பாகிஸ்தான் நாட்டிற்குள் இந்திய ஏவுகணை சென்றது குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ள நிலையில் பிரகாஷ் என்பவர் தனது கருத்தை பதிவு செய்துள்ளார் அது பின்வருமாறு :-
நான்கு நாட்கள் முன்பு, மார்ச் 9ம் தேதி மாலை 6.43 மணிக்கு, பாகிஸ்தானுக்குள் இருக்கும் 'மியான் சுனு' நகரத்திற்கு அருகே, ஆளிள்லாத ஒரு பகுதியில் கண்களுக்கு புலப்படாத சூப்பர்சோனிக் வேகத்தில் ஒரு மிசைல் வந்திறங்கியதை பாக்கிஸ்தானிய ராணுவம் கண்டுணறவே நேரம் பிடித்து விட்டது. அத்தனை வேகத்தில் இந்திய பகுதியில் இருந்து.,
அந்த மிசைல் பாக்கிஸ்தானிற்குள் நூறு கிலோமீட்டர்கள் நுழைந்து, எந்த பாக்கிஸ்தானிய ராணுவ தற்காப்பு வளையத்தாலும் தடுக்க இயலாமல் நுழைந்தது மிகப் பெரும் அதிர்வலைகளை பாக்கிஸ்தானிற்குள் ஏற்படுத்தியது. ஏற்கனவே பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மீது நம்பிக்கை இல்லாத தீர்மானத்தை எதிர்கட்சிகள் பாக்கிஸ்தான் பாராளுமன்றத்தில் நடத்த உள்ளன. வாழ்வா சாவா எனும் நிலையில் இம்ரான் கானின் ஆட்சி. இந்த தருணத்தில் ஒரு இந்திய மிசைல் 124 கிலோமீட்டர்கள் பயனித்து உள்ளே வந்து விழுந்தால் எப்படி இருக்கும் ?
முதலில் இது பாக்கிஸ்தானின் திசைமாற்றும் செயல் என்றே பலரும் நினைத்தார்கள். பாக்கிஸ்தானிய மக்களே அப்படிதான் நினைத்திருப்பார்கள். ஆனால் இந்திய ராணுவம் அதை ஊர்ஜிதப் படுத்தியதும்தான் பிரச்சனையின் தீவிரம் பாக்கிஸ்தானியர்களுக்கு புரிந்தது. தொழில்நுட்ப கோளாறினால் ஏவுகனை திசை மாறி பாக்கிஸ்தான் பக்கம் சென்றதாக இந்திய ராணுவம் குறிப்பிட்டது.
இந்திய ஏவுகனையினால் எந்த உயிரழப்பும் இல்லை. சில சொத்துக்கள் மட்டும் சேதமடைந்ததாக பாக்கிஸ்தானிய தரப்பு குறிப்பிடுகிறது. சரி என்னதான் நடந்தது ? அல்லது நடந்திருக்கும் ?
உலகில் இன்று ஏவுகனை தொழில்நுட்பத்தில் இந்தியாவின் திறனை முதல் நான்கு நாடுகளின் பட்டியலில் உள்ளடக்கி விடலாம். ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் பயனிக்கக் கூடிய இந்தியாவின் நீண்ட தூர ஏவுகனைகள் கூட மிக மிக துல்லியமானவை எனும் போது, சில நூறு கிலோமீட்டர்கள் பயனிக்கக் கூடிய இந்திய ஏவுகனைகளின் துல்லியத்தை குறித்து நாம் குறிப்பிட அவசியமே இல்லை. இந்திய ராணுவத்தின் மற்ற திறன்களை விட ஏவுகனை திறன் மிக மிக நுட்பமானது என்பது விஷயம் தெரிந்தவர்கள் பலரும் உணர்ந்தது. இன்று உலகில் அதி வேகத்தில் அதி வேகமான 'ஹைபர்சோனிக்' தொழில்நுட்பத்தை கொண்ட ஏவுகனை தொழில்நுட்பத்தை கொண்ட நாடு இந்தியா என குறிப்பிடலாம். அதிலும் பிரதமர் மோடி பொறுப்பேற்றதற்கு பிறகு ஏவுகனை தொழில்நுட்பம் பண்மடங்கு முன்னேறி விட்டது.
