பாட்னாவில் சேர்ந்த பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஒன்பது முறை பீகாரின் முதல்வராக இருந்து வருகிறார். இவர் 2019ல் நடைபெற்ற தேர்தலில் பாஜக தலைமையில் ஆட்சி பொறுப்பை ஏற்றார் ஆனால் 2022 ஆம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணியில் இணைந்தார். அன்றிலிருந்து ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணியில் இருந்து வந்த நிதிஷ்குமார் பாஜகவை எதிர்க்கும் வகையில் நாட்டில் உள்ள அனைத்து எதிர்கட்சிகளை ஒன்றிணைத்து ஒரு கூட்டணியை அமைத்ததில் முக்கிய பங்காற்றினார்! ஏனென்றால் IND கூட்டணி அமைவதற்கு முதல் காரணமாக இருந்ததும் நிதீஷ் குமார் அதோடு அந்த கூட்டணியின் முதல் கூட்டம் பீகார் நடைபெறுவதற்கு ஒருங்கிணைப்பாளராகவும் நிறுவனராகவும் இருந்தவர் பீகார் முதல்வர் நிதிஷ்குமார்!
இதனை அடுத்து தொடர்ச்சியாக கடந்த ஒன்றரை வருடங்களாக ராஷ்ட்ரியதினதா தளத்தின் கூட்டணியிலிருந்து வந்த நிதிஷ்குமார் தற்போது திடீரென்று பாஜகவில் இணைந்துள்ளார். இதற்கு முக்கிய காரணங்களாக, IND கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒவ்வொன்றும் தேர்தல் குறித்து நடவடிக்கைகளில் ஈடுபடுவதை விட தங்களுக்குள் இருக்கும் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வதிலும் பாஜகவை எதிர்ப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளனர் என்றும், ஐந்து மாநிலங்களின் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்து ஒட்டுமொத்த IND கூட்டணியின் தோல்வி அடைய வைத்தது கூட்டணி கட்சிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது என்றும் கூறப்பட்டது. இதற்கு முக்கிய காரணமாக இருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தை கூட்டணியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாகவும் ஆனால் அந்த வலியுறுத்தலுக்கு முடிவை எட்டாமல் இன்னும் இழுபறையில் இருந்து வருவதாகவும் தேர்தல் குறித்த ஒரு நிலைப்பாட்டில் IND கூட்டணி கட்சி தலைமைகள் இல்லை என்றும் அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டது.
அதே சமயத்தில் பாஜக தலைமையில் பிரதமர் நரேந்திர மோடி மத்தியில் ஆட்சிப் பொறுப்பை சிறப்பாகவும் உலக நாடுகள் மத்தியில் இந்தியாவை பல மடங்கு உயர்த்தியும் கொண்டுவந்துள்ளார் அதனால் மக்கள் மத்தியில் பிரதமருக்கு இருக்கும் செல்வாக்கும் தற்போது அதிகரித்துள்ளது அதுமட்டுமின்றி ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜகவின் செல்வாக்கு தற்போது கடந்த முறை விட அதிகரித்துள்ளது என்பதையும் உணர்ந்த நிதிஷ்குமார் தற்பொழுது மீண்டும் பாஜகவை இணைந்து பீகார் முதல்வராக பதவி ஏற்றுள்ளார். இதனை அடுத்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய நிதிஷ்குமார் முன்பு பாஜக உடன் கூட்டணியில் இருந்தோம் தற்பொழுது மீண்டும் வந்துள்ளோம், இப்பொழுது எங்கள் கட்சியினர் மீண்டும் எங்களிடமே வந்து விட்டதாக உணர்கின்றனர் இனி அங்கே இங்கே என்று போக வேண்டிய கேள்வியே இல்லை என்று தெரிவித்தார்.
ஆனால் நிதீஷ் குமாரின் இந்த திடீர் கட்சி தாவலுக்கு IND கூட்டணி மத்தியில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. அதாவது காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜூன கார்கே, நிதிஷ்குமார் அணி மாறுவார் என்று எங்களுக்கு முன்பே தெரியும் என தெரிவித்திருந்தார். இதோடு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆன ஜெயராம் ரமேஷ், அடிக்கடி அணியை மாற்றிக் கொள்ளும் நிதீஷ்குமாரின் இந்த துரோக செயலை பிஹார் மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார் என்று தனது சமூக வலைதளத்தில் குறிப்பிட்டு இருந்தார். இவரது வரிசையில் லாலு பிரசாத் மகளான ரோகினி ஆச்சார்யா தனது சமூக வலைதள பக்கத்தில், மீண்டும் குப்பை தொட்டிக்குள் குப்பை செல்கிறது, குப்பைத்தொட்டியில் இருந்து வரும் துர்நாற்றத்தால் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று பதிவிட்டு இந்த பதிவோடு குப்பை வண்டி ஒன்றையும் இணைத்து பதிவிட்டு நிதிஷ்குமாரின் செயலுக்கு விமர்சனத்தை முன் வைத்தார்.