இன்றைய சினிமா உலகில் இசைஞானி இளையராஜா என்றால் தெரியாதவர்கள் யாரும் கிடையாது அந்த அளவிற்கு பிரபலமான இசைஞானிக்கு மூன்று பிள்ளைகள் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா மற்றும் பவதாரணி. இந்த மூவரில் யுவன் சங்கர் ராஜா மற்றும் பவதாரணி இருவருமே இசை உலகில் வெற்றி கண்டவர்கள் பவதாரணி ஆரம்ப காலத்தில் பாடல்கள் பாடுவதில் நாட்டம் இருப்பதாக தனது தந்தையான இளையராஜா உடன் தெரிவித்த பொழுதும் அவர் பலமுறை அதற்கு மறுப்பு தெரிவித்து வந்துள்ளார் பிறகு பவதாரணிக்கு இசையில் இருந்த ஈடுபாடை கண்டு திரைப்பட பாடல் பாடுவதற்கு அனுமதி அளித்தார் இதனை அடுத்து திரைப்படங்களில் 30 பாடல்களுக்கு மேல் பவதாரணி பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதோடு 10 படங்களுக்கு இசையமைத்துள்ளார். இதன் மூலம் ரசிகர் பாட்டாளத்தை கொண்ட பவதாரணி தனது தனிப்பட்ட வாழ்க்கையில் மிக சந்தோஷமாகவும் செல்ல பிள்ளையாகவும் நல்ல மனைவியாகவும் செல்வந்தராகவும் இருந்துள்ளார்.
இப்படி பிரபலங்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வந்த பவதாரணி திடீரென்று கடந்த 3 தினங்களுக்கு முன் உயிரிழந்தார். பாடல்கள் மூலம் அனைவரது மனதை வருடும் வகையிலும் கஷ்டத்தை மறக்கும் வகையிலும் பாடும் பவதாரணி திடீரென்று உயிரிழந்தது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை அடுத்து பவதாரணி குறித்த வீடியோக்களும் பதிவுகளுமே சமூக வலைதளத்தை வைரலானது திரையுலகினர் பலர் பவதாரணி உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்த விட்டு சென்றனர். நடிகர் சிம்புவும் பவதாரணி இறுதி சடங்கில் முழுமையாக கலந்து கொண்டதும் செய்திகளில் பரபரப்பாக வெளியானது. இந்த நிலையில் பவதாரணி எப்படி திடீரென்று இறந்தார் அவருக்கு என்ன ஆயிற்று? எந்த காரணத்தினால் இப்படி நடந்தது என பல கேள்விகள் மற்றும் தேடல்கள் சமூக வலைதளத்தில் வைரலானதை அடுத்து பவதாரணி தன் உடல் நலத்தின் மீது காட்டி அலட்சியமே அவரது உயிரைப் பறித்துள்ளது என்று கூறப்படுகிறது. அதாவது கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென்று பவதாரணிக்கு கல்லீரலில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது அதனை அடுத்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்தார்.
இதற்கு அடுத்ததாகவே பல நாட்களாக தீராத வயிற்று வலி பவதாரணிக்கு ஏற்பட்டுள்ளது ஆனால் அதனை பெரிது படுத்தாமல் அப்போதைக்கு அந்த வலியை தீர்ப்பதற்கு பல மாத்திரைகளை எடுத்துக் கொண்டுள்ளார் இதுவே தற்பொழுது பவதாரணி இறப்பிற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. ஒரு கட்டத்தில் தனது உடல் எடையை இழக்க ஆரம்பித்த பவதாரணி எழுந்து கூட நிற்க முடியாமல் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்பொழுதுதான் தெரிய வருகிறது பவதாரணிக்கு நான்காம் நிலை புற்றுநோய் ஏற்பட்டுள்ளது என்று!. இதனை அடுத்து இலங்கையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த பவதாரணி கடந்த ஜனவரி 25 ஆம் தேதி அன்று உயிரிழந்தார். இப்படி பவதாரணியின் உயிரிழப்பிற்கு அவர் அலட்சியமே காரணமாக அமைந்துள்ளது தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பண வசதியில் எந்த ஒரு குறைபாடும் இன்றி இருந்த போதிலும் பவதாரணி உடல்நிலை குறித்து தெரியாமல் இப்படி உயிரிழந்திருக்கும் சம்பவம் எந்த நேரத்தில் யாருக்கும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் அதனால் நமக்கு எதுவும் ஆகாது என்ற நம்பிக்கையில் அடிக்கடி ஏற்படும் தலைவலி வயிற்று வலி போன்றவற்றிற்கு நாமே மருந்து எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதை இந்த சம்பவம் அழுத்தமாக கூறியுள்ளது.