தமிழகத்தில் கனமழை தொடர்ச்சியாக பெய்து வரும் நிலையில் ஒரு நாள் மழைக்கே சென்னை தாக்கு பிடிக்கவில்லை, ஒரு மணி நேரம் மழை பெய்தால் சென்னை முழுவதும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது, சென்னையின் முக்கிய சுரங்க பாதைகள் நிறைந்து போக்குவரத்து தடை செய்யப்படும் சூழல் காணப்படுகிறது.
இந்த சூழலில் சமூக செயற்பாட்டாளர் பானுகோம்ஸ் கனமழை குறித்து தனது கருத்தினை பதிவு செய்துள்ளார், அதில் கழிவுநீர் காடாக மாறுவதும் இயற்கை அல்ல. இதன் விளைவாக ஏற்படும் வாந்தி, பேதி, காய்ச்சல், மஞ்சள் காமாலை, இன்ன பிற தொற்றுகள் வுஹான் வைரசுக்கு சற்றும் சளைத்ததல்ல என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்தது பின்வருமாறு :- பெருமழை பெய்யலாம். வெள்ளம் பெருக்கெடுத்து ஓடலாம். இதெல்லாம் இயற்கை ஆனால் கழிவு நீர்.. மழைநீருடன் கலப்பதும்.தெருக்கள், வீடுகள் என்று எங்கெங்கு காணினும் கழிவுநீர் காடாக மாறுவதும் இயற்கை அல்ல.
இதன் விளைவாக ஏற்படும் வாந்தி, பேதி, காய்ச்சல், மஞ்சள் காமாலை, இன்ன பிற தொற்றுகள் வுஹான் வைரசுக்கு சற்றும் சளைத்ததல்ல, இந்த அடிப்படையை 'நிரந்தரமாக' நேர் செய்யாமல் / சரி செய்யாமல் மற்றவற்றில் பலனில்லை என குறிப்பிட்டுள்ளார் பானு கோம்ஸ். தமிழகத்தில் சென்னை மட்டுமின்றி பல்வேறு பகுதிகளிலும்.,
மழை நீர் தேங்கி வீடுகளுக்குள் செல்லும் சூழலில் ஏதேனும் புதிய நோய் தொற்று உருவாகலாம் என்ற அச்சம் பொதுமக்கள் இடையே எழுந்துள்ளது.
தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL, YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.