கொரோன காலத்திற்கு முன்பாக தமிழகத்தின் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட ஒரு விவகாரம் என்றால் திமுகவின் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இருக்கிறதா என்ற குற்றச்சாட்டு தான்! அதோடு முரசொலி இடம் பஞ்சமி நிலத்தில் தான் இருக்கிறதா என்ற விசாரணையை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் கையில் எடுத்ததோடு விசாரணையை தொடர்ந்தது. மேலும் பாஜக நிர்வாகி சீனிவாசனும் முரசொலியின் மூலபத்திர விவகாரத்தில் முழுமையாக இறங்கியதால் மூல பத்திர வழக்கு மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் 2020 ஆம் ஆண்டு ஜனவரியில் ஆஜரான திமுக வழக்கறிஞர் வில்சன், முரசொலி அறக்கட்டளை அலுவலகம் அஞ்சுகம் பதிப்பகத்தாருக்கு சொந்தமானது அதில் முரசொலி அலுவலகம் வாடகைக்கு தான் இருப்பதாக தெரிவித்தார். ஆனால் அஞ்சுகம் பதிப்பகத்தார் முரசொலி அலுவலகம் இருக்கும் இடத்தில் 50% பங்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களின் மனைவியின் பெயர் இருப்பதாக கூறினார். மேலும் இந்த தகவல் திருவாரூர் தேர்தலில் போட்டியிட்ட பொழுது அங்கு தாக்கல் செய்யப்பட்ட பிராமண பத்திரத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்தது.
ஆனால் இந்த புகார் மீதான விசாரணைக்கு எதிராகவும் அறக்கட்டளை நிலம் தொடர்பாக விசாரிக்க அதிகாரம் இல்லை என்றும் சொத்துக்களின் உரிமை தொடர்பான விவகாரம் என்பதால் எஸ்சி எஸ்டி ஆணையம் இதனை விசாரிக்க முடியாது என்றும் திமுக நிர்வாகியும் முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலராக இருக்கும் ஆர்எஸ் பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதனை அடுத்து இந்த வழக்கு மீதான விசாரணையில் முரசொலி அறக்கட்டளை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், அரசு தரப்பில் முரசொலி அறக்கட்டளை அலுவலகம் அமைந்துள்ள நிலம் பஞ்சமி நிலம் அல்ல என்று அறிக்கை அளிக்கப்பட்ட பிறகும் திடீர்னு இந்த புகார் நிலுவையில் உள்ளதாக கூறுகின்றனர் புகார் தரப்பிலும் பஞ்சமி நிலம் என்பதற்கான ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை! அரசியல் காரணத்திற்காகவே தேசிய எஸ்சி எஸ்டி ஆணையம் இந்த புகாரை நிலுவையில் வைத்துள்ளதாக குற்றம் சாடினார்.
இவரை அடுத்து தேசிய எஸ்சிஎஸ்சி ஆணையம் தரப்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் சுந்தரேசன் ஒரு நிலத்தின் உரிமையாளரை முடிவு செய்வதற்கு பட்டா மற்றும் விற்பனை பத்திரம் இறுதியான ஆதாரம் அல்ல என்று வாதித்தார், இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி சுப்ரமணியம் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் வருவாய் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களும் முரண்பாடாக இருப்பதாகவும் இதனால் இந்த வழக்கு நீதிமன்றம் விசாரணை செய்ய முடியாது என்றும் இதன் உண்மையை கண்டறிய தேசிய எஸ்சி எஸ்டி ஆணையம் விசாரணை நடத்த வேண்டிய அவசியம் எனவும் இந்த வழக்கில் விசாரணைக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
முரசொலி அலுவலகத்திற்கு பாதிப்பு ஏற்படும் என தெரியவந்த நிலையில் தற்பொழுது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது, முரசொலி அலுவலகம் அமைந்திருக்கும் அதே வளாகத்திற்குள் தான் ரெட் ஜெயன்ட் மூவிஸ் அலுவலகமும் அமைந்திருக்கிறது. ஒருவேளை முரசொலி அலுவலகத்தில் வழக்கு விசாரணையில் ஏதேனும் சீலோ, அந்த இடத்தில் நீதிமன்றம் தரப்பில் ஏதேனும் நடவடிக்கை எடுத்தால் ஒட்டுமொத்த ரெட் ஜெயன்ட் மூவிஸ் அலுவலகத்தையும் சேர்த்தே நடவடிக்கை எடுக்கப்படும் ஆக மொத்தம் ஸ்கெட்ச் என்பது முரசொலிக்கு மட்டுமல்ல ரெட் ஜெயன்ட்டுக்கும் சேர்த்து தான் என்று அரசியல் விமர்சனங்கள் எழுந்துள்ளது.