உதாரணத்திற்கு பாக்கிஸ்தானிற்கு நுழைந்ததாக கூறப்படும் பிரம்மோஸ் ஏவுகணையின் துல்லியம் ஒரு மீட்டர் CEP என்கிறார்கள். அதாவது 'Circular error of probability' எனும் அதிகபட்ச மாறுபாடு ஒரு மீட்டருக்குள் அடங்கி விடும். இது அதிகபட்ச அளவுதான் என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். 800 கி.மீ. பயனித்து ஊசி முனை துல்லியத்தோடு தாக்கக் கூடியது பிரம்மோஸ் ஏவுகனைகள் என்பதை நாம் இங்கு புரிந்துக் கொள்ள வேண்டும்.
சரி அப்படியேனில் இந்த தொழில்நுட்ப கோளாறு நம்பக் கூடியதா ?ஆய்வு செய்த வகையில், சமீபத்தில் தான் பாக்கிஸ்தான் HQ-9/P வான் பாதுகாப்பு கவசத்தை பல கோடிகள் செலவில் நிறுவியது. (படம் பார்க்க) கடந்த வருடம் அக்டோபர் 14ம் தேதி சீன தயாரிப்பான இந்த வான் பாதுகாப்பு கவசத்தை ராணுவத்தில் இணைத்ததாக பாக்கிஸ்தானின் Inter Services Public Relations (ISPR), எனும் ராணுவ ஊடக பிரிவு பெருமிதத்துடன் தெரிவித்தது. கராச்சியில் நடந்த இந்த இணைப்பு விழாவில் பாக்கிஸ்தானின் ராணுவ தளபதி 'கமர் ஜாவத் பாஜ்வா' கலந்துக் கொள்ள பெருமிதத்தோடு நிகழ்ந்தேறியது.
இந்த சீன HQ-9/P ஒரு ஒருங்கிணைந்த ராணுவ தற்காப்பு நெட்வர்காக செயல்படக்கூடியது. 'Comprehensive Layered Integrated Air Defence (CLIAD)' எனும் திட்டத்தின் கீழ் இந்த கவசம் பாக்கிஸ்தானிய வான் எல்லைக்குள் எந்த இந்திய ஏவுகனைகளும் நுழைய இயலாத வகையில் பாதுகாக்கும் என பெரிதும் நம்பப்பட்டது.
இந்த நிலையில்தான் இந்திய ஏவுகனை வெற்றிகரமாக பாக்கிஸ்தானிய பகுதிக்குள், HQ-9/P யின் தடுப்பு ஆற்றலை மீறி வெற்றிகரமாக 134 கிலோமீட்டர்கள் பயனித்து ஆளிள்லாத பகுதியில் விழுந்துள்ளது.ஆக இதில் இருந்து தெள்ளத் தெளிவாக சிலவற்றை நாம் புரிந்துக் கொள்ளலாம்.
1) மிக துல்லிய தாக்குதல் தொழில்நுட்பத்தை கொண்டு இந்தியாவின் அதிநவீன சூப்பர்சோனிக் ஏவுகனை திசை மாறி எப்படி சென்றது ?
2) செல்லும் அந்த ஏவுகனை எந்த உயிரிழப்பையும் பாக்கிஸ்தானிற்குள் ஏற்படுத்தாமல், ஆளில்லாத இடத்தில் ஏன் விழுந்தது ?
3) ஒரு ஏவுகனையை செலுத்த ராணுவ உயர்மட்டத்தில் உள்ளவர்களின் ஆணை மற்றும் பல்வேறு அமைப்பு சார்ந்த வழிகாட்டுதல் இருக்கையில், இந்த ஏவுகனை எவ்வாறு செலுத்தப் பட்டது.
4) அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட இந்திய ஏவுகனைகளில் தொழில்நுட்பக் கோளாறு எவ்வாறு ஏற்படக்கூடும். அவ்வாறு தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு இந்தியாவின் வேறு பகுதிகளில் விழுந்ததாக வரலாறு இல்லையே.
5) அப்படியே தவறுதலாக செலுத்தப் பட்டாலும், பிரம்மோஸ் போன்ற ஏவுகனைகளின் பாதையை வான் வெளியில் செல்லும் போது மாற்றி அமைக்க இயலுமே ? ஏன் அவ்வாறு செய்யவில்லை.
6) பரிசோதிக்கப்படும் ஒவ்வொரு ஏவுகனையின் பாதையை இந்தியா துல்லியமாக அளவிடும். அப்படி இருக்கையில் பாக்கிஸ்தானிய எல்லைக்குள் நெடுந்தூரம் பயனித்த ஏவுகனையை குறித்து இந்தியா ஏன் தகவல் தெரிவிக்கவில்லை. பாக்கிஸ்தானிய ராணுவம் அதை கண்டெடுத்த பிறகல்லவா இந்திய ராணுவம் மன்னிப்பு கோரியது ? எதனால் இது. ?
