24 special

மேக்கப்பால் தன் தலையில் தானே மண்ணை வாரி அள்ளிப் போட்ட தலைமை ஆசிரியை...

makeup,teacher
makeup,teacher

தற்போது பெண்களிடம் அதிகமாக காணப்படும் ஒரு பழக்கம் சாதாரணமாக பொதுவெளியில் கடை தெருவிற்கு சென்றால் கூட முழு மேக்கப்பில் செல்வது, முன்பெல்லாம் கல்யாணம் அல்லது திரைப்படங்களில் நடிப்பவர்கள் மட்டுமே அதிகளவில் பயன்படுத்தி வந்த ஒப்படை எனப்படும் மேக்கப் பை தற்போது ஒவ்வொரு வீட்டில் உள்ள பெண்களும் தன்னை அழகு படுத்திக் கொள்ள செய்து வருகிறார்கள் இதற்காக அவர்கள் தன்னை அழகு படுத்த வேண்டிய அனைத்து பொருட்களையும் அதிக விலை கொடுத்து வாங்கி வைத்துக் கொள்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி மேக்கப் போடுவதிலும் இன்னும் அதிக பிரபஷனல் ஆக இருக்க வேண்டும் தன்னை கட்டின கச்சிதமாக ஒரு அழகாக மாற்ற வேண்டும் என்பதற்காக பியூட்டி பாடல்களுக்கும் சென்று இரண்டு மணி நேரம் மூன்று மணி நேரம் அமர்ந்து மேக்கப் போட்டுக் கொண்டு பிறகு ஏதேனும் பிறர் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள். 


இதற்காக அவருடன் சொல்லும் எந்த ஒரு ஆண்மகனும் பரிதாபமாக காத்துக் கொண்டிருக்க வேண்டிய நிலை தான் ஏற்பட்டு வருகிறது. இந்த மேக்கப் தற்போதய காலகட்டத்தில் ஒரு வளர்ந்து வரும் தொழிலாகவும் நல்ல பணம் சம்பாதிக்கும் தொழிலாகவும் மாறி வருகிறது ஏனென்றால் சாதாரணமாக திருமணங்கள் மற்றும் ஒரு நேரம் மேக்கப் போடுவதற்கு குறைந்தபட்சம் 6 ஆயிரம் முதல் அதிகபட்சமாக லட்ச கணக்கில் பணம் சம்பாதிக்கிறார்கள் அதனாலயே தற்போதைய பெண்கள் மற்றும் ஏன் சில ஆண்கள் கூட இந்த ப்ரொபஷனல் தேடி படித்து அதில் ஆர்வம் கொண்டு அந்த கலையை கற்பித்து வருகிறார்கள். 

அதுமட்டுமின்றி தன்னை எப்பொழுதுமே அழகாக பார்த்துக் கொள்ள வேண்டும் மேக்கப் கலைந்து விடக்கூடாது ஹேர் ஸ்டைல் கலைந்து விடக்கூடாது என்று நினைக்கும் பல பெண்களை நம்மால் பார்க்க முடிகிறது. மேலும் அவர்கள் தனது பள்ளி மற்றும் கல்லூரி வகுப்பில் இருக்கிறோம் என்பதையும் மறந்து சில நேரங்களில் தன் பாட பையிலே கண்ணாடியை ஒழித்து வைத்து பார்க்கும் சில சம்பவங்களும் நடந்து இருப்பதாக நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.பார்த்திருப்போம்.. ஆனால் அழகின் மீது ஒரு ஆசிரியர் கொண்ட மோகத்தால் மாணவர்களுக்கு எடுக்க வேண்டிய பாடத்தையும் மறந்து வகுப்பிற்கும் சொல்லாமல் முழு நேர மேக்கப் செய்வதை மட்டுமே தனது பணியாக கொண்டு வந்து சம்பவம் தற்போது அம்பலமாகியுள்ளது. அதாவது உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் செயல்பட்டு வரும் ஆரம்பப்பள்ளியின் தலைமை ஆசிரியராக செயல்பட்டு வரும் சங்கீதா சிங் என்ற ஆசிரியை பள்ளிக்கு வரும்போது முழு மேக்கப்பில் வருவதையும் தனது பணி நேரத்தில் வகுப்பிற்கு செல்லாமல் மேக்கப் போடுவதை மட்டுமே தனது முழு பணியாக செய்து வந்துள்ளார். 

அதுமட்டுமின்றி மாணவ மாணவிகளுக்கு வகுப்பு எடுக்க வேண்டிய நேரத்திலும் தனது அறையிலேயே அமர்ந்து மேக்கப் போட்டுக் கொண்டுள்ளார் இதனால் தலைமை ஆசிரியரின் வகுப்பு என்றாலே மாணவர்கள் விளையாட்டும் கூச்சலமாக இருந்துள்ளனர் இதனால் மற்ற வகுப்புகளில் ஆசிரியர்களும் பெருமளவில் இடைஞ்சலை சந்தித்து வந்துள்ளனர். இதனால் மற்ற ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து தலைமையாசிரியரின் செயலை ஆதாரத்துடன் புகார் அளிக்க வேண்டும் என முடிவு செய்து வழக்கம் போல் பள்ளி ஆசிரியை பள்ளிக்கு வந்தவுடன் பள்ளியில் உள்ள கிச்சனுக்கு சென்று பேசியல் போட்டுக்கொள்ள ஆரம்பித்துள்ளார் இதற்காகவே தன்னுடன் ஒரு பியூட்டிஷியன் பெண்ணையும் அழைத்து வந்துள்ளார். 

இதனை கவனித்த உதவி ஆசிரியை அனம் கான் தலைமை ஆசிரியர் சங்கீதாவின் செயலை வீடியோ எடுக்க ஆரம்பித்துள்ளார் மேலும் மற்ற ஆசிரியர்களும் ஒன்றாக சேர்ந்து ஆசிரியை சங்கீதாவை சுற்றி வளைக்க அனம் கான் தொடர்ந்து வீடியோ எடுப்பதை சங்கீதா பார்த்துவிட வீடியோ எடுப்பது தடுக்க நினைத்து அனம் காலை கடிக்க ஆரம்பித்துள்ளார் இருப்பினும் அவரது கடிகை பொறுத்துக் கொண்டு வீடியோவை தவறவிடாமல் போலீசுக்கும் பள்ளி கல்வித்துறைக்கும் ஆதாரத்துடன் சங்கீதா மீது புகார் அளித்துள்ளார். மேக்கப்பால் பல பாராட்டுகளை பெற்றிருக்கும் பெண்களை பார்த்திருப்போம் ஆனால் அதே மேக்கப் இங்கு ஒரு ஆசிரியருக்கு அவரது பதவியை பறிபோகும் அளவிற்கு நிலைக்கு தள்ளியுள்ள செய்தி வெளியாகி இருப்பது பேசு பொருளாக மாறி உள்ளது.