24 special

சமயம் பார்த்து ஹெச்.ராஜா அடுத்த அடி... வேற லெவல் சம்பவமாமே...

h raja
h raja

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட்டிய மாநாட்டில் உதயநிதி பேசியதுதான் இன்று வரை திமுகவை கடும் சர்ச்சையில் சிக்க வைத்து வருகிறது. சனாதனத்தை ஒழிப்போம் என உதயநிதி பேசிய அதே நிகழ்ச்சியில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, எம்.பி திருமாவளவன், திமுக எம்பி ஆ.ராசா ஆகியோர் கலந்துகொண்டனர். கலந்துகொண்டு சனாதனத்தை ஒழிப்பேன் என பேசியது திமுகவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. 


அது மட்டுமில்லாமல் INDI கூட்டணியில் இருந்து திமுகவை ஒதுக்கி வைக்கலாமா என்கின்ற அளவுக்கு இந்த சனாதன விவகாரம் திமுகவிற்கு சர்ச்சையை ஏற்படுத்தியது, மேலும் இதற்கான வழக்கும் நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் எங்கே அது தனது பதவிக்கு ஆபத்து ஏற்படுத்துமோ என அஞ்சி 'நானும் ஐயப்ப பக்தர் தான்' என சனாதன விவகாரத்தில் நீதிமன்றத்தில் அமைச்சர் சேகர்பாபு தரப்பு தெரிவித்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் தெலுங்கானா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்கள் நடைபெற்றுவரும் நிலையில் பிரதமர் மோடி கூட INDI கூட்டணி சனாதனத்தை அழிக்கவந்த கூட்டணி எனவேறு பிரச்சாரம் செய்துவருகிறார். அதுவும் INDI கூட்டணிக்கு பின்னடைவுதான் என பார்க்கப்படுகிறது...

இப்படி சனாதனம் என்கின்ற ஒற்றை வார்த்தையில் கருத்து சொல்லிவிட்டு இன்றுவரை அதன் சிக்கலில் சிக்கி தவிக்கும் திமுகவை அதே ஒற்றை சனாதன வார்த்தையை வைத்து இன்று ஹெச்.ராஜா சம்பவம் செய்துள்ளார். இன்று கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது கார்த்திகை தீப நாளை ஒட்டி கார்த்திகை தீப பிரம்மோற்சவ திருவிழா இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடைபெற்று வருகிறது. இதில் பத்து நாட்கள் உற்சவம், மூன்று நாள் தெப்ப திருவிழாவும் அதனை அடுத்து சண்டிகேஸ்வரர் உற்சவமும் நடைபெறும். இந்துக்களின் பண்டிகைகளில் கார்த்திகை தீபம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பண்டிகையாக பார்க்கப்படுகிறது.

தீபாவளிக்கு பிறகு வரும் இந்த கார்த்திகை தீப பண்டிகையை முன்னிட்டு அனைவர் வீடுகளிலும் தீபம் ஏற்றி வைத்து கொண்டாடுவது மட்டுமின்றி இது மங்களகரமான நாள் என அனைவராலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த கார்த்திகை தீப திருநாளுக்கு அனைத்து தலைவர்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர், இப்படி அனைத்து தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவிக்கும் பொழுது அந்த வாழ்த்தில் கூட திமுகவிற்கு ஒரு சம்பவம் செய்துள்ளார் ஹெச்.ராஜா. கார்த்திகை தீபத்திருநாளுக்கு கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்களை கூறும் பொழுது ஹெச்.ராஜா தனது எக்ஸ் பதிவில் 'அனைவருக்கும் சனாதன பண்டிகையாம் கார்த்திகை தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள், இந்த கார்த்திகை தீபத்திருநாளில் அனைவரது இல்லங்களிலும் இருள் நீங்கி ஒளி பெற்றிட இறைவனை வேண்டுகிறேன்' என தெரிவித்துள்ளார். 

ஏற்கனவே சனாதனம் என்கின்ற ஒற்றை வார்த்தையே தான் திமுகவை பாடாய்படுத்தி வருகிறது, இந்த நிலையில் வாழ்த்து கூறுகிறேன் என்ற பெயரில் ஹெச் ராஜா செம்மையான சம்பவம் செய்துவிட்டார், வழக்கம்போல் இந்த விவகாரம் கார்த்திகைக்கு வாழ்த்து சொல்லாத திமுக தரப்பிற்கு கண்டிப்பாக பின்னடைவை ஏற்படுத்தும் எனவும் கூறப்படுகிறது.நாடு முழுவதும் INDI கூட்டணியை சனாதன தர்மத்தை வைத்து பிரதமர் அடித்து வரும் நிலையில் விசேஷங்களுக்கு வாழ்த்து கூறுகிறேன் என ஹெச்.ராஜாவும் இந்த விவகாரத்தை சமூக வலைதளத்தில் கிளப்பி விட்டுள்ளார். சனாதனத்தை எதிர்க்கிறேன் என்ற வெளிப்படையாக கூறிவிட்டு கார்த்திகை திருநாளுக்கு வாழ்த்து சொல்லாத திமுகவை இழுத்து சமூக வலைத்தளத்தில் இணையவாசிகளை விமர்சனம் செய்ய வைத்துள்ளார். இந்த விவகாரமும் தற்பொழுது திமுகவிற்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது என விமர்சனங்கள் எழுகின்றன.