24 special

விஜய்தாரணிக்கு அடுத்து பாஜகவில் இணைகிறாரா ஜோதிமணி...!

vijayatharani, jothimani
vijayatharani, jothimani

லோக்சபா தேர்தலுக்கான அறிவிப்புகள் மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் வெளியாகும் என்ற செய்திகள் வெளியாகி வருகிறது மேலும் தேர்தல் குறித்த நடவடிக்கைகள் அனைத்தையும் தேர்தல் தலைமை ஆணையம் மேற்கொண்டு வரும் செய்திகளும் அவ்வப்போது வெளியாகி வருகிறது. இந்த நிலையில் அரசியல் போக்கு மற்றும் களமானது பாஜகவுக்கு சாதகமானதாகவும் மீண்டும் பாஜக ஹக்ட்ரி வெற்றியை பெற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையினால் ஆட்சியை நிறுவும் என்றும் கூறப்படுகிறது இவற்றை உறுதி செய்யும் வகையிலான செய்திகளும் கருத்துகணிப்பு முடிவுகளும் வெளியாகி இருப்பது நாட்டின் மற்ற கட்சிகளால் எதிர்க்கட்சிகள் அனைத்திற்கும் பதற்றத்தையும் பின்னடைவையும் ஏற்படுத்தி உள்ளது. இதனால் காலங்காலமாக ஒரு கட்சியில் இருந்துவரும் மூத்த தலைவர்கள், எம் பி, எம் எல் ஏக்கள், தொண்டர்கள் என பெரும்பாலானோர் தங்களது கட்சியின் போக்கை பார்த்தும் அரசியல் சூழ்நிலையை பார்த்தும் அடுத்த கட்ட நடவடிக்கைகளை நாம் உடனடியாக செய்ய வேண்டும் இல்லை என்றால் அரசியலில் நமது நிலைமையும் பரிதாபமாகிவிடும் என்பதை உணர்ந்து பாஜக பக்கம் திரும்பி வருகின்றனர். 


இப்படி காங்கிரஸ் மற்றும் சில கட்சியின் நீண்டகால எம்எல்ஏ, எம்.பி பதவிகளில் வகித்து வந்தவர்கள் பாஜகவில் இணையும் செய்திகள் தற்போது அதிக அளவில் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏவாக தொடர்ந்து விளவங்கோடு தொகுதியில் வெற்றி பெற்று வரும் விஜயதாரணி காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அதோடு பத்திரிகையாளர்களையும் சந்தித்து காங்கிரஸில் பெண்களுக்கு பதவி தர மறுப்பது உண்மைதான் என்றும் பல ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியில் பணியாற்றியுள்ளேன் பெண்களுக்கு உண்டான தளம் என்பது காங்கிரஸ் கட்சியின் மறுக்கப்பட்டதாகவே இருக்கிறது என்னை தவிர வேறு எந்த பெண்ணாலும் சட்டமன்ற உறுப்பினராக கூட ஆக முடியவில்லை என்னையும் இதில் தக்க வைத்துக் கொள்ள முடியாத நிலை தான் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடாக உள்ளது! கடந்த 7 ஆண்டுகளாக காங்கிரசில் அங்கீகாரம் மறுக்கப்பட்டது. மேலும் பெண்களுக்கு பாஜகவில் தலைமை பண்பு இருப்பதாக உணர்கிறேன்! மத்திய அரசு தமிழகத்தின் வளர்ச்சி மீது கவனம் செலுத்தி வருகிறது அதனாலே காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவை இணைவதாக  கூறினார் விஜயதாரணி! 

இவரைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் அடுத்த பெண் நிர்வாகியாக உள்ள எம்பி ஜோதிமணி விரைவில் பாஜகவில் இணையுள்ளதாக செய்திகள் வெளியானது. ஏனென்றால் காங்கிரஸ் கட்சி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எம்பி ஜோதிமணிக்கு எதிரான கருத்துகள் முன்வைக்கப்பட்டதும் அடுத்த எம்பி தேர்தலில் அவருக்கு சீட்டு வழங்கக் கூடாது என திமுக மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் தங்களது தலைமையிடம் கூறியது ஜோதிமணி தரப்பை அதிர்ச்சி அடைய வைத்தது மட்டுமின்றி தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக செல்வப் பெருந்தகை நியமிக்கப்பட்டதும் ஜோதிமணிக்கு காங்கிரஸ் தலைமை மீது கோபத்தை ஏற்படுத்தியதாகவும் அதனால் பாஜகவில் ஜோதிமணி இணைவார் என்ற பேச்சுகள் உலா வந்தது. இந்த நிலையில், தலைவர் ராகுல் காந்தி நாட்டை காக்க இறுதி யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கும் வேளையில் விஜயதரணி காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்திருப்பது இந்த தேசத்திற்கு செய்யும் மாபெரும் துரோகம் என விஜயதரணியின் கட்சி விலகளுக்கு கரூர் எம்பி ஜோதிமணி கூறிய பதில் இணையத்தில் வைரல் ஆகிறது. 

மேலும் ஒரு பக்கம் ஜோதி மணியும் பாஜகவில் இணையுள்ளார் என்ற செய்தி அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது ஆனால் விஜயதரணி பாஜகவில் இணைந்ததற்கு தேசத்திற்கு செய்யும் மாபெரும் துரோகம் என ஜோதிமணி கூறியுள்ளது சரி கட்ட முடியாதபடி இருக்கிறதே என்ற சந்தேகங்களும் குழப்பங்களும் சில அரசியல் விமர்சகர்களிடையே முன்வைக்கப்பட்டது. அதே நேரத்தில் தலைவர் பதவியை செல்வப் பெருந்தகைக்கு கொடுக்கப்பட்டதால் ஜோதிமணி மிகவும் அப்செட் ஆக இருப்பதாலும் இதனால் அவர் பாஜகவில் இணையுள்ளார் என்ற தகவல் உறுதி செய்யப்படவில்லை ஆனால் இது குறித்த பேச்சு வார்த்தைகள் நடப்பதாகவும் ஜோதிமணி வட்டாரத்தில் கூறப்படுகிறது.