கதறு கதறு என கதறும் டாக்டர் சரவணன்...!பாஜக அருமை தெரிகிறதா?மதுரையை சேர்ந்த சரவணன் மகனின் திருமணமும் அதனை ஒட்டி வெளியான தகவலும் தான் தற்போது மதுரை அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறி இருக்கிறது, அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக மாறி இருப்பதாக புலம்பி தவித்து வருகிறாராம் டாக்டர் சரவணன்.
மதுரையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் பாஜகவினர் இடையே நடைபெற்ற வாக்குவாதம் அடுத்த கட்டத்திற்கு சென்றது, அப்போது செய்தியாளர்களை சந்தித்த சரவணன் பழனிவேல் தியாகராஜன் முதலில் எம்.பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலை சந்திக்கட்டும் வெற்றி பெற முடியுமா என சவால் விடுத்த சரவணன்.
அன்றைய தினமே நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை சந்தித்து நான் செய்தது தவறு என பல்டி அடித்தார், இதனையடுத்து பாஜகவில் இருந்து சரவணன் நீக்க படுவதாக அண்ணாமலை அறிவித்தார். அது சாதாரண அறிவிப்பாக இல்லாமல் பாஜகவில் இருந்து சரவணன் நிரந்தரமாக நீக்கப்படுவதாகவும் அண்ணாமலை குறிப்பிட்டார்.
இதையடுத்து சரவணனும் பாஜகவினரை விமர்சனம் செய்து செய்தியாளர் சந்திப்பு, பேட்டி என கொடுத்தார். ஒரு கட்டத்தில் பாஜகவினர் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார் சரவணன் ஆனால் சரவணன் கேள்விக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்காமல் விலகி வேடிக்கை பார்த்தது பாஜக.
சரவணன் தன் உடலில் ஓடுவது திராவிட ரத்தம் என்றெல்லாம் அதிரடியாக பேசினார், எப்படியும் திமுகவில் தன்னை சேர்த்து கொள்வார்கள் எனவும், நாடாளுமன்ற தேர்தலில் மதுரை தொகுதியில் போட்டியிட வாய்ப்புகள் கிடைக்கும் என்றெல்லாம் தனக்கு நெருக்கமான நபர்களிடம் கூறி இருந்தாராம் சரவணன்.
ஆனால் தற்போது வரை சரவணனை திமுகவில் அடிப்படை உறுப்பினர்கள் பொறுப்பில் கூட சேர்த்து கொள்ள திமுக தலைமை தயாராக இல்லையாம், மேலும் மதுரையை சேர்ந்து அமைச்சர் மூர்த்தி, எம்.எல்.ஏ. தளபதி இன்னும் பிறரும் சரவணன் திமுகவில் சேருவதால் கட்சிக்கு எந்த பயனும் இல்லை வரிசையாக கட்சி மாறுவதை பிழைப்பாக கொண்டுள்ள சரவணன் நாளை வேறு கட்சிக்கு மாறமாட்டார் என்பதில் என்ன நிச்சயம் இருக்கிறது என கேள்விகள் எழுப்புகின்றனராம்.
இந்த சூழலில்தான் தனது மகன் திருமண விழாவை கணக்கில் கொண்டு பல்வேறு அரசியல் தலைவர்களை நேரில் சந்தித்து அழைத்தாராம் சரவணன் ஆனால் ஆளும் திமுகவை சேர்ந்த பலர் கம்பி நீட்டி விட்டனராம். பாஜகவில் இருக்கும் வரை மதுரையில் கள அரசியல் செய்து அதிரடியாக வளம் வந்த சரவணன் இப்போது பல்லு போன பாம்பு போன்று அரசியல் எதிலும் இன்றி அமைதியாக வேடிக்கை பார்க்கும் நிலைக்கு சென்று இருக்கிறார் என அவருக்கு நெருக்கமானவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எது எப்படியோ இப்போது வருத்தப்பட்டு பயன் என்ன பாஜக அருமை இனி வரும் காலங்களில் இன்னும் அதிகமாக தெரியவரும் என கமலாலய வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
எது எப்படியோ மொத்தத்தில் கட்சி விட்டு கட்சி மாறிய சரவணன் இப்போது எந்த கட்சியும் சேராதவர் என்ற புதிய கட்சியை தொடங்கினாலும் ஆச்சர்யம் இல்லை என்கின்றனர் மதுரை வட்டார அரசியல் வாதிகள்.