செந்தில் பாலாஜி வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருவரும் மாறுபட்ட தீர்ப்பு கொடுத்த வேலையில் செந்தில் பாலாஜி மீதான வழக்கு விசாரணையில் எந்த முடிவும் எட்டபடாத சூழல் உண்டாகி இருந்தது.
மேலும் எப்போது தலைமை நீதிபதி புதிய நீதிபதியை வழக்கில் விசாரணைக்கு நியமிப்பார் என்றும் கேள்வி எழுந்த நிலையில் தற்போது உச்ச நீதிமன்றம் சென்னை தலைமை நீதிபதிக்கு உத்தரவு ஒன்றை போட்டு இருக்கிறது.
செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணா்வு மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனுவின் அடிப்படையிலேயே செந்தில் பாலாஜியை அரசு மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.
அந்த இடைக்கால உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கடந்த மாதம் அமலாக்கத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு விசாரிப்பதாக கூறி ஜூலை 4-க்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நிஷா பானுவும், ஆட்கொணர்வு வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி பரத சக்கரவா்த்தி இன்று மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளார்.இதனைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு மனு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, செந்தில் பாலாஜி செல்வாக்கு மிகுந்த நபர் என்பதால், நாள்தோறும் ஆதாரங்கள் அழிக்கப்பட்டு வருகிறது. அவர் மருத்துவமனையில் இருப்பதால் எங்களால் கடமையை செய்ய முடியவில்லை. தாமதப்படுத்தினால் விசாரணை நீர்த்துப்போகும் என்று அமலாக்கத்துறை தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
அமலாக்க துறை வாதத்தை ஏற்று கொண்ட உச்சநீதிமன்றம் ஒரு வாரத்திற்குள் உடனடியாக சென்னை உயர் நீதிகிமன்றத்தின் தலைமை நீதிபதி செந்தில் பாலாஜி வழக்கில் புதிய நீதிபதியை நியமிக்க வேண்டும் எனவும் விசாரனை என்ற பெயரில் நாட்களை கடத்தாமல் இருக்க வேண்டும் எனவும் தற்போது சென்னை உயர் நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு போட்டு இருக்கிறது.
எனவே இதன் மூலம் அதிக பட்சம் 7 நாட்களுக்குள் புதிய நீதிபதி நியமிக்க படுவதுடன் 10 நாட்களுக்குள் செந்தில் பாலாஜி சிறை செல்வது உறுதி என்று அடித்து கூறுகின்றனர் சட்டம் அறிந்தவர்கள். இதற்கு இடையே செந்தில் பாலாஜி பெட்டி படுக்கையை தயார் செய்து கொள்ளுங்கள் எனவும் சிறை செல்வது உறுதி எனவும் பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.