மாநாடு திரைப்படம் வெளியாக உதயநிதி தான் காரணம் எனவும் கடைசி நேரத்தில் உதயநிதிதான் உதவினார் எனவும் முன்னணி ஊடகங்கள் தொடங்கி "வார இதழ்கள்" வரை செய்தியை பரப்பினர், பலரும் இந்த செய்தியை உண்மை என நம்பி பகிர்ந்தனர் ஆனால் அதில் எந்த உண்மையும் இல்லை என்பது மாநாடு திரைப்படத்தின் தயாரிப்பாளர் அளித்த பேட்டியின் மூலம் உறுதியாகியுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் மாநாடு படம் இன்று தியேட்டர்களில் ரிலீஸாகியிருக்கிறது. இந்நிலையில் மாநாடு படம் திட்டமிட்டபடி நவம்பர் 25ம் தேதி ரிலீஸாகாது என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நேற்று இரவு ட்வீட் செய்தார்.
அதை பார்த்த சிம்பு ரசிகர்கள் நொந்து போனார்கள். அதன் பிறகு படம் கண்டிப்பாக ரிலீஸாகும் என்றார் சுரேஷ் காமாட்சி. மாநாடு படத்திற்கு கடைசி நேரத்தில் பண பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. படத்திற்கு பைனான்ஸ் செய்தவர்களில் ஒருவரான உத்தம்சந்த் ஒப்புக் கொண்டபடி ரிலீஸுக்கு முன்பு எனக்கு கொடுக்க வேண்டிய பணத்தை உடனே கொடுக்க வேண்டும் என்று சுரேஷ் காமாட்சியிடம் கூறியிருக்கிறார்.அவர் கேட்டதும் பணத்தை கொடுக்கும் நிலையில் சுரேஷ் காமாட்சி இல்லையாம். பணம் இல்லாத காரணத்தால் ரிலீஸை தள்ளிப் போட முடிவு செய்தார். இந்நிலையில் தான் பிரபல பைனான்சியரான மதுரை அன்புச் செழியன் மாநாடு தயாரிப்பாளருக்கு ரூ. 10 கோடி கொடுத்திருக்கிறார். கடைசி நேரத்தில் டீல் பேசி மாநாடு படத்தை கலைஞர் டிவி ரூ. 6 கோடிக்கு வாங்கிவிட்டது எனவும் உதயநிதி ஸ்டாலின் தலையீட்டால் கலைஞர் டிவி டீலிங் நடந்தது எனவும்.,
இதற்கிடையே கலைஞர் டிவி டீலிங்கில் உதயநிதி தலையிட்டது உதவி அல்ல அது அவர் குடும்பத்திற்கு செய்த பெரும் உதவி என்றெல்லாம் முக்கிய இணையதளங்கள் மற்றும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன, இதுகுறித்து பிரபல ஊடகம் ஒன்றிற்கு மாநாடு திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அளித்த தொலைபேசி பேட்டியில் அப்படி எந்த தகவலும் தனக்கு தெரியாது என மறுத்துள்ளார்.
சுரேஷ் காமாட்சியிடம் பேட்டி எடுத்த நிருபர் கடைசி நேரத்தில் உதயநிதி தலையீட்டின் பெயரில்தான் படம் வெளியானதாக கூறுகிறார்களே உண்மையா என கேட்க அப்படி எந்த தகவலும் எனக்கு தெரியாது, அப்படி ஒன்றும் இல்லை என மறுத்துவிட்டார், மேலும் சாட்டிலைட் உரிமையை கலைஞர் டிவி வாங்கவில்லை எனவும் அவர் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் முன்னணி ஊடகங்களே போலியாக செய்தியை திரித்து பரப்பினரா என்ற கேள்வி எழுந்துள்ளது? படத்தின் தயாரிப்பாளர்தான் திரைப்படம் விற்பனை தொடர்பாக அனைத்து முடிவையும் எடுக்க கூடிய நபர் அப்படி இருக்கையில் அவருக்கே தெரியாமல் எந்த "சாட்டிலைட்" ரைட்ஸ்ம் விற்பனை செய்யபட்டு இருக்காது எனவும் "ஊடகங்களில்" உதயநிதி மாநாடு வெளியாக உதவினார் என வெளியான செய்தி இதன் மூலம் உண்மையில்லை என்று தெரியவந்துள்ளதாக பலரும் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர். சுரேஷ் காமாட்சி அளித்த பேட்டி கீழே இணைக்கப்பட்டுள்ளது :-
தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL, YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.