தமிழகத்தின் தலைநகர் சென்னையில் முதல் முறையாக தலித் சமூகத்தை சேர்ந்த பெண் மேயர் பிரியா தேர்வாகி இருக்கிறார் , இந்த முறை சென்னை மேயர் பதவி தலித் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டு இருப்பதால் திமுக சார்பில் வெற்றிபெற்ற கவுன்சிலர்கள் பிரியாவை தேர்வு செய்தனர்.
இது ஒருபுறம் என்றால் தற்போது புதிய சர்ச்சை எழுந்துள்ளது தலித் இட ஒதுக்கீடு என்பது இந்துக்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும், இந்த சூழலில் பிரியா கிறிஸ்துவர் என தகவல் பரவியது பல கிறிஸ்தவர்கள் தங்கள் அமைப்பை சேர்ந்தவர் வெற்றி பெற்று இருக்கிறார் என வாழ்த்துக்களும் கொடுத்தனர், இந்த சூழலில்தான் பிரியாவின் பதவிக்கு சிக்கல் எழுந்தது.
இந்துக்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு செல்லுபடியாகும் எனவே பிரியாவின் மேயர் பதவியை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது, இது கடும் சிக்கலை உண்டாக்கியது, இந்த சூழலில் பிரியா விளக்கம் கொடுத்தார். சென்னை மேயர் ப்ரியா ராஜன் கூறியதாவது :செங்கை சிவம் என் மாமா தான். எம்.எல்.ஏ.,வாக இருந்த அவரையும், இதே சிக்கலுக்கு உள்ளாக்கினர்; நீதிமன்றத்திற்கு சென்றனர். இறுதியில், அவருக்கு சாதகமான நிலை ஏற்பட்டது. அதே பிரச்னையை, தலித் பெண்ணான எனக்கும் ஏற்படுத்துகின்றனர்.
பா.ஜ.க , தரப்பினர் தான், என்னை கிறிஸ்துவ பெண்ணாக்கும் முயற்சியை செய்கின்றனர். தேர்தல் நேரத்தில் சர்ச்சுகளுக்கு சென்று, ஓட்டு சேகரித்தது நிஜம். ஹிந்து கோவில்களுக்கும் போனேன்; மசூதிகள், பள்ளிவாசல்களுக்கும் சென்றேன்.பரப்புகின்றனர்.
அது தொடர்பான ஆவணங்கள் அவர்களிடம் இருந்தால், அதை பொது வெளியில் வெளியிட வேண்டும்.தலித் பெண் ஒருவருக்கு, 28 வயதில் கிடைத்திருக்கும் மேயர் பொறுப்பு என்ற வெகுமதியை, பலராலும் பொறுக்க முடியவில்லை. சொந்த கட்சியினரே வயிற்று எரிச்சலில், எனக்கு எதிராக இப்படி புரளிகளை கிளப்பி விடுவதாக தகவல் கிடைத்துள்ளது. என்னை சிக்கலில் மாட்டி விட வேண்டும் என்பதற்காக, பா.ஜ.க ,வினரோடு அவர்கள் மறைமுகமாக கைகோர்த்து செயல்படுவதாகவும் சொல்கின்றனர்.
இதை தைரியமாக எதிர்கொள்வேன். தலைமைக்கு தகவல் கூறி விட்டேன். பிரச்னை என்று வந்தால், அதை சட்ட ரீதியாக அணுகலாம் என கூறி விட்டனர். அதனால், இந்த பிரச்னைகள் குறித்து கவலைப்பட போவதில்லை என தெரிவித்தார் இந்த சூழலில் தன்னை இந்து என நிரூபிக்க பிரியா கோவில் கோவிலாக செல்ல முடிவு எடுத்து சென்று வருகிறார்.
அத்துடன் வகுடு எடுத்து தற்போது குங்குமம் வைத்தபடி வெளியே வருகிறார், பிரியாவை கிறிஸ்துவர் என வாழ்த்து. தெரிவித்து வந்த பலர் தற்போது பிரியாவின் விளக்கம் மற்றும் முடிவால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.