24 special

அரசியல் இமேஜை டோட்டல் டேமேஜ் செய்த மாமன்னன்...!போட்சா என கதறும் உதயநிதி...!

Udhayanidhi,
Udhayanidhi,

மாமன்னன் திரைப்படம் கடந்த பக்ரீத் பண்டிகை அன்று அனைத்து திரையரங்குகளிலும் வெளியானது.இதில் உதயநிதி ஸ்டாலின்  நடித்துள்ளார். இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரித்துள்ள  நிலையில் கர்ணன், பரியேறும் பெருமாள் முதலிய படங்களை இயக்கிய இயக்குனர் மாரி செல்வராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார். மேலும் இந்தப் படத்தின் மையக்கருத்தாக சமூக நீதி, சாதிய அளவிலான பாகுபாடுகள், சமூகத்தில் நடக்கும் அவலங்கள் இடம் பெறுவதால் சர்ச்சையை கிளப்பியுள்ளது.


இந்த மாமன்னன் திரைப்படத்தை மாரி செல்வராஜ் திமுகவிற்கு‌ வைத்த ஆப்பு என்றே இணையத்தில் விமர்சிக்கின்றனர். திமுக ஆட்சியின் அவலங்களை எடுத்துக்காட்டி உதயநிதி ஸ்டாலினை வைத்து திமுகவிற்கு பாடம் புகட்டும் வகையில் படம் எடுத்து இருப்பதாக சமூக வலைதளங்களில் அதிமுக தரப்பில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. மேலும் அரசியலை மையமாக வைத்து அனைவரும் சமம் என்ற சமூக நீதிக் கொள்கையை கருத்தாக கொண்டு  எடுத்திருக்கும் படத்தில் உதயநிதி நடித்திருப்பது இருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மாமன்னன் திரைப்படம் வெளியான முன்னரே ஆடியோ லாஞ்சின் போதே சர்ச்சையை ஏற்படுத்தியது. படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் ஆடியோ லாஞ்சின் போது தேவர் மகன் படத்தை பற்றி பேசியதை தொடர்ந்து அவர்  13 வருடங்களுக்கு முன் கமலஹாசனை பற்றி எழுதிய கடிதம் இணையதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தென் மாவட்டங்களில் மாமன்னன் திரைப்படம் வெளியிடக்கூடாது என்ற போர்க்கொடி சில சமுதாய மக்களால் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

இப்படி பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வெளியான மாமன்னன் திரைப்படம் வெளியான பின் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மாமன்னன் திரைப்படத்தில் வரும் ஒரு குறிப்பிட்ட மைய கதாபாத்திரம் முன்னாள் சபாநாயகர் தனபால் அவர்களை குறிப்பது போன்றும், மேலும் அவர் அரசியல் ரீதியாக அவர் சார்ந்த சமுதாய ரீதியாக அவமதிக்கப்பட்டார் எனவும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. மாமன்னன் படத்தில் சபாநாயகர் பதவிக்கு ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவதாக கதைகளும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. 2012 ஆம் ஆண்டு சபாநாயகராக ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த தனபால் தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து படம் பார்த்தவர்களிடையே இது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

மேலும் தனபால் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அவர் வீட்டில் சாப்பிடுவதற்கு கூட சக கட்சியினர் மறுத்துள்ள போது அவருக்கு உணவு துறையில் அமைச்சராகும் பதவி கிடைத்தது எனவும், பின் 2011 சட்டமன்ற தேர்தலில்வெற்றி பெற்று அவரை கவுரவிக்கும் வகையில் துணை சபாநாயகர் பதவி அதிமுக முன்னாள் பொது செயலாளரான ஜெயலலிதா அவர்களால் வழங்கப்பட்டது எனவும் தகவல்!

