24 special

சென்னையில் ஓரின சேர்க்கையாளர் அட்டுழியம்...!

highcourt
highcourt

உலகம் முழுவதும் இருக்கும் பாலின வேறுபாடுகள் ஆண் பெண் மற்றும் திருநங்கைகள் என்று வரையறுக்கலாம் ஆனால், இதில் புதிதாக மற்றொரு ஒரு பாலின இனமும் தற்பொழுது ஆங்காங்கே உருவெடுத்து வருகிறது. ஒரே பாலினத்தவர் மீது கொண்ட ஈர்பால் இருவரும் காதல் வயப்பட்டு தொடர்பில் இருந்து வருவதே இந்த புதிய வகை பாலினம். அதாவது ஒரு ஆண் மற்றொரு ஆணையும் ஒரு பெண் மற்றொரு பெண்ணையும் காதலித்து உறவில் இருப்பது ஓரினச் சேர்க்கை என்று கூறப்படுகிறது. இந்த உறவின் திருமணத்திற்கு முதன்முதலாக நெதர்லாந்து நாடு 2001 சட்டப்பூர்வ அனுமதியை வழங்கியது. மேலும் ஆசிய நாட்டை பொறுத்த வரையில் ஓரினச் சேர்க்கையின் திருமணத்தை சட்டபூர்வமாக அங்கீகரித்த முதல் நாடாக தைவான் விளங்குகிறது. இப்படி அமெரிக்கா பிரிட்டன் கோபா ஸ்விட்சர்லாந்து ஆஸ்திரியா டென்மார்க் ஜெர்மனி பின்லாந்து பிரான்ஸ் அயர்லாந்து போன்ற 34 நாடுகள் ஓரினச்சேர்க்கை திருமணங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.


இதே போன்ற வழக்கம் தற்பொழுது இந்தியாவிலும் ஆங்காங்கே நடைபெற்று வருவதாக பேசப்படுகிறது இதனை அடுத்து  இது குறித்த வழக்கும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. இந்த விசாரணையின் முடிவாக 2009 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் டெல்லி உயர் நீதிமன்றம் ஓரினசேர்க்கை சட்டவிரோதமானது அல்ல என்றும், இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 377 படி ஒரே பாலினத்தைச் சேர்ந்த இருவர் விரும்பத்துடன் தனிமையில் உறவை வைத்துக் கொள்வது குற்றமல்ல என்றும் தீர்ப்பளித்தது.ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து பல்வேறு தரப்பிலிருந்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடுகள் செய்யப்பட்டது. அதற்குப் பிறகு கடந்த 2013 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் ஓரின சேர்க்கை குற்றம் என்றும் இந்த குற்றத்தில் ஈடுபடுவோர் ஆயுத தண்டனைக்கு வித்திடுவார்கள் என்றும் தீர்ப்பளித்ததோடு இந்திய தண்டனைச் சட்டம் 377ஐ நீக்குவது குறித்து மத்திய அரசே முடிவு செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால்  இந்த தீர்ப்புக்கு எதிராக பல திருநங்கைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

ஆனால் இந்த ஓரினச் சேர்க்கையால் பல பெண்கள் மற்றும் ஆண்கள் தனது தோழன் மற்றும் தோளின் மீது காதல் வயப்பட்டு வருகின்றனர். இந்த செயல் சட்டத்தால் எதிர்க்கப்படுகிறது என்றாலும் எந்த ஒரு நபருக்கும் இதில் பாதிப்பு ஏற்படுத்து விடக்கூடாது என்பது பொதுவாக முன்வைக்கப்படும் கருத்து ஆனால் சென்னையில் இதே ஓரினச்சேர்க்கையால் நடந்த ஒரு கோர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லோகேஷ் மற்றும் வாஞ்சிநாதன் என்ற இளைஞர்கள்  சென்னை அம்பத்தூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர். இவ்விருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஆனால் கடந்த எட்டாம் தேதி சென்னை நொளம்பூர் உள்ள தங்கும் விடுதியில் இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளது செய்தி சென்னை முழுவதும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 

இதனை அடுத்து இது குறித்து விசாரித்த போலீஸ் அதிகாரிகள், லோகேஷின் கழுத்தை வாஞ்சிநாதன் தான் நெரித்து கொலை செய்து பிறகு அவரும் தூக்கிட்டு தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இதன் பின்னணியில் கடந்த மூன்று ஆண்டுகளாக இருவரும் ஓரினச்சேர்க்கை ஈடுபட்டு வந்துள்ளதால் இவ்விருவரின் பெற்றோர்களும் கண்டித்துள்ளனர் இருப்பினும் இவர்கள் இதே நிலையில் இருந்ததால் லோகேஷன் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்வதற்கு பெண் பார்க்க தொடங்கியுள்ளனர். இதனால் லோகேஷ் விலக ஆரம்பிக்க வாஞ்சிநாதன் லோகேஷ்சை கொன்றதாகவும் கூறப்படுகிறது. ஓரினச்சேர்க்கையை நாட்டில் குற்ற செயலாக பார்க்கப்படும் நிலையில் இப்படி ஓரினச்சேர்க்கையால் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.