தற்போது உள்ள சினிமா உலகத்தில் ஒரு முன்னணி நடிகையாக ஆக வேண்டும் என்றால் பல ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும் பலரை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் ஒரு நடிகை திரையுலகத்திற்கு வந்த முதலில் இருந்தே மிகவும் பிரபலமான நடிகையாக ஆகிவிட்டார் என்று கூறினால் அதனை நம்ப முடிகிறதா?? அந்த நடிகை யார் என்று உங்களுக்கு தெரியுமா??சௌமியா என்ற தனது சௌந்தர்யா என பெயரினை திரைப்படத்திற்காக சௌந்தர்யா என்று மாற்றி அமைத்துக் கொண்ட ஒரு நடிகையைப் பற்றி தான் இந்த செய்தி. 90ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக இருந்தவர் தான் இந்த சௌந்தர்யா!! இவர் முதலில் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்று அதிக அளவில் ஆர்வம் கொண்டு அதன் பின் முதலில் கன்னடம் மொழியில் முதன் முதலாக தனது நடிப்பு பணியை தொடங்கினார். அதன் தொடர்ச்சியாக தமிழ் ஹிந்தி மற்றும் மலையாளம் போன்ற பிற மொழிகளில் நடிப்பதற்கு ஆரம்பித்தார்.
இவரின் அதிர்ஷ்டமோ என்னமோ எந்த மொழியில் நடித்தாலும் அவை அனைத்துமே சூப்பர் ஹிட் திரைப்படங்களாக திரையரங்குகளில் ஓடி வந்தன. மேலும் இவர் பார்ப்பதற்கும் மிகவும் அழகான கண்கள் மற்றும் முக பாவனைகளையும், ஒரு நடிகையாக இருப்பதற்குரிய அனைத்து தகுதிகளையும் பெற்றிருந்ததால் என்னவோ இவருக்கு அதிக அளவில் ரசிகர்கள் மிகவும் குறுகிய காலத்திலேயே உருவாகினர். சொக்கத்தங்கம், படையப்பா போன்ற தமிழ் திரைப்படங்கள் இவருக்கு மிகவும் வெற்றியை கொடுத்த திரைப்படங்கள் ஆகும். தொடர்ந்து பல திரைப்படங்களில் வெற்றிகளை கொடுத்து வந்த சௌந்தர்யா முதலில் திரைப்படத்திற்கு வந்து எப்படி சாதிக்க வேண்டுமோ அதைப்போலவே அரசியலுக்கும் வந்து சாதித்து காட்ட வேண்டும் என்று நினைத்தார். இதன் தொடர்ச்சியாகவே திரைப்படங்களில் மட்டும் நடிப்பதை காட்டிலும் மேலும் அரசியலிலும் தனது பணியினை தொடர வேண்டும் என்ற நினைத்து அரசியலுக்கு வந்தார்.
இதன் தொடர்ச்சியாக 2004 ஆம் ஆண்டு நடிகை சௌந்தர்யா பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். அதன் பின் அந்தக் கட்சிக்கு வாக்கு சேகரிப்பதற்காக தனது சகோதரருடன் விமான பயணம் மேற்கொண்ட சௌந்தர்யா விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமானம் வெடித்து விபத்துக்கு உள்ளானது. இது சௌந்தர்யா பரிதாபமாக உயிரிழந்தார். இவர் இறந்து தற்போது பல வருடங்கள் ஆகியிருந்தாலும் கூட இவரை போல நடிப்பதற்கு ஒரு நடிகையும், மிகக் குறுகிய காலத்தில் அதிக அளவில் ரசிகர்களை பெற்ற நடிகையும் யாருமே கிடையாது என்ற அளவிற்கு ஒரு வரலாற்றை பிடித்துள்ளார் என்றே கூறலாம். ஆனால் தொடர்ந்து பல வெற்றிகளை கண்டு வந்த சௌந்தர்யாவிற்கு எப்படி திடீரென்று மரணம் கதவை தட்டும் என்று தெரியாமல் போய்விட்டது. இவர் இறப்பதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு தான் இவருக்கு திருமணமும் ஆகி உள்ளது என்றும் அவர் இறக்கும் பொழுது அவர் கர்ப்பமாக இருந்தார் என்றும் செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் நடிகை சௌந்தர்யா இறப்பதற்கு முன் பல கோடி கணக்கான சத்திற்கு அதிபதியாக இருந்துள்ளார் என்றும், மேலும் தனது சொத்து பற்றி ஏதோ உயிர் எழுதி வைத்துள்ளார் என்றும் செய்திகள் பரவி வருகிறது. ஆனால் இந்த செய்தியினை அவரின் அம்மாவும் மற்றும் கணவரும் ஏற்றுக்கொள்ள மறுத்து வருகின்றனர். மேலும் அவர் இறக்கும் பொழுது 31 வயதிலேயே இருந்துள்ளார் என்றும் அந்த வயதில் எந்த ஒரு உயிலும் எழுதுவதற்கு அவசியம் இல்லை என்றும் கூறி வருகின்றனர். ஆனால் தற்போது மீண்டும் சௌந்தர்யாவின் 100 கோடி சொத்தினை உயில் எழுதியதை மறைத்து சௌந்தர்யாவின் அம்மாவும், கணவரும் பாதி பாதியாக பிரித்துக் கொண்டனர் என்று கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான செய்திகளும் இன்றும் வெளியாகவில்லை.