7) இதை ஏன் இப்போது இந்தியா ராணுவம் செய்ய வேண்டும் ? ஆக பாக்கிஸ்தானின் வான்வெளி பாதுகாப்பு கவசம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை பரிசோதிக்கவே இந்திய ராணுவம் இதை செய்திருக்க வேண்டும் என்பது தெள்ளத் தெளிவாகிறது. நாளை பாக்கிஸ்தான் மீது போர் என்பது உண்டாகும் பட்சத்தில் இந்திய ஏவுகனைகளின் திறன், பாக்கிஸ்தானின் பாதுகாப்பு திறன் ஆகியவற்றை பரிசோதிக்க இது மிக மிக முக்கியமானது. பாக்கிஸ்தானின் சீன பாதுகாப்பு வளையம் இந்திய ஏவுகனையை வானிலேயே தடுத்து அழித்திருக்கும் பட்சத்தில், இந்தியா தன்னுடைய ஏவுகனை தாக்குதல் தொழில்நுட்பத்தை மிக வேகமாக செம்மைப் படுத்தி அதிகரிக்க வேண்டி இருந்திருக்கும்.
மேலும் ஏவுகனை செலுத்தப் பட்ட பின் இந்திய ராணுவ செயற்கை கோள்கள், ஏவுகனையின் பாதையையும், ஒரு வேளை அதை பாக்கிஸ்தானிய பாதுகாப்பு கவசம் இடை மறித்து அழித்திருந்தால் அதன் வழிமுறைகளையும் பதிவு செய்திருக்கும். அது இந்திய ராணுவத்தின் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்திருக்கும். மேலும் உலகத்தின் கவனம் ரஷ்யா-உக்ரைன் போரில் முழுக்க முழுக்க இருப்பதால், இந்தியாவிற்கு இதை விட சிறப்பான ஒரு காலகட்டம் கிடைக்க வாய்ப்பில்லை. அதிலும் பாக்கிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் நம்பிக்கை இல்லாத தீர்மானத்தை எதிர்கொண்டு காத்திருக்கும் நிலையில்.
பாக்கிஸ்தானின் மக்கட்தொகை கொண்ட பல பகுதிகளை கடந்து, ஆள் இல்லாத பகுதியில் துல்லியமாக அது எப்படி விழுக் கூடும் ?மேலும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பண்முக வான்வெளி தற்காப்பு கவசங்களாக செயல்படும் ரஷ்ய எஸ்-400, இஸ்ரேலின் 'பராக் கவசம்' என அழைக்கப்படும் 'LR-SAM' மற்றும் 'MR-SAM', இந்திய DRDO ஆல் தயாரிக்கப்படும் அதி நவீன தொழில்நுட்பத்தோடு உருவாக்கப்பட்டுள்ள வான்வெளி பாதுகாப்பு கவசங்கள் என இவற்றோடு தொழில்நுட்ப ரீதியாக ஒப்பீடு செய்யவும் இந்த முயற்சி உதவும்.
மேலும் பாக்கிஸ்தானிற்குள் நுழையும் இந்திய ஏவுகனையை உணர அதற்கு எத்தனை காலம் பிடிக்கிறது என்பதை அறியவும் இது வழிவகை செய்யும். இவை அனைத்தையும் விட, சீன தொழில்நுட்பமான HQ-9/P வான் பாதுகாப்பு கவசம் எவ்வாறு செயல்படுகிறது என்பது இந்தியாவிற்கு மிக மிக முக்கியம். நாளை சீனா இந்தியாவை தாக்கும் பட்சத்தில் சீனாவிற்குள் செலுத்தப்படும் இந்திய ஏவுகனைகளின் தாக்குதல் திறனை அறிய இது உதவும். ஆக மொத்தத்தில் இது முழுக்க முழுக்க இந்திய ராணுவத்தின் ஒரு செயல் திட்டம் என்பதில் அடியேனுக்கு எந்த சந்தேகமும் இல்லை.
தாக்குதலே மிகச்சிறந்த தற்காப்பு என்பதில் முழுக்க முழுக்க நம்பிக்கைக் கொண்டவர் உலகத் தலைவர் மோடி அவர்கள். ஆகையால் இது அவரின் அனுமதியோடு நிகழ்ந்தது என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை என தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார் பிரகாஷ்.