இந்த நிலையில் தாழ்த்தப்பட்ட சமூகத்தின் முதல் சபாநாயகராக தனபால் எப்படி நியமிக்கப்பட்டாரோ மாமன்னன் படத்திலும் இதே போன்ற காட்சி எடுக்கப்பட்டுள்ளதால் தற்பொழுது மாமன்னன் திரைப்படம் பேசுபொருளாக மாறியுள்ளது. இதனை தொடர்ந்து இயக்குனர் ரஞ்சித் தனது ட்விட்டர் பதிவில் மாமன்னன் படத்தை பற்றி குறிப்பிட்டுள்ளார். 'மாமன்னன் திரைப்படம், பட்டியலின மக்களின் சட்டமன்ற உறுப்பினர்கள், சமூக நீதியை கொள்கையாக கொண்டுள்ள அரசியல் கட்சியாக இருந்தாலும், கட்சியில் உள்ள மற்ற உயர் வகுப்பினர் சாதி அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளை அவர்களுக்கு எப்படி நிகழ்த்துகிறார்கள் என்பதை அப்பட்டமாக காட்சிப்படுத்தி இருக்கிறது. உண்மையாகவே தனித்தொகுதி MLAக்களுக்கு அதிகாரம் என்னவாக இருக்கிறது? ஏன் பட்டியலின மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க பயப்படுகிறார்கள்? சமூக நீதி பேசுகிற கட்சிகளில் இருந்தும் ஊமைகளாக இருப்பதற்கான காரணம் என்ன?அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் திமுக கட்சியில் இன்றுவரை பெரும் சவாலாக இருக்கும் சாதி பாகுபாட்டை அவரும் அறிந்தே இருப்பார், அதை களைவதற்கான வேலையை இத்திரைப்படத்தின் வாயிலாக ஆரம்பிப்பார் என்று நம்பிக்கை கொள்வோம்' என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இப்படி ஊமைக்குத்தாக திமுகவில் இருக்கும் சாதிய பாகுபாட்டை கலையுங்கள் பின்னர் திரையில் புரட்சி பேசலாம் என்கிற ரீதியில் இயக்குனர் பா.ரஞ்சித் உதயநிதியை சுட்டிக்காட்டி கேட்டது திமுகவினர் மத்தியிலேயே கோபத்தை ஏற்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, பின்னர் சமாளிக்கும் நோக்குடன் உதயநிதி தனது பதிவில், '`மாமன்னன்' திரைப்படத்தைப் பாராட்டிய இயக்குநர் சகோதரர் பா.இரஞ்சித் அவர்களுக்கு நன்றி. சாதிய அடக்குமுறைகளும் - ஏற்றத்தாழ்வும் கழகம் மட்டுமல்ல, எந்த கட்சிக்குள் இருந்தாலும் அது அறவே ஒழிக்கப்பட வேண்டும்.அனைவருக்குமான சுயமரியாதையை உறுதி செய்ய, தொடர் பரப்புரை செய்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது கழகம்.`பராசக்தி'யில் தொடங்கி மாமன்னன்' வரை கலைவடிவங்களிலும் சமூகநீதி'யைத் தொடர்ந்து உயர்த்திப் பிடித்து வருகிறோம்.  

ஆயிரமாயிரம் ஆண்டு கால சனாதனத்திற்கு எதிராக, சமத்துவம் காண போராடும்  நூறாண்டுகால போராட்டம் இது. இன்னும் முழுமை பெறாத போராட்டமும்கூட. ஒரே திரைப்படத்தின் மூலம் சமூகத்தில் தலைகீழ் மாற்றத்தை நிகழ்த்திவிட முடியாது என்பதையும் நாம் அனைவரும் அறிவோம். இப்பயணத்தில் கழகம் மீதும் என் மீதும் இப்போது நம்பிக்கை கொண்டிருக்கும் சகோதரர் இரஞ்சித் அவர்களுக்கு நன்றி' என பதிவிட்டுள்ளார். 

இப்படி ஏற்கனவே பல விமர்சனங்களை கொடுத்து, வசூல் ரீதியாக அடிவாங்கிய மாமன்னன் படம் திமுகவின் அரசியல் இமேஜையும் டோட்டலாக டேமேஜ் செய்துவிட்டது என்றே கூறலாம்! மொத்தத்தில் உதயநிதி சொந்த செலவில் மாமன்னன் படத்தை எடுத்து திமுகவிற்கு சூனியத்தை தேடிக்கொண்டார் என திரை விமர்சகர்களும், அரசியல் விமர்சகர்களும் தெரிவிக்கின்றனர்.