தமிழகத்தில் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் பல முக்கிய அமைச்சர்களின் இல்லங்களில் சோதனையை தீவிரப்படுத்தி வருகின்றனர், அந்த வகையில் கடந்த ஜூன் மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜியின் இல்லத்தில் சோதனையை மேற்கொள்ள சென்ற வருமானவரித்துறை அதிகாரிகள் கடுமையாக தாக்கப்பட்டதுடன் அவர்கள் சென்றிருந்த கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதும் அவர்கள் கையில் இருந்த ஆவணங்களும் கோப்புகளும் செந்தில் பாலாஜி தரப்பினரால் கைப்பற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது இது மட்டுமல்லாமல் வருமானவரித்துறை அதிகாரி காயத்ரியை செந்தில் பாலாஜி தரப்பை சேர்ந்த திமுக கும்பல் மிகவும் அவதூறாக பேசி அசிங்கப்படுத்தியதால் அவர் மன உளைச்சலுக்கு ஆளானதுடன் தாக்கப்பட்ட காயம் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செய்தியும் வெளிவந்தது.
கரூர் மாவட்டத்தில் செந்தில் பாலாஜி இல்லத்திற்கு சோதனைக்கு சென்ற வருமானவரித்துறை அதிகாரிகளை சோதனை நடத்த விடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அவர்களிடம் அத்துமீறி செயல்பட்டது வரம்புக்கு மீறிய வார்த்தைகளால் பேசியது போன்றவற்ற அடிப்படையாகக் கொண்டு செந்தில் பாலாஜி தரப்பினர் 15 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது இதனைத் தொடர்ந்து திமுகவை சேர்ந்த 15 பேரும் முன் ஜாமின் பெற்று வெளியில் வந்த நிலையில் வருமானவரித்துறை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததன் அடிப்படையில் உயர் நீதிமன்றம் அவர்களை நேரில் ஆஜராக மாறு வலியுறுத்தியது இந்நிலையில் செந்தில் பாலாஜி தான் பண மோசடி சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புகழ் சிறையில் இருந்து வருகிறார் எனினும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருமானவரித்துறை அதிகாரிகளை எதிர்த்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட 15 பேரின் ஜாமின் மனுவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் அவர்களை சிறைக்கு அனுப்பியது
வருமானவரித்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவருடைய தம்பி அசோக் வீட்டில் சோதனை மேற்கொண்ட போது தற்போது கட்டி வரும் பங்களா வீட்டை நோட்டமிட்டு பல ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர் எனவே வருமான வரி துறையினர் கொடுத்த தகவலின் படி அமலாக்க துறைய தற்போது கரூர் சேலம் நெடுஞ்சாலையில் ராம் நகர் பகுதியில் உள்ள அசோக் குமார் கட்டி வரும் பிரம்மாண்டமான பங்களா வீட்டை தற்போது முடக்கியுள்ளது. மேலும் இந்த வீடு அசோக்குமாரின் மனைவி நிர்மலா என்பவர் பெயரில் கட்டி வருவதாக தகவல் அறிந்தவுடன் நிர்மலா உரிய சொத்து ஆவணங்களுடன் நேரில் ஆஜராகி விளக்க வேண்டும் என ராமகிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள அசோக் குமார் வீட்டில் சம்மன் நோட்டீசை ஒட்டினர்.
அசோக் குமார் புதிதாக கட்டி வரும் பங்களா வீட்டை கைப்பற்றி அவரின் வீட்டிற்கு முன் நோட்டீசை ஒட்டியதோடு மட்டுமல்லாமல் அமலாக்கத்துறையினர் கரூர் மாவட்டத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று நோட்டீஸ் ஒன்றை வழங்கினர் மேலும் அந்த கடிதத்தில் அசோக்குமார் மனைவி பெயரில் கட்டி வரும் மிகப்பெரிய பங்களா வீட்டை முடக்கி உள்ளதாகவும் சோதனை முடியும் வரை அமலாக்க துறையின்அனுமதி பெறாமல் சொத்துக்களை வேறு யாருக்காவது விற்கவுவோ அல்லது கைமாற்றவோ கூடாது என்று அந்த நோட்டீஸில் இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதன் பின்னணியை விசாரிக்கும்போது சில தகவல்கள் கிடைத்தன, அதாவது ரெய்டுக்கு வரும் சமயம் வருமானவரித்துறை அதிகாரிகள் மீது அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஆட்கள் அத்துமீறியதும் ஒரு காரணம் என்றும் கூறப்படுகிறது. வருமானவரித்துறை அதிகாரிகள் மீது கை வைத்தால் என்ன நடக்கும் என்பதை வருமானவரித்துறையினரும் அமலாக்க துறையினரும் செந்தில் பாலாஜி தரப்பிற்கு சரியான பாடம் புகட்டி உள்ளார்கள் என்று தகவல்கள் கூறுகின்றனர்.