தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற பாலியல் சம்பவங்கள் குறித்து தனியார் ஊடகத்தில் விவாதம் நடைபெற்றது, இதில் சிறப்பு அழைப்பாளராக மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி கலந்து கொண்டார் மேலும் திமுக மற்றும் இதர அழைப்பாளர்களும் கலந்து கொண்டனர். இதில் நெறியாளராக தம்பி தமிழரசன் விவாதத்தை தொகுத்து வழங்கினார்.
இதில் பேசிய மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி விஷயத்தை வெளிப்படையாக உடைத்து பேசினார், தமிழகத்தில் நடைபெறும் பாலியல் சம்பவங்களுக்கு யார் பொறுப்பு என மூன்றாக பிரித்து பதில் அளித்தார், அப்போது இதற்கு சினிமா துறையை சார்ந்தவர்கள் பங்கு இருக்கிறது, ஒரு கவிஞர் பாடல் எழுதுகிறார் பெண்ணை உனது மெல்லிடை பார்த்தேன் அடடா பிரம்மன் கஞ்சனடி, சற்றே நிமிர்ந்துத்தேன் தலை சுற்றி போனேன் அடடா அவனே வள்ளலடி என ஒருவர் பாட்டு எழுதுகிறார் இது எதை குறிக்கிறது.
இப்படி நான்கு பாடல் போட்டால் விளங்கும் என வெளுத்து எடுத்தார் இதற்கு இடை மறித்த நெறியாளர் பாடல் வரிகளால் ஒரு சமுதாயம் எப்படி கெட்டுவிடும் என கேள்வி எழுப்பினார் அதற்கு தமிழ் மணியோ எங்கே அப்படி ஒரு பாதிப்பு கூட இருக்காது என நீங்கள் சொல்லுங்கள் நான் இனிமேல் பேசவில்லை என பதில் கேள்வி எழுப்ப அமைதியானார் நெறியாளர்.
இது ஒருபுறம் என்றால் அடுத்ததாக முதல்வர் ஸ்டாலின் திராவிட மாடல் இந்தியாவே வியக்கும் என பேசுகிறார், ஆட்சிக்கு வந்து 10 மாதம் ஆகிறது பொள்ளாச்சி வழக்கில் அரசியல் வாதிகள் தலையீடு என்கிறீர்கள் ஓகே, நாகர்கோவிலில் ஒருவன் மீது இதே குற்றசாட்டு இருக்கிறதே அவனுக்கு என்ன தண்டனை கிடைத்தது சொல்லமுடியுமா?
நீதி துறையில் தலையிடும் உரிமை அரசிற்கு இல்லை என வெளுத்து எடுத்தார். மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி வைரமுத்துவையும் ஆளும் அரசையும் விமர்சித்த போது நெறியாளர் தம்பி தமிழரசனின் முகம் போன போக்கு இணையத்தில் கடும் கிண்டலுக்கு உள்ளாகி வருகிறது.