மத்தியில் ஆளும் பாஜகவின் பார்வை தமிழகத்தில் கொஞ்சம் நாளாக சற்று அதிகமாக இருப்பதற்கு காரணம்.. அண்ணாமலை தலைமையிலான தமிழகத்தின் பாஜவின் வளர்ச்சி ஒரு பக்கம், மறுபக்கம் இதையே காரணமாக வைத்துக்கொண்டு மத்திய அமைச்சர்கள் தொடர்ந்து தமிழகத்திற்கு வருகை தந்துகொண்டிருக்கின்றனர். அதிலும் குறிப்பாக சமீபத்தில் பாரத பிரதமர் திண்டுக்கல் வந்ததும், அவரை தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை கமலாலயம் வந்ததும் மிக பெரிய அரசியல் திருப்புனையாக பார்க்கப்பட்டது. இதற்கிடையில் அவ்வப்போது மக்களுக்கு தேவையான மிக முக்கிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் கில்லியாக வலம் வருகிறது பாஜக.
சமீபத்தில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி ஏற்பாடு செய்து இருந்தது தொடங்கி, வந்தே பாரத் ரயில் வரை ஒவ்வொன்றாக நடைமுறை படுத்துகிறது மத்தி அரசு. இந்நிலையில் தற்போது இனி வாரத்திற்கு 7 நாளும் மேட்டுப்பாளையம் - கோயம்புத்தூர் இடையே ரயில் சேவை இருக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு
இணை அமைச்சர் முருகன், மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கு தமிழக மக்கள் சார்பில் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டு உள்ளார்
அதன் படி, மேட்டுப்பாளையம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அப்பகுதி மக்களின் அன்றாட பயன்பாட்டிற்காகவும், தினசரி கல்லூரி பயிலும் மாணவர்களின் தேவையை நிறைவு செய்யும் வகையில் மேட்டுபாளையம் - கோயம்புத்தூர் வரை செல்லும் ரயில் இனி வாரத்தின் 7 நாளும் இயக்கப்படும் தினசரி சேவையை அதிகரிக்க ஒப்புதல் வழங்கிய மத்திய ரயில்வே துறை அமைச்சர் திரு. அஷ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கு தமிழக மக்கள் சார்பில் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்
- மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன்
என அறிக்கை விட்டுள்ளார்.