திமுக தரப்பு தற்போது அமலாக்கத்துறை ரெய்டு, வருமானவரித்துறை ரெய்டு மேலும் முக்கிய திமுக அமைச்சர்கள் மீது வழக்குகள் போன்ற பதற்ற நிலையில் இருந்து வருகிறது, இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் தேசிய அளவில் கால் ஊன்றி விடலாம் என்று நினைத்த முதல்வர் ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சி கூட்டணியும் ஒன்றும் தேசிய அளவில் பெரிதாக எடுபடவில்லை, இந்த சூழலையில் இன்னும் ஒரு வருட காலத்தில் தேர்தல் நடைபெறம் அதனால் எப்படியாவது நாம் தமிழகத்தில் 39 தொகுதிகளையும் ஜெயித்து விடலாம் என்று நினைத்துக் கொண்டு வரும் தேர்தலிலும் தமிழகத்தின் பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றி விடலாம் என்று இருந்து வரும் திமுகவிற்கு எதிர்பாராத பெருத்த இடி ஒன்று விழ காத்திருக்கிறது என திமுகவின் மூத்த தலைவரும் எம்பியுமான டி ஆர் பாலு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி மத்தியில் ஒன்பது ஆண்டு காலத்தை நிறைவடைந்து பத்தாவது ஆண்டில் காலடி வைத்ததை கொண்டாடும் விதத்தில் பல மாவட்டங்களில் பாஜகவினர் மாநாடுகளை நடத்தி பாஜகவில் ஒன்பது ஆண்டு கால சாதனையை விளக்கி வருகின்றனர், மேலும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்று சாதனை புரிய வேண்டும் என்பதே பாஜகவின் தற்போதைய நோக்கமாக உள்ளது. நாடு முழுவதும் கட்சியின் நிர்வாகிகளையும் தொண்டர்களையும் தேர்தல் பணிகளை முழுவீச்சில் நடத்த ஆலோசனை கொடுத்து ஒவ்வொரு மாநிலத்திலும் தங்கள் வெற்றிக்கான இலக்கை நிர்ணயித்து வருகின்றனர்.
மறுபுறம் எதிர்க்கட்சியினரும் ஒன்றுகூடி தேசிய அளவில் பாஜகவிற்கு எதிராக கூட்டமிட்டு அடுத்த முறை பாஜகவை எப்படியும் வெற்றிபெற வைக்க விடக்கூடாது என்ற முடிவில் இருந்து வருகின்றனர். சரிக்கு சமமான போட்டி இந்திய அரசியலில் நிலவிக் கொண்டிருக்கின்ற நிலையில் திமுக மூத்த தலைவரே திமுகவை எச்சரித்த விவகாரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
திமுகவின் மூத்த தலைவரான டி ஆர் பாலு கொரட்டூரில் நடைபெற்ற கருணாநிதி நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார், அப்போதுதான் டி ஆர் பாலு, ‘நீங்கள் எல்லாம் நினைக்கும் படி 2024 ஆம் ஆண்டு தேர்தல் அடுத்த வருடம் மே அல்லது ஏப்ரலில் நடக்காது முன்கூட்டியே நடத்த பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார், அதாவது எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்வதற்கு முன்பாகவே 2024 ஆம் ஆண்டு தேர்தலில் நடத்தி முடித்து விட வேண்டும் என்று பாஜக திட்டமிடுவதாகவும் அதனால் யாரும் ஏமாந்து விடாமல் தேர்தல் வேலைகளை திறம்பட நடத்த வேண்டும் எனவும் திமுகவிற்கு எச்சரிக்கை அறிவிப்பை தெரிவித்துள்ளார். மேலும் இந்த வருட இறுதிக்குள் அதாவது டிசம்பர் மாதத்தில் தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளது என்றும் டி ஆர் பாலு கூறியது திமுகவினரின் தலையில் இடியை இறக்கியது போல் அதிர்ச்சியளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏனெனில் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருட காலம் உள்ளது, பழைய வேட்பாளர்களை வேறு தொகுதிக்கு மாத்தி, ஏற்கனவே ஒரு தொகுதியில் நின்று வெற்றி பெற்ற வேட்பாளர்களை மீண்டும் நிற்க வைக்காமல் புதிய வேட்பாளர்களை பெரும்பாலான தொகுதியில் நிற்க வைத்து வெற்றி பெற வைக்கலாம் என்று திட்டம் திட்டி அதன் முன்னேற்பாடு வேலைகளில் திமுக முனைப்பு காட்டி வருகின்ற சமயத்தில் டி ஆர் பாலு இப்படி கூறியது ஒட்டுமொத்தமாக அனைவரையும் மனம் தளர செய்துள்ளதாக தெரிகிறது. மேலும் தமிழகத்தில் பாஜக குறைந்தது 25 தொகுதிகளாவது ஜெயிக்கும் என்று அண்ணாமலை தினமும் கங்கணம் கட்டிக்கொண்டு வேலை பார்த்து வருகிறார், இந்த நிலையில் டிசம்பரில் தேர்தல் வந்தால் நமது சோலி அவ்வளவுதான் முடிஞ்சிருச்சு என்று திமுகவினர் தற்பொழுது பயத்தில் இருந்து வருகின்றனர்.