24 special

பல அற்புதங்கள் நிறைந்த தேவப்பிரயாகை!!!

Devaprayaga
Devaprayaga

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் கார்வால் கோட்டத்தில் அமைந்திருக்கும் டெக்ரி கார்வால் என்னும் மாவட்டத்தில் அமைந்துள்ளது தான் இந்த தேவபிரயாகை!! இங்கு சிறப்பாக இமயமலையில் உருவாகும் அலக்நந்தா ஆறும், பகீரதி ஆறும் இங்குதான் ஒன்றாக சேர்ந்து அதன் பிறகு கங்கை என்னும் புனித ஆறாக மாறுகிறது!! பிரயாகை என்றாலே ஆறுதல் ஒன்றாக சேரும் இடம் என்றே கூறுகின்றனர். இந்த இடத்தில் இரண்டு ஆறுகள் ஒன்றாக சேர்ந்து கங்கையாக உருவாவதால் இந்த இடத்தினை தேவபிரயாகை என்று அழைக்கின்றனர்!! இந்த கோவிலின் சிறப்பு பத்ம புராணம், கூர்மை புராணம் மற்றும் அக்னி புராணம் போன்ற பல புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. மிகச்சிறந்த யாகத்தினை பிரம்மன் இங்கு துவங்கியதால் இந்த இடத்திற்கு பிரயாகை என்று பெயர் வந்தது என்று கூறுகின்றனர்.


மேலும் திருமாலை தேவனாக கருதி இந்த இடத்தில் யாகம் மேற்கொண்டதால் தேவப்பிரயாகை என்று இந்த இடம் தற்போது அழைக்கப்படுகிறது என்று கூறுகின்றனர். இங்கு நீலமேகப் பெருமாள் நின்று கோலத்தில் காட்சி அளிக்கின்றார். மேலும் அவருடன் இணைந்து குண்டரேக வள்ளி விமலா அம்மையாரும் காட்சி அளித்து வருகின்றனர். பகீரதி நதியின் பச்சை நிற தண்ணீரும், அலக்நந்தாவின் சாம்பல் நிற தண்ணீரும் இங்கு ஒன்றாக கலப்பதை பார்ப்பதற்கு மிகவும் கண்கொள்ளா காட்சியாக அமைந்திருக்கிறது. இந்த நதிக்கரையின் பகுதியில் மேலே அமைந்திருக்கும் பெருமாளை சென்று தரிசிப்பது மிகவும் சிறப்பாக அமைந்திருக்கிறது. இது பிரம்மன், ராமன் மற்றும் பரத்வாசர் போன்றவர்களும் இங்கு தவம் மேற்கொண்டு உள்ளனர். எனவே இந்த இடம் தவம் கொள்வதற்கு மிகவும் சிறப்பான இடம் என்றும் கூறுகின்றனர். ராவணனை கொன்றதால் ஏற்பட்ட தோஷத்தினை போக்குவதற்காக ராமர் இங்குதான் தவத்தை மேற்கொண்டார் என்று புராணங்கள் கூறுகிறது.

அதனால் இந்த கோவில் ரகுநாத்ஜி மந்த் என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இதற்கு முன் பல இடங்களில் ராமர் சென்ற இடங்களில் எல்லாம் அவரின் பாதங்கள் நாம் பார்த்திருப்போம். தமிழ்நாட்டில் கூட ராமேஸ்வரம் என்கின்ற புனித தளத்தில் ராமரின் பாதம் அமைந்திருப்பதை நாம் சென்று பார்த்திருப்போம் மற்றும் அங்கு வழிபாடுகளும் மேற்கொண்டு இருப்போம். அதுபோலவே உத்தரகாண்டில் அமைந்துள்ள இந்த தேவப்பிரயத்தை நதி கரையிலும் ராமரின் பாதம் அமைந்திருக்கிறது. இங்கும் ராமர் வந்து  தவம் மேற்கொண்டு சென்றிருப்பதை இதன் மூலம் அறிய முடிகிறது. மேலும் இங்கு ராமர் அமர்ந்து தவம் செய்த இடத்தில் ராமரின் பாதம் காணப்பட்டு வருகிறது. இந்த கோவில் இருக்கு பக்கத்தில் பக்ரீநாத், கால பைரவர்,மகாதேவர் மற்றும் அனுமான் போன்றவர்களின் மூர்த்திகளும் உள்ளது. ஆதி கங்கையாக போற்றப்படும் மிகவும் சிறப்பான ஒரு இடமாக இது அமைந்துள்ளது.

மேலும் நதிகளில் இறைவன் வாழ்கிறார் என்பதை நிரூபிக்கும் ஒரு இடமாகவும் இது அமைந்திருக்கிறது. இந்த புண்ணிய நதிகள் சங்கமம் ஆகும் இடத்தில் நீராடி அங்கு அமைந்திருக்கும் புருஷோத்த  பெருமாளை தரிசனம் செய்தால் அவர்களுக்கு நிச்சயமாக சொர்க்கத்தில் இடம் இருக்கும் என்பது கூறப்பட்டு வருகிறது. மேலும் பல மகான்களுக்கும் முனிவர்களுக்கும் இந்த இடத்தில் முத்தி கிடைத்துள்ளது. இயற்கை சூழ்ந்த இடத்தில் திருமால் அமைந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து அவர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி வருகிறார் என்றும், அங்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்றும் பலர் கூறி வருகின்றனர். எப்படியாவது வாழ்வை முத்தி அடைய வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த கோவிலுக்கு வந்து சென்றால் அவர்களுக்கு முத்தி நிச்சயமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் முன் ஜென்மத்தில் செய்த பாவங்களை தீர்ப்பதற்கும், கஷ்டங்களை சரி செய்வதற்கும்  இந்த கோவிலுக்கு சென்று வாருங்கள்!!!