Cinema

லோகேஷ் கனகராஜ் டார் டாராக கிழித்துவிட்ட எஸ் ஏ சி! காரணமே வேறயாமே...?

sac, lokesh kanagaraj
sac, lokesh kanagaraj

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பில் லோகேஷ் நாகராஜ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் லியோ! இந்த திரைப்படத்தில் திரிஷா, சஞ்சய்தத் மற்றும் அர்ஜுன் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். விக்ரம் இரண்டாம் பாகத்தை லோகேஷன் கனகராஜ் எடுத்த பிறகு தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத ஒரு இயக்குனராக மாறினார் இதனை அடுத்து விஜய் நடிப்பில் லியோ என்ற படத்தை அவர் எடுக்க ஆரம்பித்த பொழுது லோகேஷ் கனகராஜ் மீது இருந்த எதிர்பார்ப்பு இன்னும் கூடியது அதே சமயத்தில் விஜய் ரசிகர்கள் மத்தியில் லியோ படத்தின் எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றது இதற்கிடையில் லியோ படபிடிப்பு குறித்த எந்த ஒரு ரகசிய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளிவராமல் இருந்ததும் ரசிகர்கள் மத்தியில் லியோ படத்தின் மீது அதிகம் இருந்து.


ஆனால் படத்தின் டிரைலர் வெளியான பிறகே படம் முழுவதும் ஆக்ஷன் காட்சிகள் மற்றும் வைலன்ஸ் நிறைந்த காட்சிகள் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து திரையரங்குகளில் லியோ திரைப்படம் வெளியானதற்கு பிறகு வசூல் ரீதியாக லியோ திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகிவிட்டது என்று கூறப்பட்டது ஆனால் இந்த திரைப்படம் பல விமர்சனங்களை பெற்றது மேலும் விஜய் ரசிகர்கள் மத்தியில் லியோ திரைப்படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை!  இந்த நிலையில், விஜய் தந்தையான எஸ் ஏ சந்திரசேகர் லியோ படத்தை டார் டாராக கிழித்த தொங்க விட்டுள்ளார். தமிழ் திரையுலகில் வெற்றிகரமான இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் எழில் அவர்கள் கோலிவுட்டில் 25 ஆண்டுகளில் நிறைவு செய்வதை கொண்டாடும் விதமாக சென்னையில் கோலாகலமாக எழில் 25 என்கின்ற விழா ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த விழாவில் தமிழ் திரை உலக சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர் அதேபோன்று பிரபல இயக்குனரான எஸ்.ஏ சந்திரசேகர் கலந்து கொண்டு மேடையில் பேசினார்.

அப்பொழுது, சமீபத்தில் ஒரு திரைப்படம் பார்த்துவிட்டு அந்த படத்தின் இயக்குனருக்கு போன் செய்து பாராட்டினேன், அதாவது முதல் பாதி சூப்பர் சார் ஒரு படம் எப்படி பண்ணனும் என்று உங்களிடம் தான் கத்துக்கணும் என்றேன் பிறகு இரண்டாம் பாதி என்ன சார் என்று அந்த இயக்குனர் என்னிடம் கேட்ட பொழுது இரண்டாம் பாதியில் நீங்கள் வைத்துள்ள காட்சியில் இந்த மதத்தின் இந்த நம்பிக்கை எல்லாம் கிடையாது சார் ஒரு தகப்பனே தன் பிள்ளையை கொள்வதெல்லாம் நல்லா இல்லைன்னு சொன்னேன், நான் இத சொன்னதுமே அவர் நான் சாப்பிட்டுட்டு இருக்கேன் சார் அப்புறம் கூப்பிடுறேன் அப்படின்னு சொல்லிட்டு வச்சுட்டார். அதுக்கப்புறம் இன்னும் அவர் எனக்கு கூப்பிடவே இல்லை. அதே மாதிரி இந்த படம் ரிலீஸ் ஆனதும் எல்லாரும் வச்சு செஞ்சாங்க, நான் கூறிய அதே விமர்சனத்தை தான் எல்லாரும் கூறினார்கள், அவர்களுக்கெல்லாம் விமர்சனங்களை தாங்கிக் கொள்வதற்கு தைரியம் இல்லை! என்று விஜயின் தந்தையான எஸ் ஏ சந்திரசேகர் தன் மகன் நடித்த லியோ படத்தை குறித்தும் அதை இயக்கிய லோகேஷ் கனகராஜை குறித்தும் மேடையில் பேசி லியோ படம் குறித்த விமர்சனத்தை முன் வைத்தார்.. இப்படி விஜய் குறித்து எஸ்.ஏ.சி பேசியதற்கு காரணம் விஜய் மக்கள் இயக்க தலைவர் புஸ்ஸி ஆனந்த்தான் காரணம் என சில சினிமா விமர்சகர்களால் கூறப்பட்டுவருகிறது. காரணம் புஸ்ஸி ஆனந்த் வருகைதான் விஜயை தன்னிடம் இருந்து பிரித்துவிட்டதாக எஸ்.ஏ.சி நம்புவதாக சில விமர்சகர்கள் கூறுகின்றனர்.