24 special

அண்ணாமலையிடம் 500 கோடி கேட்கும் திமுக..! அதற்கு மேல் “1 ரூபாய்” போட்டுத்தர சொன்ன அண்ணாமலை..!

annamalai , mkstalin
annamalai , mkstalin

திமுகவினரின் சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிட்ட காரணத்தால் 500 கோடி இழப்பீடு கேட்டு திமுக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதிலிருந்தே ஆளும் திமுக 


அரசை கடுமையாக விமர்சித்து வந்தார். பின்பு திமுகவின் ஆட்சியில் ஊழல் அதிகளவில் நடைபெற்றுள்ளதாக தெரிவித்த அவர் செய்தியாளர்கள் முன்னிலையில், திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிடுவேன் என அவ்வப்போது தெரிவித்தும் வந்தார். அதனை தொடர்ந்து, அண்ணாமலை திமுகவினரின் சொத்து பட்டியலை கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி பொது வெளியில் வெளியிட்டிருந்தார். இந்த பட்டியலில் உள்ள திமுக அமைச்சர்கள்மற்றும் எம்.எல்.ஏக்கள் என 10 நபர்கள், சுமார் 1.34 லட்சம் கோடி அளவிற்கு சொத்துக்களை வைத்துள்ளதாகவும் அந்த பட்டியலில் தெரிவிக்கப்பட்டது. 

இதுகுறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி அவர்கள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில்  “திமுகவினரின் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நீங்கள் வைத்தற்காக ரூ.500 கோடி இழப்பீடு தர வேண்டும். இல்லை என்றால் தான் செய்தது தவறு என பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்”.இதற்கு பதலடி கொடுத்து பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டதாவது: திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி அவர்கள் சுமார் 500 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு சட்ட அறிக்கையை அனுப்பியுள்ளார்.  “கோடிக் கணக்கில் சொத்துக்களை குவித்து வைத்திருக்கும் திமுகவினருக்கு மேலும் ரூ.500 கோடி கேட்கிறார்”. 


பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக நான் வெளியிட்ட திமுகவினரின் ஊழல் பட்டியலை பார்த்தற்கு முதலில் உங்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நான் வெளியிட்ட கானொளியின் இணைப்பையும், இணையதளத்தின் முகவரியையும் சேர்த்து நீங்கள் சட்ட அறிக்கை அனுப்பியதற்கும் நன்றிகளை தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

மேலும், ஏப்ரல் 14 ஆம் தேதி திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்டத்தில் எனக்கு மகிழ்ச்சி. நீங்கள் எனக்கு அனுப்பிய சட்ட அறிக்கையில், திமுகவினருக்கு சொந்தமான 3417.18 கோடி ரூபாய் மதிப்பிளான பள்ளிகளும், ரூ.34,184.71 கோடி மதிப்பிலான கல்லூரி மற்றும் பல்கலை கழகங்களின் மதிப்பும் பொய்யானது என தெரிவித்துவிட்டு அடுத்த வரியிலயே, ஒருவர் திமுக உறுப்பினராக அல்லது நிர்வாகியாக இருந்தாலும், அவருக்குச் சொந்தமான சொத்துக்கள் மற்றும் அதனுடைய நிறுவனங்கள் எல்லாம் திமுக கட்சியின் சொத்தாக மாறாது எனவும் குறிப்பிட்டுள்ளீர்கள்.

இது திமுக சொத்து கிடையாது. அந்த சொத்துப்பட்டியலில் இருக்கும் விவரம் பொய்யானது என்று சொல்வதற்கு மட்டும் திமுக அமைப்புச் செயலாளருக்கு உரிமை இருக்கிறதா?, கல்லூரி நடத்தி இவர்கள் அனைவரும் வசூலிக்கும் கல்விக் கட்டணத்தை 

திமுகவின் தலைமை அலுவலகத்திற்கு அனுப்புவதாக நான் தெரிவிக்கவில்லை. ஆர்.எஸ். பாரதி அவர்கள் ஏதாவது குற்றம் சொல்ல வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.“கடந்த திமுக ஆட்சியில் சென்னை மெட்ரோ ரயில் தொடர்பாக நடைபெற்ற ஊழல் குறித்த அனைத்து ஆதாராங்களும் எங்களிடம் இருக்கிறது. அதனை நாங்கள் விரைவில் சிபிஐயிடம் கொடுக்க உள்ளோம் என்றார். 

மேலும் ஆருத்ரா நிதி நிறுவனத்திடம் இருந்து நான் 84 கோடி ரூபாய் பெற்றுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளீர்கள். என் மீதும், பாரதிய ஜனதா கட்சியின் மீதும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பொதுவெளியில் வைத்தற்காக, நீங்கள் 500 கோடியே 1 ரூபாய் இழப்பீடாக தரவேண்டும். அடுத்த 48 மணி நேரத்தில் என் மீதும் என்னுடைய கட்சியின் மீதும் சுமத்திய ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்காவிட்டால், திமுக அமைப்பு செயலாளர் கே.எஸ். பாரதி மீது வழக்கு தொடரப்போவதாகவும்  தெரிவித்துள்ளார்”.

மேலும்  “நீங்கள் அனுப்பியுள்ள சட்ட அறிக்கைக்கு பதிலும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைத்தமைக்கும் இழப்பீடு கோரியும் நாங்கள் விரைவில் சட்ட அறிக்கையை உங்களுக்கு அனுப்புவோம். திமுக என் மீது எடுத்துள்ள சட்ட நடவடிக்கைக்கு நான் தயார் நிலையில் இருக்கிறேன் என்று பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கையில் தெரிவித்துள்ளார்”.