Cinema

பயில்வான் ரங்க நாதனை வெளுத்து வாங்கிய விஷால்..!

bayilvan ranganathan,vishal
bayilvan ranganathan,vishal

சினிமா உலகம் என்றாலே பல செய்திகள் கற்பனையாகவும் பல செய்திகள் கிசுகிசுக்காகவும் வெளிவரும் அதில் சில தகவல்கள் உண்மையாகலாம் சில தகவல்கள் கிசுகிசுக்காகவே மறைந்துவிடும். இருப்பினும் சினிமாவின் ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை ஒரு பிரபலம் குறித்த செய்தியை மற்றொரு பிரபலம் கூறுவதில் அதிகளவிலான சர்ச்சைகள் எழுந்துள்ளது, மேலும் பேசுபொருளாகவும் மாறி உள்ளது. 


இதில் ஒரு பிரபலத்தை குறித்த தனிப்பட்ட விஷயங்களையும் யாருக்குமே தெரியாத பல தகவல்களையும் கூறுவதில் முக்கிய இடத்தில் இருப்பவர் பயில்வான் ரங்கநாதன் இவர் கூறிய பல கருத்துக்கள் பல சர்ச்சைகளையும் சில ரசிகர்கள் மத்தியில் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் ஏதாவது முன்னணி நடிகை நடிகர்கள் குறித்து தேவையில்லாத சம்பந்தமில்லாத ஒரு சர்ச்சையான தகவலை பொது வெளியில் பட்டென்று போட்டு உடைத்து விடுவார், அவர் கூறுவது உண்மையா பொய்யா என்று நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் இருக்குமா என்று பார்த்தால் அதுவும் கேள்விக்குறிதான்! அதன் காரணமாகவே பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பயில்வான் ரங்கநாதனின் கருத்திற்கு அதிருப்தி தெரிவித்து வந்துள்ளனர். 

அதாவது சூப்பர் ஸ்டார் பற்றியும் லேடி சூப்பர் ஸ்டார் பற்றியும் யாருமே குறை சொல்ல முடியாத முக்கிய நடிகர்கள் பற்றியும் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை இவர் கூறியுள்ளது சமூக வலைதளங்களிலும் வைரலாகியுள்ளது.. அந்த வரிசையிலேயே நடிகர் விஜய்யை பற்றி இவர் பேசிய சில கருத்துக்களும் பெருமளவில் சர்ச்சையாகி அவரது ரசிகர் களால் ட்ரோல் செய்யப்பட்டார். ஏனென்றால் நடிகர் விஜய் விதவிதமாக விக் பயன்படுத்தி படங்களின் நடித்து வருவதாக ஒரு பேட்டி ஒன்றில் பயில்வான் ரங்கநாதன் விமர்சித்தது விஜயின் ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. 

இருப்பினும் அவர் தனது பழக்கத்தை கைவிடவில்லை, காமெடி நடிகர்களாக புகழ்பெற்ற கவுண்டமணி செந்தில் அவர்களுடன் நடித்து பிரபலமான பயில்வான் ரங்கநாதன் இப்படி தொடர்ச்சியாக சில நடிகர் நடிகைகள் குறித்த சர்ச்சை மற்றும் அந்தரங்கம் குறித்த பல கருத்துக்களை தெரிவித்து வருவதை நடிகை ராதிகா மற்றும் ரேகா நாயர் உள்ளிட்ட பலரும் பொது இடங்களிலேயே பயில்வான் ரங்கநாதனை கடுமையாக தாக்கியுள்ளனர். 

நடிகர் விஜய் வரிசையிலேயே நடிகை மீனாவின் இரண்டாவது திருமணம் குறித்த சர்ச்சையையும் பேசி பெருமளவில் பரபரப்பை ஏற்படுத்தினார் பயில்வான் ரங்கநாதன். இந்த நிலையில் பயில்வான் ரங்கநாதனின் ஒரு கேள்விக்கு நடிகர் விஷால் கொடுத்த பதில் பயில்வான் ரங்கநாதனுக்கு பதிலடியாக அமைந்துள்ளது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதாவது பிரபல இயக்குனர் ஹரியோடு இணைந்து நடிகர் விஷால் பல வெற்றி படங்களை கொடுத்து வந்த நிலையில் தற்போது மீண்டும் இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் தான் ரத்னம்!


 இந்த படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்த பொழுது சினிமா விமர்சகரும் மூத்த பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன், சிறிய பட்ஜெட்டில் படம் செய்ய வர வேண்டாம் அது தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தும் என்று ஏற்கனவே விஷால் கூறிய ஒரு கருத்தை முன்வைத்து மஞ்சுமல் பாய்ஸ் மற்றும் பிரமலு போன்ற திரைப்படங்கள் மிகக் குறைந்த அளவிலான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் சூப்பர் ஹிட் படங்களாகவும் மாறி உள்ளது இதற்கு என்ன சொல்ல வருகிறீர்கள் இது எப்படி சாத்தியமாகும் என்று கேட்க....உடனே நடிகர் விஷால் இந்த கேள்விக்கு நான் பதில் கூற மாட்டேன், அண்ணா கேட்ட கேள்விக்கு நான் வெளியில் சென்று பதில் கூறுகிறேன் ஒரு பொதுச் செயலாளராக என்னை பேச வைக்க வேண்டாம்.

நிச்சயம் நான் அண்ணன் பயில்வானின் கேள்விக்கு பதில் சொல்ல மாட்டேன் என்று திட்டவட்டமாக அவர் கூறியது அந்த செய்தியாளர்கள் சந்திப்பையே திரும்பி பார்க்க வைத்தது. மேலும் பலரை வெளுத்து வாங்கிய பயில்வான் ரங்க நாதனை நடிகர் விஷால் வெளுத்து வாங்கிவிட்டாரே என்ற வகையிலான கமெண்ட்கள் தற்போது எழுந்து வருகிறது.