
தமிழக அரசியலில் கடந்த சில நாட்களாகவே சங்கி என்ற வார்த்தை அதிக அளவில் சர்ச்சையாகி வருகிறது. அதாவது தமிழகத்தின் ஆளும் கட்சியான திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் சங்கி என்று பாஜகவை மறைமுகமாக குறிப்பிட்டு வருகிறது. இந்த அடைமொழிகளை சமூக வலைதளங்களில் அதிகமாக ட்ரோல் செய்வதற்கும் அதிமுக மற்றும் திமுகவினர் பயன்படுத்தி வருகின்றனர். எதற்காக இந்த அடைமொழி வைக்கப்பட்டது என்பது குறித்தும் பேசப்பட்ட பொழுது பாஜக ஒரு இந்து சமயத்துவ கட்சி அதனால் இப்படி கூறுவதாக தகவல்கள் கிடைத்தது. ஆனால் அரசியல் வட்டாரங்களிலும் சமூக வலைதளங்களிலும் சாதாரணமாக ஒருவர் கோவிலுக்கு சென்றால் கூட அவரை சங்கி என்று கூறும் அளவிற்கு இந்த வார்த்தை பெரும் அளவில் பேசு பொருளாக மாறி உள்ளது. இதனால் பலரும் தங்களது நம்பிக்கையை வெளிக்காட்டுவதிலும் தயக்கம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் இந்த வார்த்தை மிகப் பெரும் அளவிற்கு சர்ச்சையாக பேசப்படுவதற்கு மிக முக்கிய காரணமாக முதலில் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இயக்கத்தில் லால் சலாம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனது தந்தையை குறித்தும் சங்கி என்ற வார்த்தை குறித்தும் அவர் பேசியது! தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இதே கேள்வியை பத்திரிக்கையாளர்கள் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசனிடம் முன்வைத்த பொழுது பாஜகவிற்கு எதிரான கொள்கைகளை வைத்திருப்பவர்களும் எதிர் கருத்தை கொண்டிருப்பவர்களும் எங்களை இழிவுபடுத்த வேண்டும் என்று அவர் நோக்கத்தில் கூறப்படும் அடைமொழிச் சொல்லாகவே சங்கி என்பதை பயன்படுத்துகின்றனர். இந்த வழக்கம் ரொம்ப நாளாகவே இருந்து கொண்டு தான் வருகிறது, ஆனால் சங்கி என்பதற்கு நான் அர்த்தம் சொல்கிறேன் இந்த நாட்டை நேசிக்கின்ற இந்த நாட்டின் நலனில் சமரசம் செய்து கொள்ளாத உண்மையான குடிமக்கள் தான் சங்கி அப்படி எங்களை நீங்கள் சங்கி என்று சொன்னால் எங்களுக்கு பெருமை தான் என்றார். இதுவும் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனை ஒட்டியே தனியார் தொலைக்காட்சிகளில் இருந்து வந்து தமிழ் சினிமாவின் சிறந்த காமெடியனாக பிரபலமாகி தற்போது நடிகராக பல படங்களில் நடித்து வரும் சந்தானம் தனது புதிய படத்தில் வரும் ஒரு டயலாக் ரிலீஸ் ஆக பதிவிட்டு சமூக வலைதளங்களில் வெளியிட்டார் அதுவும் வைரலாகி சந்தானத்தை பலர் சங்கி என்று டிரோல் செய்ய ஆரம்பித்தனர்.
இந்த நிலையில், சந்தானம் நடிப்பில் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதை அடுத்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவை பட குழு ஏற்பாடு செய்திருந்தது அந்த விழாவில் சந்தானம் பத்திரிகையாளர்களை சந்தித்த பொழுது எதற்காக இந்த பெயரை வச்சிருக்கீங்க ஈவேராக குறிப்பிட மாதிரி இருக்கு என்று பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்டபொழுது இந்த படம் பார்த்தீர்களா அண்ணா! எனக்கும் இந்த படத்தோட டைரக்டருக்கும் கவுண்டமணி சாரை ரொம்ப பிடிக்கும் அவரோட டயலாக் தான் இந்த வடக்குப்பட்டி ராமசாமி அப்படிங்கிறது டிக்கிலோனாவும் அவருடைய டயலாக் தான் அதனால தான் நாங்க அத படத்தோட பெயரா வச்சிருக்கோம் என்று கூறினார். அதோடு மற்றொரு பத்திரிகையாளர் சோசியல் மீடியாவில் ஒரு வீடியோ பரப்பி இருந்தீங்களே அப்போ நீங்களும் சங்கி என்று சொல்றாங்க அதுக்கு என்ன சொல்ல வரீங்க என்று கேட்ட பொழுது என் சிறு வயதில் என்னுடைய சிறுவயது காதலி சங்கீதாவை நான் சங்கி சங்கி என்று தான் நான் கூப்பிடுவேன் அதற்காக அவர் சங்கி ஆகிவிடுவாரா! என்று கேட்டார் அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் உங்கள் பெயர் என்ன என்று கூறியதற்கு அவர் அண்ணாமலை என்று கூற அதற்காக நீங்கள் ஏடிஎம்கேயில் இருக்கிறீர்கள் என்று நான் கூற முடியுமா! என்று பத்திரிகையாளர்கள் வைத்த அனைத்து கேள்விகளுக்கும் சந்தானம் தன் ஸ்டைலில் கமெண்ட்களை அள்ளி வீசிய வீடியோக்களை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.