24 special

பல்பு வாங்கிய எதிர்க்கட்சி...!விட்டு விலாசிய மோடி...!

Pmmodi,mkstalin
Pmmodi,mkstalin

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக வன்முறை நீடிக்கிறது. மணிப்பூரில் பெண்கள் நிர்வாணமாக அழைத்து வரப்பட்டு கூட்டு வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும்  பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மணிப்பூர் கலவரத்திற்கு பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன இவ்விவகாரத்தில் உள்துறை அமைச்சர் பதிலளிப்பார் என்று ஆளும் தரப்பு கூறிய நிலையில் எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்ய முடிவெடுத்தனர். நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்த பின், தீர்மானத்தின் மீதான விவாதம் ஆகஸ்ட் 8 ஆம் தேதி நடைபெறும் என லோக்சபாவில் அறிவிக்கப்பட்டது.


அதன்படி கடந்த 8ஆம் தேதி முதல் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் லோக்சபாவில் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற விவாதத்திற்குப் பிறகு மூன்றாவது நாள் லோக்சபா காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசும்போது, லோக்சபாவின் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது பிரதமர் அவையில் இருப்பது மரபு என்றார்,இதன்படி பிரதமர் மோடி அவைக்கு வந்தார்.

இந்தக் கோஷங்களுக்கு இடையே பிரதமர் மோடி தொடர்ந்து பேசிய நிலையில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். ஆனால், அவர்கள் வெளியேறிய பின்பு மணிப்பூர் பற்றிப் பேசினார் பிரதமர் மோடி.மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டதை நல்ல சகுனமாக கருதுகிறோம். எங்களுக்கான போட்டி மைதானத்தை எதிர்க்கட்சிகளே தயார் செய்து கொடுத்துள்ளன. இந்த ஆட்டத்தில் ஆளும் கட்சி வரிசையில் இருந்து சதங்கள் குவிக்கப்பட்டு வருகின்றன. சிக்சர்கள் பறக்கிறது. எதிர்க்கட்சி வரிசையில் ஒரு பந்தைக்கூட வீச முடியவில்லை. வரும் லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். இதேபோல, 2028ஆம் ஆண்டிலும் எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வரும். அப்போது உலகின் 3வதுபெரிய பொருளாதாரமாக இந்தியா உயர்ந்து நிற்கும்.

மணிப்பூர் கலவரத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மணிப்பூர் மகள்களுக்கு ஆதரவாக ஒட்டுமொத்த நாடும் துணை நிற்கிறது. மணிப்பூர் பெண்களுக்கு இழைக்கப்பட்ட குற்றங்கள் மன்னிக்க முடியாதவை. தவறு செய்தவர்கள் நீதியின் முன்பு நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள். மணிப்பூர் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்படும். அந்த மாநிலத்தில் மீண்டும் அமைதி திரும்பும் என்று உறுதியளித்தார்.

வடகிழக்கு மாநிலங்களின் பிரச்சினைகளுக்கு காங்கிரஸ் ஆட்சியே மூலகாரணம். அந்த கட்சியின் ஆட்சிக் காலத்தில் வடகிழக்கில் பல்வேறு தவறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்திரா காந்தி ஆட்சியில் மிசோரம் மக்கள் மீது விமானப் படை மூலம் குண்டுகள் வீசப்பட்டன. இதன் காரணமாக, இன்றுவரை மார்ச் 5ஆம் தேதியை கறுப்பு தினமாக மிசோரம் மக்கள் அனுசரித்து வருகின்றனர் என்று பிரதமர் மோடி கூறினார்.

இறுதியில் நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்து குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் தீர்மானம் படு தோல்வி அடைந்தது. இதன்பிறகு, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியதற்காக லோக்சபா காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியை சஸ்பெண்ட் செய்ய வகை செய்யும் தீர்மானத்தை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கொண்டு வந்தார். இது குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. இதன் மூலம் மத்திய அரசுக்கு எதிரான எதிர்கட்சிகளின் வியூகத்தை அடித்து நொறுக்கியுள்ளார் பிரதமர் மோடி என்று அரசியல் விமர்சகர்கள்  கூறி வருகின்றனர்,வரும் ஆண்டு மே மாதம் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான பிரச்சார வியூகமாக மாற்றி விட்டார் மோடி என்றும் அரசியல் கட்சியினர் தெரிவித்துள்ளனர். மேலும் பாஜகவுக்கு பெரும்பான்மை இருக்கிறது என்று தெரிந்தும் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்து பல்பு வாங்கிய எதிர்கட்களின் இந்த செயல்பாடு மக்கள் முன் விவாதத்தை கிளப்பியுள்ளது.