24 special

அடுத்த அதிரடி.! உலகிலேயே மிக பெரிய பைரவர் சிலை தமிழகத்தில்.. சைலண்டா வேலை செய்து இப்ப கும்பாபிஷேகம்.! ஒன்று சேரும் இந்துக்கள்!


39 அடி உயரம்; 650 கிலோ எடை; உலகிலேயே மிகப்பெரிய பைரவர் சிலையுள்ள கோயிலுக்கு கும்பாபிஷேகம் எப்போது தெரியுமா?  உலகிலேயே மிகப்பெரிய பைரவர் கோயில் கும்பாபிஷேகம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு அருகே ராட்டைசுற்றிபாளையத்தில், கால் பெருவிரல் ரேகை ஜோதிடர் விஜய் சுவாமி என்பவர் பைரவருக்கு கோவில் கட்டியுள்ளார்.கோவிலின் முன்வாயிலில் 1 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் 7 டன் எடையுடன் 39 அடி உயரத்தில் நிறுவப்பட்ட மிக பிரமாண்டமான கால பைரவர் சிலை யுனிக் புக் ஆப் வோர்ல்டு ரெக்கார்டு புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது என்பது கூடுதல் தகவல்.




‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்ற ஒளவையார் மொழிக்கு ஏற்ப ஊர் தோறும் கோயில்கள் நிறைந்த ஆன்மீக பூமியாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. தஞ்சை மன்னர் தொடங்கி பல்லவர்கள் காலம் வரை கட்டப்பட்ட கோயில்கள் ஏராளமாக இருந்தாலும், ஆன்மீக சிந்தனை மிக்கவர்களும், நன்கொடையாளர்களும் ஆன்மீகத்தையும், சிற்பக்கலையையும் பறைசாற்றும் வகையிலான புதிது புதிதாக கோயில்களை கட்டமைத்துள்ளனர். அந்த வகையில் தமிழகத்தில் உலகிலேயே மிகப்பெரிய பைரவர் சிலையுடன் உருவாகி வரும் காலபைரவர் கோயில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 


மிகப்பெரிய பைரவர் ஆலயம்: ஈரோடு மாவட்டம் காங்கேயம் பிரதான சாலையில் பயணித்தால் அவல்பூந்துரை இராட்டை சுற்றிப்பாளையத்தில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது ஸ்வர்ண ஆஹர்ஷண பைரவர் ஆலயம். இந்த ஆலயத்தின் கட்டுமான பணிகள் கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது கும்பாபிஷேகத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் வேகமெடுத்துள்ளது. இந்த கோயிலில் இதுவரை எங்கும் காணாத அளவிற்கு அறுபத்து நான்கு பைரவர்களும் ஒரே இடத்தில் அமைந்துள்ளது. 

அத்துடன் உலகிலேயே முதன் முறையாக மிகவும் பிரம்மாண்டமான 39 அடி உயரமுள்ள பைரவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் 650 கிலோ எடையுள்ள பஞ்சலோக சிலை unique book of world record எனும் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இக்கோவிலின் மூலவரான ஸ்வர்ண ஆஹர்ஷண பைரவர் ஆரோக்கியத்திற்கும் செல்வ வளத்திற்கும் ஆன அட்சய பாத்திரத்தை கையில் ஏந்தியவாறு அமையப்பெற்றுள்ளார்.

கும்பாபிஷேகம் எப்போது? சிவனின் மறு அவதாரமாக கருதப்படும் ஸ்வர்ண ஆஹர்ஷண பைரவர் ஆலயத்தின் திருப்பணிகள் நிறைவடைந்ததை அடுத்து வரும் வரும் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13-ம் தேதி (மாசி 29) திங்கட்கிழமை காலை 10:15 மணிக்கு மஹா கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது.

ஒரு கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டால் மூன்று ஜென்மங்களின் பாவங்கள் தீரும் என்பது ஐதீகம் இதுவரை எந்தக் கோவில் கும்பாபிஷேகத்திலும் இல்லாதவாறு நம் கோவிலில் மக்கள் பார்வையாளராக மட்டுமல்லாமல் தாங்களும் ஒரு அங்கமாக கலந்து கொண்டு அபிஷேக ஆராதனை செய்யும் வாய்ப்பு இருப்பது தனிச்சிறப்பு. 

நான்கு கால பூஜை 1. 10.03.2023 மாசி மாதம் 25-ம் நாள் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு ஸ்வர்ண ஆஹர்ஷண பைரவ பஞ்சலோக சிலைக்கு பொது மக்களால் நெய் அபிஷேகம். 

2.11.03.2023 மாசி மாதம் 27-ம் நாள் சனிக்கிழமை காலை 10 மணிக்கு கணபதி ஹோமத்திற்கு பிறகு முதற்கால பூஜை ஆரம்பம் 3.11.03.2023 மாசி மாதம் 27-ம் நாள் சனிக்கிழமை மதியம் தீர்த்தம் 2:30 மணிக்கு 

அவல்பூந்துறை, ஈஸ்வரன் கோவிலில் இருந்து பைரவர் ஆலயத்திற்கு பொது மக்களால் தீர்த்தம் எடுத்து வருதல் தீர்த்த ஊர்வலம் யானை, குதிரை, கிராமிய நிகழ்ச்சி மற்றும் வான வேடிக்கையுடன் சிறப்பாக நடைபெறும். 

4.12.03.2023 மாசி மாதம் 28-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு இரண்டாம் கால பூஜை மாலை 5 மணிக்கு மூன்றாம் கால பூஜை இரவு 7 மணிக்கு மேல் பாரம்பரிய கும்மித்திருவிழா

5.13.3.2023 மாசி மாதம் 29-ம் நாள் திங்கட்கிழமை காலை 6 மணிக்கு நான்காம் கால பூஜை 10:15 மணிக்கு மஹா கும்பாபிஷேகம் மற்றும் தீபாராதனை 10.03.2023 வெள்ளி முதல் 13.03.2023 திங்கள் வரை அன்னதானம் நடைபெறும் என ஸ்வர்ன பைரவர் பீட அறக்கட்டளை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பாஜக வளர்ந்து வரும் தருணத்தில், தமிழக மக்களின் ஆன்மீக பயணமும் அதிகரித்து உள்ளது. உலக சிறப்பு வாய்ந்த கோவில்களும் அமைந்து இருக்கும் தமிழகத்தில் மீண்டும் உலகிலேயே பைரவருக்கு மிக பெரிய சிலை வைத்திருப்பது மக்களை வெகுவாக ஈர்த்து வருகிறது.