24 special

கொதிக்கும் கோடை வெயிலில் பரவி வரும் ஹீட் ஸ்ட்ரோக்!!! இதுக்கு உயிரையே எடுக்கும் அளவிற்கு அப்படி என்ன வீரியம்....

Heat stroke
Heat stroke

தமிழகத்தில் தற்போது கோடை காலம் நிலவி வருவதால் அதிக அளவில் வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது. அதிலும் தற்போது அக்னி நட்சத்திரம் துவங்கியுள்ளது. மேலும் அக்னி நட்சத்திரமானது மே 28ம் தேதி வரையிலும் இந்த அக்னி நட்சத்திரத்தில் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும் என்று வானிலை அறிக்கை மையம் கூறியுள்ளது. இதனால் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்ததை விட மே மாதத்தில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. வயதானவர்களுக்கு இந்த வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் அவர்கள் அதிகமாக பாதிக்கப்படும் அபாயம் இருந்து வருகிறது. மேலும் இளைஞர்களாக இருந்தாலும் கூட அவர்கள் வேலை செய்து அவர்களின்  உடலில் இருந்து வியர்வை அதிக அளவில் வெளியேறுவதால் அவர்களின் உடலில் தண்ணீர் சத்து மிகவும் குறைவாக ஆகி அதன்பின் அவர்கள் நீர் சத்து இல்லாமல் மயக்கம் அடைவதற்கும் வாய்ப்புகள் இருந்து வருகிறது.


இதுபோல தற்போது ஹீட் ஸ்ட்ரோக் போன்றவற்றால் அதிக அளவில் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  என்னதான் வீட்டில் இருக்க வேண்டும் என்று நினைத்தாலும் கூட வருமானம் வேண்டும் என்று நினைப்பவர்கள் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற கட்டாயத்தினால் வெயிலில் வெளியில் சென்று வேலை பார்க்கின்றனர். அவரே அவர்கள் வெயிலில் வேலை பார்ப்பதினால் அவர்களின் உடல் சூட்டில் 40 டிகிரிக்கு மேல் அதிகரித்தால் அவர்களுக்கு உடலில் நீர் சத்து இல்லாமல் இந்த ஹீட் ஸ்ட்ரோக் தாக்கப்பட்டு அவர்களின் உடலில் உள்ள கல்லீரல், மூளை போன்றஉறுப்புகள் செயலிழந்து போகிறது. இதனால் அவர்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் நிலைமை உருவாகி கொண்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னை மீஞ்சூரில் கொத்தனார் வேலை செய்து வந்த ஒருவருக்கு ஹிட் ஸ்ட்ரோக் ஏற்பட்டு கணையம் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் போன்றவை பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை எடுத்த வருகிறார்.

மேலும் மீஞ்சூரில் கட்டிட வேலை செய்து வந்த வட மாநில இளைஞர் ஒருவரும் இந்த ஹிட் ஸ்டோக்கினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். தற்போது பல இடங்களில் வெயிலின் தாக்கத்தினால் ஹீட் ஸ்ட்ரோக் அதிக அளவில் மக்களை ஆதித்து வருவதால் தற்போது தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் இதற்கென்று தனியாக ஒரு வார்டுகளும் தற்போது படுத்தப்பட்டு வருகிறது. இருந்தாலும் கூட மக்கள் இது போன்ற ஹீட் ஸ்ட்ரோக் வராமல் இருப்பதற்கு பல வகையான உணவுகளை தொடர்ந்து உட்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கூறி வருகின்றனர். குறிப்பாக மதியம் 12 மணி முதல் மூன்று மணி வரையிலும் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.

மேலும் கர்ப்பிணி பெண்களும் குழந்தைகளும் வயதானவர்களும் இது போன்ற நேரத்தில் வெளியில் வராமல் இருப்பதை பின்பற்றுவது மிகவும் நல்லது என்று கூறுகின்றனர். அதிக அளவில் நீர் ஆகாரங்கள், பழச்சாறுகள் போன்றவற்றை அடிக்கடி எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். மேலும் நாம் அணிந்து கொள்ளும் உடைகள் கூட காட்டனாக இருப்பது நல்லது என்று மருத்துவர்கள் கூறி வருகின்றனர். மிகவும் காரமான உணவுகள் ஃபாஸ்ட் ஃபுட் போன்றவற்றை தவிர்த்து விட்டு குளிர்ச்சியான ஆகாரங்களை எடுத்துக் கொண்டால் மிகவும் நல்லது என்று கூறப்படுகிறது. மேலும் தர்பூசணி, எலுமிச்சை சர்பத் போன்ற பல வகைகளை எடுத்துக் கொண்டால் வெயிலின் தாக்கத்திலிருந்து சற்று தப்பித்துக் கொள்ள முடியும் என்று  தொடர்ந்து அறிவுரைகள் கூறி வருகின்றனர்.