24 special

பிரதமர் மோடி பேச்சின் சூசகம்...! அப்போ அது கன்பார்ம் தான்...!

Pmmodi, modi
Pmmodi, modi

வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தீவிரமாக பணியாற்றி வரும் நிலையில் நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் இருபதாம் தேதி தொடங்கியது, அனைத்து எதிர் கட்சிகளும் இந்த கூட்டத்தொடரில் பாஜகவை எதிர்த்து பல கேள்விகளை எழுப்புவதற்கு முன்னதாகவே திட்டமிட்டதாக தகவல்கள் வெளிவந்தன


.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெறும் முதல் கூட்டத்தொடர் என்பதால் மிகவும் சிறப்பு வாய்ந்த தாக கருதப்பட்டது மேலும் இந்த கூட்டத்தொடரில் 31 மசோதாக்கள் தாக்கல் செய்யப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்றிணைந்து மணிப்பூர் சம்பவத்தை வரிசை கட்டி பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கேள்விகளை எழுப்ப வேண்டும் என தயாராக இருந்தனர். ஆனால் பாரத பிரதமர் நரேந்திர மோடி தனது கட்சியில் உள்ள அனைவருக்கும் முன்னதாகவே அறிவுரை வழங்கியிருந்தார் அதாவது நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் எவ்வளவு கலவரம் செய்தாலும் சபாநாயகர் மைக்கின் முன் அமர்ந்து கத்தினாலும் அமைதியை கடைபிடித்து பொறுமையாக இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார். 

நாடாளுமன்ற மழைக்கால தொடர் தொடங்கிய போது எதிர்க்கட்சிகள் அனைவரும் பிரதம மந்திரி மோடிக்கு எதிராக மணிப்பூர் மணிப்பூர் என்று முழக்கங்களை எழுப்பிய நிலையில் பாரதப் பிரதமர் மோடி மணிப்பூர் விவகாரம் குறித்து எதுவும் பேசாததால் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்ததுடன் ஐம்பது எம்பி களின் ஆதரவு இருந்ததால் சபாநாயகர் நம்பிக்கையில்லா தீர்மானத்தை அனுமதித்தார் . 

மேலும் நம்பிக்கை இல்லாத தீர்மானத்திற்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி கட்டாயமாக பதிலளிக்க வேண்டும் என்று எதிர் கட்சிகள் தரப்பிலிருந்து வலியுறுத்தப்பட்டது எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரம் ஒன்றை கையில் வைத்துக்கொண்டு பிரதமர் மோடிக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருப்பதால் அவர்களின் ஆட்டத்தை அடக்கும் விதமாக பாரத பிரதமர் மோடி தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான வாதத்தை காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகாய் தொடங்கி வைத்த நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஆகியோர் இந்த வாதத்தை பற்றி பேசினர் இறுதியாக அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த பதிலுரையை பிரதமர் மோடி வழங்கினார். மேலும் இந்த கூட்டத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி மற்றும் பாரத ஜனதா கட்சி இதற்கு முன்பு பெற்ற வெற்றிகளை எல்லாம் முடியடித்துத்து தற்போது வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியியை பெறப்போகிறது என்றும் பாஜக இதுவரை வெற்றி பெறாத இடங்களில் எல்லாம் வெற்றியை  நிலைநாட்ட போகிறது என்றும் சூசகமாக பேசியது எதிர்க்கட்சியினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது


மேலும் இதுவரை வெற்றி பெறாத இடங்களில் வெற்றியை நிலைநாட்ட போகிறது என பிரதமர் நரேந்திர மோடி சூசகமாக குறிப்பிட்டது தமிழகத்தை தான் என்று சில டெல்லி தகவல்கள் கூறுகின்றன. ஏனென்றால் கடந்த தேர்தலில் பாஜக கூட்டணி தமிழகத்தில் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது ஆனால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பாஜக தமிழகத்தில் கடுமையாக உழைத்து வருகிறது. தென்னிந்தியாவில் அதுவும் குறிப்பாக தமிழகத்தில் பாஜக அதிக இடங்களை வெற்றி பெறப் போகிறது, மேலும் பிரதமர் வேறு தமிழகத்தில் போட்டியிடும் சூழல் உருவாகிவிட்டது இதன் காரணமாகத்தான் பிரதம மந்திரி மோடி சூசகமாக நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 'இதுவரை வெற்றி பெறாத இடங்களில் வெற்றியை நிலைநாட்ட போகிறது பேசியுள்ளார்' என்று சில டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.