடுதலை சிறுத்தை கட்சியின் ஒன்றிய செயலாளர் கைது செய்யப்பட்டு அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடிபோதையில் கட்சியின் ஒன்றியச் செயலாளர் கடையில் வளர்ச்சி நிதி கேட்டு தொல்லை கொடுத்த சம்பவம் விடுதலை சிறுத்தைகள் இப்படித்தான் கட்சியை வளர்கிறார்களா? எனவும் கேள்வி எழுந்துள்ளது, இந்த சூழலில் ஓசியில் மதுபானம் மற்றும் வளர்ச்சி நிதி கேட்ட விசிக நிர்வாகியை தமிழக காவல்துறை தங்கள் பாணியில் கும்மியதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஊருக்கு பாடம் எடுக்கும் திருமாவளவன் தனது கட்சி நிர்வாகிகளின் இது போன்ற செயலுக்கு என்ன சொல்ல போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.